போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவித்திட்டம் ஜனநாயகப் போராளிகளினால் ஆரம்பித்துவைப்பு!

Home » homepage » போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவித்திட்டம் ஜனநாயகப் போராளிகளினால் ஆரம்பித்துவைப்பு!
போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவித்திட்டம் ஜனநாயகப் போராளிகளினால் ஆரம்பித்துவைப்பு!

போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவித்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பித்துவைப்பு!
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் உதவித்திட்டங்களுக்கு அமைவாக, புலத்திலிருந்து பணியாற்றிவரும் ஜனநாயகப் போராளி ஒருவரின் நிதிப்பங்களிப்புடன் முதற்கட்டமாக போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட இருபது குடும்பங்கள் கிழக்குத் தாயகத்தில் இனங்காணப்பட்டு அவர்களுக்கான உலருணவுப்பொருட்கள் நேற்றையதினம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கு ஜ.போ.கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு.க.பிரபாகரன் தலைமைதாங்கினார். இந்நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு எமது தாய்மண்ணின் விடிவிற்காக களப்பலியாகிய மாவீரர்களுக்கும்,பொதுமக்களுக்குமாக இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிகழ்வினில் மட்டக்களப்பு ஆலைய குருக்களும்,பங்குத்தந்தை அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் ஜ.போ.கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் பலரும்,பெருமளவான பொதுமக்களும் இந்நிகழ்வினில் கலந்துகொண்டனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவுப் பொதிகளை மட்டு,அம்பாறை மாவட்டங்களின் இணைப்பாளர் திரு.க.பிரபாகரன் அவர்களும்,கட்சியின் பொதுச்செயலாளர் திரு.இ.கதிர் அவர்களும்,கட்சியின் கொள்கைப் பரப்புரை செயலாளர் திரு.சு.கர்த்தகன் அவர்களும், கட்சியின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் திரு.கே.நவமேனன் அவர்களும் மற்றும் கட்சிக்கான ஊடகப் பேச்சாளர் திரு.க.துளசி அவர்களும் வழங்கிவைத்தார்கள்.

மேலும் இறுதிப்போரினில் தன் கணவனை மாவீரனாக இழந்து ஒரு பிள்யையுடன் எவ்வித வருமானங்களுமின்றி மிகவும் அல்லலுற்ற அந்த மாவீரனின் குடுப்பத்திற்காக புலம்பெயர் ஜனநாயகப் போராளி ஒருவர் வழங்கிய சிறுதொகைப் பணமும் சமநேரத்தில் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வினைத்தொடர்ந்து ஜ.போ.கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடப்பட்டது.இதன்போது பாதிக்கப்பட்ட எமது மக்கள்சார்பாக புலம்பெயர் மக்களுக்கான செய்தியொன்றும் வேண்டுகோளாக முன்வைக்கப்பட்டது.

அதாவது தாயகத்தில் வலிசுமந்த மக்களாக தாம் இருப்பதாகவும், இருந்தும் எமக்கான நிரந்தர அரசியல் தீர்வையும், பலமொன்றையும் உருவாக்குவதற்காக எமது புலம்பெயர் மக்கள் தாம் ஜனநாயகப் போராளிகளை சகலவழிகளிலும் பலப்படுத்தி அவர்கள் ஊடாக எமக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுக்க ஒத்துழைக்க முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்கள்.

இதேவேளை புலம்பெயர் ஜனநாயகப் போராளிகளின் சார்பாகவும் தாயக மக்களுக்கான செய்தியொன்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது எமது தாயகத்தில் நாம் இருந்தபோது எமது மக்களாகிய உங்களின் சொல்லொணா வேதனைகளை நாம் அருகிருந்து அனுபவித்த அனுபவங்களாக நாம் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் என்றும் மறப்பதற்கில்லை’ என்றும் உங்களின் நினைவுகளே எங்களில் குடியிருக்கும்.

மேலும் எமது வடிவம்மாறிய அரசியல் பயணத்திற்கு உங்களின் தார்மீக ஆதரவினை நீங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளாகிய எமக்கு கொடுத்து எம்மை பலப்படுத்தி உங்களுக்கான நிரந்தரமான அரசியல் சக்தியை நீங்கள் உருவாக்கி பலம்பெறும் சந்தர்ப்பத்தில், உங்களுக்காக நாங்கள் இப்புலம்பெயர் தேசங்களில் இருந்து தாராளமான உதவித்திட்டங்களை நடைமுறைப்படுத்தி உங்களை என்றும் பாதுகாப்போம் என்று தெரிவித்துள்ளார்கள்.

இதனைத்தொடர்ந்து தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களுக்குமான பொதுக்கூட்டமும்,ஊடக சந்திப்பும் இடம்பெற்றிருந்ததென்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு
ஜ.போ.கட்சி
“தமிழர் தாயகம்”

Comments Closed

%d bloggers like this: