இலங்கை

“வாள்வெட்டில் ஈடுபட்டது முன்னாள் போராளிகள் என்பது உண்மைக்குப் புறம்பானது !” -சட்டத்தரணி

அண்மையில் யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் காவல்துறையினர்மீது தாக்குதலை மேற்கொண்டவர்கள் முன்னாள் போராளிகள் என காவல்துறையினர் தெரிவித்திருப்பது உண்மைக்குப் புறம்பானது என சட்டத்தரணியும், சமூக செயற்பாட்டாளருமான சுகாஸ் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அவர் தனது முகநூலில் பொலிஸாரை வாளால் வெட்டியமை தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்ட இருவரில் எவரும் முன்னாள் போராளி இல்லை என்பதை அவர்களில் ஒருவருக்கு ஆஜராகின்ற சட்டத்தரணி என்ற வகையில் பொறுப்போடு தெரிவிக்கின்றேன்…உண்மையான குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்…அப்பாவிகளின் கைதுகள் தடுக்கப்பட வேண்டும்…நீதிக்கான போராட்டம் தொடரும்… எனப் பதிவிட்டுள்ளார்.
அண்மையில், கொக்குவிலில் உந்துருளிகளில் வந்த 10இற்கும் மேற்பட்டோரால் இரண்டு காவல்துறையினர் வெட்டி படுகாயங்களுக்குட்படுத்தப்பட்டதாகவும், இதில் ஈடுபட்ட அனைவரும் முன்னாள் போராளிகள் எனவும் சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.