இலங்கை தமிழ் புலம்பெயர்

வெள்ளைப்புலியை எலியாக்கிய TCCயினர். – எல்லாளன்

எமது தலைவரால் போற்றப்பட்ட வெள்ளைப்புலியை இன்று TCCயினர் தாம் பிடித்து வெள்ளை எலியாக்கி அடைத்து வைத்துள்ளார்கள்!

2009வரை புலத்தினில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் மக்களிடம் திரட்டப்பட்ட புலிகளுக்கான நிதிகள் அனைத்தும் அடேல் என்கிற முன்னாள் வெள்ளைப் புலிக்குத்தான் தாம் செலவழித்தோம் என்ற செய்தியை அந்த வெள்ளைப்புலியின் இறுதிமூச்சு அடங்கிய பிற்பாடு அவரைவைத்து ஏப்பம்விட்டுவரும் புலம்பெயர் அமைப்பார் நிச்சையம் தாம் எதிர்காலத்தில் சொல்லுவார்கள் என்பதை முன்கூட்டியே இங்கே பதிவுசெய்ய விரும்புகின்றோம்.

மேலும் போர் முடிவுற்று இன்றுவரை எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் தானொரு வெள்ளைப் புலியாகவும்,தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரின் பாரியாராகவும் இருந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தை வகித்தபோதும், இன்றைய காலகட்டத்திற்கேற்ப அவர் தன்னை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புசார்ந்து புலம்பெயர் தேசத்திலிருந்து அரசியல்ரீதியாகக்கூட இயக்கமுடியவில்லை என்றால்,அதற்கு காரணம் அவரை சிறைக்கைதிபோன்று தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் TCCயின் முக்கிய புள்ளிகளே.

உண்மையில் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணியினருக்கான ஒரு தத்துவாசிரியராகவே பணிபுரிந்துவந்தார் என்பதை யாரும் மறுக்கமுடியாது. இவற்றைவிட தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தான் எழுதி வெளியிட்டதான மிகவும் முக்கியமான பொக்கிசம் என்று வர்ணிக்கப்படும் “போரும் சமாதானமும்” என்ற நூலினைக்கூட திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களே தேசத்தின் குரல் அவர்களுக்கு தான் பக்கத்துணையாக இருந்து அந்த நூலின் வெளியீட்டிற்கு பலவழிகளிலும் ஒத்தாசைபுரிந்திருந்தார்.

அத்துடன் விடுதலைப் புலிகளின் மகிளிர் படையணிக்குரிய அரசியல் ஆலோசகராகவும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் இருந்துவந்தார் என்பதும் நாமறிந்த விடையமே.இப்படி திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களின் அடிப்படை திறமைகளை நாம் வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம்.

ஆனால் அன்றைய அடேல் பாலசிங்கத்தை நாம் இன்றைய அடேல் பாலசிங்கத்துடன் துளியளவும் ஒப்பிட்டுவிட முடியாது. இதற்கு காரணம் இன்று அவரை பொறுப்பேற்று வைத்திருக்கும்TCC எனும் புலம்பெயர் பணப்பிரியர்களே.

மேலும் புலத்திலுள்ள விடுதலை உணர்வாளர்களின் கருத்துக்களின்படி திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களிடமுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சொந்தமான பலகோடி சொத்துக்களையும் அவரை பராமரித்துவரும் TCCஅமைப்பின் முக்கிய புள்ளிகள் அனைவரும் அடேலின் மரணத்திற்குப்பின்னர் அதை தாம் பங்குபோட திட்டமிட்டுள்ளதாகவும் நம்பகரமாக அறியமுடிகின்றது.

ஆகவே திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களை எமது தமிழீழ மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அவருக்கான இறுதிமரியாதை நிகழ்வினில் மட்டுமே பார்கமுடியும் என்பதற்கு அப்பால், அவரின் மரணம்கூட எமது மக்களுக்கு ஒரு மாபெரும் இழப்பாக இருக்கப்போவது கிடையவே கிடையாதென்பதே யாரும் மறுக்கமுடியாத உண்மை.

நன்றி

எல்லாளன்