முன்னாள் போராளிகளை குறிவைக்கும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

Home » homepage » முன்னாள் போராளிகளை குறிவைக்கும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
முன்னாள் போராளிகளை குறிவைக்கும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிகின்றார்களோ அதேபோல் யுத்த பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது என கூறியிருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கையை நாம் கொண்டிருப்பதால் எது நடந்தாலும் இராணுவத்தின் ஒத்துழைப்பை கேட்க கூடாது என அது அர்த்தப்படாது என்றும் கூறியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர படையினர் களத்தில் இறக்கப்படுவார்கள் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர யாழில் கூறியிருந்தார்.

இந்த கருத்து தொடர்பாக கேட்ட போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளதாக ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன,

முப்படையினரையும் களமிறக்கப் போவதாக பொலிஸ் மா அதிபர் கூறவில்லை. பொலிசாருக்கு உதவியாக விஷேட அதிரடிப்படையினரையும், இராணுவத்தையும் வேண்டுமெனில் மக்கள் விருப்பப்பட்டால் களமிறக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.

அவரை தொடர்புகொள்ள தொலைபேசி இலக்கங்களையும் தந்துவைத்தார். யார் வேண்டுமானாலும் குற்றச்செயல்கள் பற்றி தமக்கு முறைப்பாடு செய்யலாம் என்றார். வடக்கிலிருந்து இராணுவ வெளியேற்றத்தை நான் இப்பொழுதும் கோருகின்றேன்.

ஆனால் குற்றங்கள் நடைபெறும் போது அவற்றைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது சட்டம், ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சரின் கடமையாகும். நேற்றைய தினம் நான் கூட்டத்தில் பேசும்போது பொலிஸ் மா அதிபருக்கு பின்வருமாறு கூறியிருந்தேன்.

´இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ அதே போல் யுத்த பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது. குற்றச் செயல்கள் எங்கு நடைபெற்றாலும் எமது எல்லா வளங்களையும் உள்ளேற்று அவற்றைத் தடுக்கவோ, உரிய விதத்தில் நடவடிக்கை எடுக்கவோ வேண்டும்.´

எனவே இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் ஒருவர் எது நடந்தாலும் அவர்களுடைய ஒத்துழைப்பைக் கோரக்கூடாது என்று அதற்கு அர்த்தமில்லை. அப்படியானால் எது நடந்தாலும் நாங்கள் சும்மா இருக்க வேண்டும் என்று பொருள்படும்.

மேலும் இராணுவத்தை அவசரத்திற்கும் அழைக்க கூடாது, அவர்கள் களமிறக்கப்படுவதை எதிர்க்க வேண்டும் என கேட்பவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமானவர்களாகவே இருப்பர் எனவும் விக்கினேஸ்வரன் கூறியுள்ளதாக ஊடக செய்திகளில் கூறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் களத்தில் இறிங்கியுள்ள முன்னாள் போராளிகளுக்கு மக்களின் ஆதரவு பெரிகிவருவதது வடமாகண முதலமைச்சருக்கும் தனது அரசியல் எதிர்காலதிற்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே அவரின் கூற்றுக்கள் அமைதுள்ளதாக அமைதுள்ளது.

Comments Closed

%d bloggers like this: