இலங்கை தமிழ்

தமிழினத்தின் அனைத்து  துரோகிகளும்  ஒருங்கிணையப்போகும்  களமாக  அடுத்த தேர்தல்  அமையப்போவது  உறுதி -எல்லாளன்

கொலைபாதகன் மகிந்தவை நம்பி கொப்புத் தாவப்போகும் எதிர்கட்சி குரங்குகளை இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!

21ம் நூற்றாண்டின் தமிழரின் மாபெரும் எதிரியுடன் கைகோர்க்க காத்திருக்கும் தமிழனத்தால் வெறுக்கப்பட்ட அத்தனை துரோகிகளும்!

காலாவதியாகப்போகும் மைத்திறியின் போலியான நல்லாட்சி ஊடாக, போர்க்குற்றத்திலிருந்து காப்பாற்றப்பட்ட மகிந்த ராஜபக்ச எனும் கொடுங்கோலனின் அடுத்த வருகை இலங்கையில் இடம்பெறுவதற்கான ஏதுநிலையே இன்று அதிகமாக காணப்படுகின்றன.

மனிதாபிமானப் போர் என்றுகூறி சுமார் ஒரு இலட்சம்வரையான அம்பாவி தமிழர்களை மிகக் குறுகிய காலத்தில் கொன்றுகுவித்த ஒரு மாபெரும் மனித மிருகமாகா வர்ணிக்கப்படும் மகிந்த ராஜபக்ச எனும் மாகா பாதகனுடன் தம்மை நண்பர்களாக்கி தமிழினத்தை கூண்டோடு கைலாயம் அனுப்புவதற்காக இன்றுவரை தமிழர்களால் வெறுக்கப்பட்டுவரும் அனைத்து துரோகிகளும் தாம் இரகசியமாகவும், நேரடியாகவும் சென்று அவரை கைலாகு கொடுத்து அடுத்துவரும் தேர்தலில் முழுமையாக ஆதரிப்போம் என தாம் உறுதிமொழியும் கொடுத்துவிட்டார்கள்.

மேலும் நல்லாட்சி எனும் இலங்கை,இந்திய மற்றும் உலகத்தின் இராஜதந்திரம் உள்ளடக்கப்பட்ட ஒரு போலியான அரசியல் தலைமை மாற்றத்தின் ஊடாகவே மைத்திறியெனும் சாதாரண சிங்களவர் சமகாலத்தில் நல்லாட்சியில் அமர்த்தப்பட்டு தமிழர்களின் சிங்களத்தின்மீதான கோபங்கள் யாவும் தணிக்கப்பட்டு,ஐ.நா எனும் போலியான தலையீடொன்றை அறிமுகம்செய்து காலத்தை கடத்தி தமிழர்களை இனிவேண்டாம் எமக்கு எதுவும் என்ற விரக்தி நிலையை அவர்களுக்கு உருவாக்கி,மகிந்தவை போர்க்குற்றத்திலிருந்து காத்தவர்கள் மேற்குறிப்பிட்ட கூட்டுச் சதியாளர்களே.

இந்த சதிவலையை இலங்கை அரசிற்கு முன்நின்று பின்னிக் கொடுத்த மாபெரும் சூத்திரதாரி இந்தியாதான் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
ஏனென்றால் இலங்கைக்கான இந்தியாவின் 100%வீதமான இரகசிய ஒத்துழைப்புக்கள் ஊடாகத்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் போரியல் ரீதியாக நசுக்கப்பட்டு அழிக்கப்பட்டார்கள் என்பதை இறுதிப் போர்வரை நின்றுவந்த எமது மக்களின் மிகவும் உறுதியான கூற்றாகும்.

மேலும் எமது மக்களின் கூற்றுத்தான் இவை என்பதற்கு அப்பால்,இறுதிவரை களத்தினில் நின்று போரிட்டுக்கொண்டிருந்த தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் உறுதியான கருத்துக்களும் இந்தியாவை மையப்படுத்தியே முள்ளிவாய்க்காலில் நின்று களமிட்டுக்கொண்டிருந்த தளபதிகளுக்கும், போராளிகளுக்குமான செய்திகளாக தலைவரால் சொல்லப்பட்டதென்பதும் நாம் அறிந்த நிதர்சனமான உண்மை.

உண்மையில் ஒருவேளை முள்ளிவாய்க்கால் போர்முனையில் இருந்து புலிகள் மீண்டெழுந்திருந்தால்,நிச்சையமாக புலிகளின் தலைமையின் முடிவென்பது இந்தியாவை தமது இனத்துக்கான பச்சை துரோகியாக பிரகடனம் செய்து அறிவித்திருப்பார் என்பதே களமுனைத் தகவல்களாகும்.

அத்தோடு மட்டுமல்லாமல், த.தே.கூட்டமைப்பாரை தமது இனத்துக்கான வரலாற்று துரோகிகளாகவும் பிரகடனப்படுத்தி அவர்களை தமிழர் தாயகத்தைவிட்டு விரட்டியடித்திருப்பார் என்பதும் இறுதிப்போர்வரை இருந்த எமது தலைவரினதும்,தளபதிகளினதும் மற்றும் போராளிகளினதும் உண்மையான நிலைப்பாடும் அதுவேயாகும்.

நிலமை இவ்வாறிருக்க இந்தியாவை நாம் அனுசரித்துத்தான் போகவேண்டுமென்ற அபத்தமான போக்கு ஒருபுறம் இருக்க, த.தே.கூட்டமைப்பாரை எமது தலைவர்தான் உருவாக்கினார், ஆகையினால் அவர்கள்தான் எமக்கான அரசியல் தலைமைகளாக இருக்கமுடியும் என்ற தவறான அர்த்தத்தில் எமது தமிழ்த் தேசிய சமூகம் தாம் தொடர்ந்தும் சிந்திப்பதானது, தமது தேசியத் தலைமைக்கு தாம் செய்யும் மாபெரும் துரோகமாகவே இவை கருதப்படும்.

இங்கே தமிழனுக்காக வந்துதவாத இந்தியாவையும், தன்னினத்துக்காக களத்தினில் ஒரு நொடிதன்னும் நின்றிராத பச்சை துரோகிகளான த.தே.கூட்டமைப்பாரையும் எமது தலைவர் முள்ளிவாய்க்காலின்பின்பும் தான் ஆதரித்து அரவணைத்திருப்பார் என்று எமது இனத்தவர்கள் யாராவது இனியும் சிந்திப்பீர்களானால், உங்களுக்கு எமது தேசியத் தலைவர் தொடர்பாக எதுவுமே தெரியாதென்பதே எமது வாதமாகும்.

உதாரணமாக கடந்த காலங்களில் எமது இனத்திற்கு எதிராக சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து ஒருதலைப்பட்சமாக இயங்கிய எமது இனத்தில்பிறந்த பச்சோந்தி அரசியல்வாதிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை கொடுத்த பரிசு என்பது மனித வெடிகுண்டும்,துப்பாக்கியின் ரவைகளும்,நேரக்கணிப்பு வெடிகுண்டுகளுமேயன்றி பொன்கம்பள வரவேற்புக்களல்ல.

இந்த உண்மை நிலையினை நாம் இன்று உணரத்தவறினால்,வரலாறு ஒருபோதும் எம்மை மன்னிக்காது.

மேலும் இலங்கையின் தற்போதைய அரசியல் களநிலவரப்படி மைத்திறி அரசாங்கத்தை கைவிட்டு மகிந்தவின் அரசாங்கத்தை வரவழைப்பதற்கான முயற்சியினை பூகோளரீதியாக பலரும் ஆதரிக்க தயாராக இருப்பதாகவே நம்பப்படுகின்றது.

இதற்கான காரணங்களாக குறிப்பாக இந்தியாவினதும், சீனாவினதும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான இலங்கைமீதான அதிக கரிசனைகளே எனலாம். இங்கே தற்போதைய மைத்திறி தலைமையிலான நல்லாட்சி அரசின் ஊடாக இந்த இரு நாடுகளுக்கும் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய எந்தவிதமான செல்வாக்குகளும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

எனவேதான் போரிலும்சரி,அரசியலிலும்சரி மகிந்த இராஜபக்சவின் ஆட்சி வருமாயின் இவ்விரு நாடுகளுக்கும் நிறைவான செல்வாக்கு இலங்கையில் கிடைக்கும் என்பதை ஏற்கனவே மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் அனுபவமாக கண்ட இந்த இரண்டு நாடுகளுக்கும் இது நன்கு தெரியும்.

அந்த அடிப்படையில் அடுத்துவரும் தேர்தலில் மகிந்தவை வரவேற்பதற்காக இவ்விரு நாடுகளும் தம்மை இப்பவே தயார்படுத்தும் நடவடிக்கையில் இரகசியமாக மகிந்தவை சந்தித்து கலந்துரையாடிவருகிறார்கள் என்பதே உண்மை.

இது ஒருபக்கமிருக்க,மகிந்தவை வரவேற்பதற்காக த.தே.கூட்டமைப்பு உட்பட EPDP டக்கிளஸ் அணி, ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி,கருணாவின் அணி,பிள்ளையான் அணி,EPRLFசுரேஸ் அணி,plotசித்தாத்தன் அணியென்று தமிழர்களுக்குள் புரையோடியிருக்கும் அத்தனை துரோக அணிகளும் மகிந்தவின் மறுவருகைக்காக தாம் வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறார்கள் என்பதே உண்மை நிலவரம்.

இந்த அபாயகரமான எதிர்கால அரசியல் சிலந்தி வலைக்குள் எமது தமிழ்த் தேசியம் அரசியல் ரீதியாக சிக்காமல் இருக்கவேண்டுமானால்,தமிழர் சார்பான உறுதியான அரசியல் அதிகார மாற்றம் ஒன்றை எமது தமிழர் தாயகத்தில் நாம் நிலைநிறுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும்.

எனவே தற்போதைய தமிழர்களின் அரசியல் சக்திகள் அனைத்தும் எதிரிகளின் காலில் விழுந்து தமது அரசியல் சுகபோகத்தை தக்கவைப்பதற்காக மட்டுமே போராடிவருகிறார்களேயன்றி, சிறிதளவேனும் இவர்கள் எமது உண்மையான தமிழ்த் தேசியத்திற்காக போராடவில்லை என்பதே யாரும் மறுக்கமுடியாத உண்மை.
ஆகவே எமக்கான உறுதியான அரசியல் சக்தியொன்றை எமது தாயகத்தில் போராளிகள்சார்ந்து நாம் நிலைநிறுத்தாதவரை தமிழருக்கான உறுதியான அரசியல் என்பது….???