டென்மார்க்கில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் 30வது நினைவுநாள் நிகழ்வு.

Home » homepage » டென்மார்க்கில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் 30வது நினைவுநாள் நிகழ்வு.
டென்மார்க்கில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் 30வது நினைவுநாள் நிகழ்வு.

டென்மார்க்கில் Randers நகரில் நாடுகடந்த அரசின் ஆதரவாளர்களால் நடாத்தப்பட்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30வது நிகழ்வில் தமிழ்மக்கள் கலந்துகொண்டு மலர்வணக்கம் சுடர்வணக்கம் செய்தனர். நிகழ்வில் கலந்துகொண்ட நாடுகடந்த அரசின் அவைத்தலைவர் நாகலிங்கம் பாலச்சந்திரன் முதன்மை சுடரை ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.

மாவீரர் தியாகதீபம் திலீபனின் நினைவுக்ககுறிப்புக்கள் பலரால் நினைவு கூறப்பட்டதுடன் கவிதைகளும் வாசிக்கப்பட்டது. நிகழ்வை ஒழுங்கமைத்த தமிழ்தேசியசெயல்பாட்டாளர் கமலநாதன் தியாகதீபம் திலீபனின் நினைவுகுறிப்புக்களுடன் நிகழ்வை ஒழுங்கு செய்தபோது கொண்ட அனுபவங்களை கண்ணீர்மல்க எடுத்துரைத்தார்.

தொடர்ந்து நாடுகடந்த அரசின் மக்களுடான சந்திப்பு அவைத்தலைவர் நாகலிங்கம் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நாடுகடந்த அரசின் ஆரம்ப மற்றும் தற்போதய செயல்பாடுகளை எடுத்துக்கூறியதுடன் நாடுகடந்த அரசிற்காக டென்மார்க் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப உறுப்பினர்கள் நாடுகடந்த அரசின் யாப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து சத்தியப்பிரமாணம் எற்காமையால் வெளியேற்றப்பட்டதாகவும் கூறினார்.

தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட மக்களால் நாடுகடந்த அரசின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக வினாக்கள் எழுப்பப்பட்டது. டென்மார்க்கில் ரிசிசி அமைப்பினரின் அச்சுறுத்தல்கள் வன்முறை செயல்பாடுகள் காரணமாக தமிழ்தேசியசெயல்பாட்டாளர்கள் தன்னிச்சையாக செயல்படமுடியாத நிலமையுள்ளதாக பலரும் எடுத்துக்கூறினர். டென்மார்க்கில் நாடுகடந்த அரசின் செயல்பாடுகளை தொடர்வதர்கான முயற்சியில் நாடுகடந்த அரசின் ஆதரவாளர் அமைப்பு தொடரும் என நிகழ்வை ஓழுங்கமைத்தவர்கள் கூறினர்.

இந்த நிகழ்வை குழப்பும் நோக்கில் இந்த வருட மாவீரர் நாள் நிகழ்விற்க்கென பணவசூலிப்பில் ஈடுபட்ட ரிசிசி அமைப்பினர் நிகழ்வு நடைபெறவில்லை என வீடுவீடாக சென்று Randers நகரில் உள்ள மக்களுக்கு கூறியமையால் Randers நகர தமிழ் மக்களின் வரவு கணிசமானதாகவே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Comments Closed

%d bloggers like this: