உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தரவை மாவீரர் துயிலுமில்ல மாபெரும் சிரமதானம்!

Home » homepage » உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தரவை மாவீரர் துயிலுமில்ல மாபெரும் சிரமதானம்!
உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தரவை மாவீரர் துயிலுமில்ல மாபெரும் சிரமதானம்!

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லம் ஜனநாயகப் போராளிகளின் தலைமையில் மக்களால் துப்பரவு!

19-08-2017 நேற்றையதினம் மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லம் மட்டு அம்பாறை மாவட்ட ஜனநாயகப் போராளிகள் தலைமையில் அப்பகுதி மக்களின் பூரண ஆதரவுடன் துப்பரவு செய்யப்பட்டு மிகவும் எழுச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிரமதானப் பணிகளில் கலந்துகொண்ட மக்கள் அனைவருக்குமான மதியநேர உணவினை ஜனநாயகப் போராளிகள் ஒழுங்குபடுத்தி கொடுத்திருந்தனர்.

மேலும் மதிய உணவினை தமது மாவீரச் செல்வங்களின் வளாகத்திலிருந்து தாமே சமைத்து உண்டது, தமது இறந்துபோன பிள்ளைகளுடன் தாமும் சேர்ந்தே உண்பதான மனோநிமலயே தமக்கு இருந்ததாக மாவீரர்களின் உறவுகள் கண்ணீர்மல்க தெரிவித்திருந்தார்கள்.

கிழக்கு மக்களின் அமோக ஆதரவு அண்மைக்காலமாக ஜனநாயகப் போராளிகள் கட்சியைநோக்கி திரும்பிவருவதற்கு காரணம் ஜனநாயகப் போராளிகளின் உணர்வுபூர்வமான செயற்பாடுகளே என எமது மக்கள் பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார்கள்.

அத்துடன் அரசியல் மாற்றத்தை நோக்கிய கிழக்குமாகாண மக்களின் அடுத்த தெரிவாக ஜனநாயகப் போராளிகளே இருப்பார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதே மக்களின் கருத்தாகும்.

Comments Closed

%d bloggers like this: