மேலும் 30 முன்னாள் போராளிகள் ஜனநாயகப் போராளிகளுடன் இணைத்துகொண்டனர்

Home » homepage » மேலும் 30 முன்னாள் போராளிகள் ஜனநாயகப் போராளிகளுடன் இணைத்துகொண்டனர்
மேலும் 30 முன்னாள் போராளிகள் ஜனநாயகப் போராளிகளுடன் இணைத்துகொண்டனர்

நேற்றைய தினம் ஜனநாயகப் போராளிகளுடன் 30வரையான முன்னாள் போராளிகள் தம்மை இணைத்துக்கொண்டனர்!

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புரை செயலாளர் திரு.சு.கர்த்தகன் தலைமையில் நேற்றையதினம் வன்னியின் கனகராயன் குளம் கிராமத்தில் முன்னாள் போராளிகளுக்கான அவசர கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது தமிழர் தாயகத்தில் மீண்டும் போராளிகள் தலைமையிலான அரசியல் சக்தியை உருவாக்கவேண்டும் என்பதை போராளிகளிடம் வலியுறுத்திய திரு.சு.கர்த்தகன் அவர்கள், எமது மாவீரர்களின் கனவுகளை நனவாக்கவேண்டிய பொறுப்பும் கடப்பாடும் போராளிகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் உள்ளதென்பதை தெரிவித்ததுடன், முடியுமானவரை அனைத்து போராளிகளையும் தம்முடன் இணைந்து ஜனநாயக வழிதனில் தொடர்ந்து போராட முன்வருமாறும் போராளிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஜனநாயகப் போராளிகளின் வேண்டுகோளை தாம் மனசார ஏற்பதாகக்கூறி ஆண்கள்,பெண்கள் உள்ளடங்கலான சுமார் முப்பது வரையான முன்னாள் போராளிகள் நேற்றய தினம் ஜனநாயகப் போராளிகளுடன் தம்மை இணைத்துக் கொண்டார்கள்.

மேலும் எதிர்வரும் நாட்களில் தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய சகல கிராமங்களுக்கும் ஜனநாயகப் போராளிகள் தாம் விஜயம்செய்து தமது முன்னாள் போராளிகளை சந்தித்து தம்முடன் இணைக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

எனவே எமது முன்னாள் போராளிகள் அனைவரையும் தம்மை ஜனநாயகப் போராளிகளுடன் இணைத்து எதிர்வரும் அரசியல் களங்களில் புதியதோர் மாற்றத்தை தமிழர் தாயகத்தில் மட்டுமல்லாமல் புலம்பெயர் தேசத்திலும் தாம் ஏற்படுத்துவதன் ஊடாக, ஜனநாயகப் போராளிகள் தவிர்ந்த இனியொரு சக்த்தி அரசியல்ரீதியாக தமிழருக்கு தேவையில்லை என்ற மனோநிலையினை எமது மக்கள்மத்தியில் மாற்றியமைக்க எமது போராளிகள் அனைவரும் தாம் முன்வரவேண்டும் என்பதே தாயக மற்றும் புலம்பெயர் மக்களின் உண்மையான விருப்பமாகும்.

Comments Closed

%d bloggers like this: