இலங்கை தமிழ்

விடுதலைப் புலிகளால் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலைப் புலிகளுக்கெதிராக ஒருங்கிணைக்கும் ஒட்டுக்குழுவினர்!

துரோகி கருணாவினதும் அனந்தியினதும் நீலன் அணி எனும் ஒட்டுப்படைகளினதும் வழித்தோன்றலே க.இன்பராசா எனும் நபர்!

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்ட நபர்களின் அமைப்பானது எப்படி ஓர் அரசியல் கட்சியாக தன்னை மாற்றியமைக்க துணிந்தது..?

திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த க.இன்பராசா என்பவர் தான் இயக்கத்தில் இணைந்த சில வருடங்களிலேயே பெண்களுடன் தகாதமுறையில் பழகியதன் காரணமாக 1997ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகளால் தண்டிக்கப்பட்டு கலைக்கப்பட்டவராவார்.

இவர் வன்னியின் இரணைப்பாலை கிராமத்திலுள்ள ஒரு பெண்ணை 1998ம் ஆண்டு காலப்பகுதியில் மணம்முடித்து ஒருசில வருடங்களில் தான் மணம்முடித்த பெண்ணிற்கு தெரியாமல் வேறுசில பெண்களோடு தகாத தொடர்புகளை பேணிவந்ததனால் இவரது மனைவியார் இவரை வேண்டாம் என வெறுத்து த.வி.புலிகளின் காவல்துறையிடம் இவரின் முறைகேடுகள் தொடர்பாக முறையிட்டு விவாகரத்துக்கோரி தமிழீழ நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்து விவாகரத்தும் பெற்றிருந்தார்.

மேலும் இவருடைய பழக்கவழக்கங்களில் சிறிதளவும் முன்னேற்றம் காணாத நிலையிலேயே புலிகளும் இவரை தமது அமைப்பிலிருந்து கலைத்திருந்தார்கள்.
அதன்பின்னர் கடந்த 2009ம் ஆண்டு போர்முடிவுவரை இவர் வன்னியில் சாதாரணமான ஒருவராகவே வாழ்ந்துவந்தார். ஆனால் இறுதிப்போரின் முடிவினில் அகப்பட்ட அனைவரையும் இலங்கை இராணுவம் கைதுசெய்த சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒருநாள் இருந்திருந்தாலும் தங்களிடம் அவர்கள் வந்து பதிவிமனை மேற்கொள்ளவேண்டுமென்று அச்சுறுத்தியதற்கிணங்க க.இன்பராசாவும் அவர்களிடம் அகப்பட்டு புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்தார் என்பதே உண்மை நிலவரம்.

ஆனால் புனர்வாழ்வுபெற்று வெளியில்வந்த போராளிகளின் வாழ்வாதாரத்தை முன்நிறுத்தி க.இன்பராசா அவர்கள் ஒரு அமைப்பொன்றை எப்படி வேகமாக தான் உருவாக்கும் தகுதியை உடனடியாகப் பெற்றார் என்பதை நாம் ஆராய்ந்தபோது துரோகி கருணா,திருமதி.அனந்தி சசிதரன் மற்றும் நீலன் அணி எனும் தேசவிரோத கும்பலுமே இவரை பணம் கொடுத்து இயக்கிவருவதாக எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
உண்மையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட எமது போராளிகளுக்கு தாம் உதவிசெய்பதாக அடிப்படையில் ஆரம்பித்த க.இன்பராசாவின் செயற்பாடுகள், இன்று தன்னை ஒரு அரசியல் தலைவனாக்கி ஒட்டுமொத்த போராளிகளுடனும் தனக்கு தொடர்பிருப்பதான போலியான வதந்திகளை மக்களிடம் பரப்பி, தன்னை விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய புலனாய்வு தளபதி எனவும் புழுகித்தள்ளிவருகின்றார்.

உண்மையில் இவருடைய நோக்கமானது கடந்தகாலத்தில் தான் விடுதலைப் புலிகளால் ஒழுக்கரீதியாக பாதிக்கப்பட்டதற்கான கோபங்களை சாதிப்பதற்காக இன்று தன்னை புலியாக வர்ணித்து மக்களிடம் தன்னை தளபதியாகவும் புழுகிவருகிறார்.

இவர் கருணாவை தான் பாரதூரமாக விமர்சிக்கும் அதேவேளை கருணாவின் ஒரு நெருங்கிய சகாவாகவும் தன்னை மாற்றியுள்ளார் என்பதே தற்போதைய உண்மை தகவல்களாகும். கருணாவின் திட்டத்திற்கு அமைவாகவே இவர் தற்போது வேகம்பெற ஆரம்பித்துள்ளார். மேலும் கருணாவின் நோக்கமானது இவர் ஊடாக ஜனநாயகப் போராளிகளின் அரசியல் பலத்தை வளரவிடாமல் சிதைக்கவேண்டும் என்பதே.
ஆகவே கடந்தகாலத்தில் த.வி.புலிகளால் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர்களால் தண்டிக்கப்பட்டு வெறுக்கப்பட்டவர்களை, இன்று இலங்கை அரசுடன் ஒட்டிவாழும் ஒட்டுக்குழுவினர் தாம் விலைபேசி அவர்களை வாங்கிவைத்துக்கொண்டு எமது உண்மையான போராளிகளின் மக்களுக்கான அரசியல் பயணத்தை தடுப்பதற்கு மிகவும் கடுமையாக முயன்றுவருகிறார்கள் என்பதை எமது மக்கள் தாம் சரிவர இவர்களை இனங்கண்டு ஒதுக்கிவைக்கவேண்டும் என்பதே காலத்தின் தேவையாகும்.
நன்றி
-எல்லாளன்-