இலங்கை தமிழ்

டடி முகாம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய சனநாயக போராளிகளின் துணிச்சலான மாவீரர் நாள் நிகழ்வுகள்!

மக்களின் குடிமனைகளிலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றருக்கும் குறையாத தூரத்தைக்கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதியில் போலியான தமிழ்த்தேசியவாதிகளின் கண்களில் படாது முற்றுமுழுதான போராளிகளையும்,மாவீரர் குடும்பங்களையும் மட்டுமே உள்ளடக்கி மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வானது எமது தமிழ் தேசிய சனநாக போராளிகளின் தனித்துவமான இறுமாப்பையே எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. வன்னியிலுள்ள ஏனைய துயிலும் இல்லங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில்தான் இருந்துவருகின்றது.ஆனால் டடி முகாம்போன்ற துயிலுமில்லங்கள் ஒன்று இரண்டே உள்ளன’ஆயினும் அவைகள் இராணுவத்தின் பூரண பிடிக்குள் இருந்துவருகின்றன. எனவே இம்முறை நடந்துமுடிந்த மாவீரர் நாள் நிகழ்வுகளில் துயிலுமில்லங்களின் வரிசையில் டடி முகாம் துயிலுமில்லமே அடர்ந்த காட்டுக்குள் இருந்த ஒரேயொரு துயிலுமில்லம் என்பதும் இங்கே குறிப்பிடத்த்தக்கது.