புலிகள் தொடர்பான ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்பின் விளைவுகள்.

Home » homepage » புலிகள் தொடர்பான ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்பின் விளைவுகள்.
புலிகள் தொடர்பான ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்பின் விளைவுகள்.

தமிழீழவிடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை தொடர்பாக அண்மையில் ஐரோப்பிய நீதிமன்றம் விடுத்த தீர்ப்பை தொடர்ந்து பல்வேறு தகவல்கள் உலகதமிழர்களிடம் உலாவுகின்றன. புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்லாமல் தமிழக தமிழர்களும் இந்த தீர்ப்பை தமிழீழவிடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளதாவும் கருதுகின்றனர். தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் ஐரோப்பிய ஒன்றியம் போன்று இந்தியாவும் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் எனவும் வேண்டுகின்றனர்.

ஆனால் ஐரோப்பிய நீதிமன்றம் புலிகள் மீதான தடையை நீகக்வில்லை. ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியதுமே ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் தொடர்பான தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தது. புலிகள் மீதான தடையானது எந்த ஒரு நீதிமன்றதாலும் விதிக்கப்பட்ட தடையல்ல. மாறாக ஐரோப்பிய அரசியல் தலைமைகளால் முடிவெடுக்கப்பட்ட ஒரு தடை.

ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்பிலும் புலிகளை ஐரோப்பிய ஓன்றியம் தடை செய்தது பிழையென குறிப்பிடவில்லை 2011 ஆன்டின் பின் புலிகள் எந்த குற்றங்களையும் செய்யவில்லை எனவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இந்த தீர்ப்பின் ஊடாக இந்த வழக்கை தொடர்ந்த புலிசாயம் பூசிக்கொண்டவர்களே நன்மையடையபோகின்றார்கள்.

தமிழீழவிடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பியஒன்றிய தடைக்கு எதிராக வழக்கு தொடருவது விடயமாக பல்வேறு மட்டங்களில் ஆராயப்பட்டிருந்தது குறிப்பாக டென்மார்க்கில் பல வழக்கறிஞர்களிடம் ஆலோசனைகள் பெறப்பட்டது. ஆனால் எல்லோருடைய ஆலோசனைகளும் ஐரோப்பிய ஓன்றிய தடைக்கெதிரான வழக்கில் புலிகளுக்கு ஆதரவான தீர்ப்பு வந்தாலும் அது ஐரோப்பிய ஒன்றயத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது எனவே இருந்தது. ஏற்கனவே ஐரோப்பிய நீதிமன்றம் குர்தீஸ் விடுதலை அமைப்பான PKK விற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியிருந்தமையும் அதை ஐரோப்பிய ஒன்றிம் ஏற்க்காமையும் வழக்கறிஞர்களால் எடுத்துக்கூறப்பட்டிருந்தது. PKK வின் IS இற்கு எதிரான போராட்டத்திற்கு ஐரோப்பிய நாடுகள் சகல உதவிகளை செய்துவரும் வேளையிலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தடையிருப்பதுடன் அண்மையில் குர்தீஸ புலம்பெயர் பெண் ஒருவர் PKK விற்கு உதவியதற்காக டென்மார்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்தில் கட்டாய நிதி சேகரிப்பில் ஈடுபட்டமையாலும் புலம்பெயர் தமிழர்கள் மீது வன்முறை பிரயோகித்தமைகாகவும் கைதுசெய்யப்பட்டிருந்த தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை செர்ந்தவர்களிற்காக வாதாடிய வழக்கறிஞரின் ஆலோசனையிலேயே ஐரோப்பிய நீதிமன்றில் புலிகளின் தடைக்கெதிராக வழக்கு தொடரப்பட்டது. நெதர்லாந் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்தவர்களுக்கு நெதர்லாந்து நீதிமன்றம் பல வருட சிறைதண்டனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஓன்றிய தடைக்கெதிரான வழக்கை புலிகளே தொடரமுடியும் என்பதால் டென்மார்கில் நிதி சேகரிப்பதர்காக அமைக்கப்பட்டிருந்த அமைப்பின் பெயரில் புலிகள் என இருந்தமையை காரணமாக கொண்டு வழக்கு நெதர்லாந் வழக்கறிஞரால் பதியப்பட்டது.

புலம்பெயர் நாடுகளில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பே புலிகளுக்கான நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போதும் டென்மார்க்கில் ஆரம்பத்தில் தமிழர் நலம்புரி சங்கம் எனவும் பின்பு எல்ரிரி டென்மார்க் (LTTE DENMARK) என்ற அமைப்பும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தது. ஆனால் இது தமிழீழவிடுதலைப்புலிகள் அல்ல புலம்பெயர் தமிழர்களால் நடாத்தப்பட்ட ஒரு தன்னார்வு அமைப்பென்றே நகரசபையில் பதியப்பட்டிருந்தது.

புலம்பெயர்நாடுகளில் வன்முறை மற்றும் கட்டாய நிதிசேகரிப்பில் ஈடுபடுவது தொடர்பாக ஐரோப்பிய தடைவருவதற்கு முன் 2005ம் ஆண்டு அனைத்துலக மனிதவுரிமை அமைப்பு விடுத்த அறிக்கை தொடர்பாக அனைத்துலக ஊடகவியளாலர்கள் கேள்வி கேட்டபோது அப்போதய அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்கள் கருத்து கூறும் போழுது

புலம்பெயர்நாடுகளில் நிதிசேகரிப்பில் ஈடுபடுபவர்கள் புலம்பெயர்தமிழர்களே என்றும் அவர்கள் தமிழீழவிடுதலைப்புலிகள் இல்லை எனவும் நிதிசேகரிப்பவர்கள் சட்டங்களை மீறினால் குறிப்பிட்ட நாடுகளே அவர்களின் சட்டங்களுக்கமைய தண்டிக்கலாம்

என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் நெதர்லாந்து வழக்கறிஞரால் தமிழீழவிடுதலைப்புலிகள் என வர்ணிக்கபட்டு டென்மார்கை சேர்ந்த குட்டி, விடுதலை அல்லது மயூரன் என அழைக்கப்படும் தே…. செ…. அவர்களுடன் மேலும் இருவர் தம்மை விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என தமக்கு தாமே புலிசாயம் பூசிவ ழக்கை பதிவு செய்தனர். ஆரம்பத்தில் இந்த வழக்கு தொடர்பாக பல புலம் பெயர் தமிழர்கள் இணைந்து செயல்பட்டதுடன் நிதிபங்கழிப்பையும் வழங்கியிருந்தனர். அவர்களில் சுவிர்ஸ்லாந்தை சேர்ந்த லதன் சுந்தரலிங்கமும் ஒருவர். ஆனால் லதன் தமிழ்நெற் ஜெயச்சந்திரனின் பின்னணியில் செயல்பட்டமையால் குட்டி குழுவுடன் முரண்பட்டிருந்தார்.

ஏற்கனவே தமிழ் தேசிய சொத்துக்கள் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் கையகப்பட்டிருக்கமையில் இப்பொழுது ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்பானது விடுதலைப்புலிகளின் சகல சொத்துக்களையும் வழக்கை தொடர்ந்தவர்கள் கைப்பற்றுவதர்க்கு வழிகோலியுள்ளது. இந்த சொத்துக்கள் தமது இளமைகாலங்களை தொலைத்து இரத்தமும் சதையுமாக தமிழினத்தின் விடுதகை;காக அர்பணிப்புடன் போராடிய எமது போராளிகளுக்கே உரித்துடையது. முன்னால் போராளிகளின் மறுவாழ்விற்கே பயன்பெறவேண்டும். ஆனால் இப்பொழுது ஒரு சில தனிநபர்களின் சொகுசு வாழ்விற்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் சென்றடையப்போகும் அபாயம் தோன்றியுள்ளது.

ஆகவே முன்னால் போராளிகள் விடுதலைப்புலிகளின் பெயரை தன்னிச்சையாக தமதாக்கியவர்கள் மீதும் நெதர்லாந்து வழக்கறிஞர் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கோண்டு தமிழீழ தேசிய சொத்துக்களை மீட்டு; முன்னால் போராளிகளினதும் மாவீரர் குடும்பங்களினதும் மறுவாழ்விற்கு உரியமுறையில் பயன்படுத்தவேண்டும்.

தமிழர் ஒருகிணைப்பு குழுவினால் கையடக்கப்படுத்தப்பட்டுள்ள தமிழ் தேசிய சொத்துக்களின் பங்கு தாரர்களான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கென கூறி இப்பொழுது குட்டி குழுவினர் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தாயகத்தில் தமிழர்களின் அரசியல் தலைமையை முள்ளிவாய்காலில் தலைமையால் எடுக்கப்பட்ட ஆயுத மௌனிப்பை ஏற்று ஜனநாயக வழியில் தமிழர்களின் உரிமைகளுக்காக போராடும் ஜனநாயக போராளிகளுக்கு தமிழ்மக்கள் வழங்குவதே புலிகளின் பெயரில் தேசிய சொத்துகளை அனுபவிக்கும் புல்லுருவிகளுக்கும் அவர்களின் நிதியில் தாயகத்தில் செயல்படும் சுயநல அரசியல்வாதிகளுக்கும் தக்கபாடமாக அமையும்.

Comments Closed

%d bloggers like this: