தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் வவுனியா வடக்கிற்கான வேட்புமனு நிராகரிப்பு!

Home » homepage » தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் வவுனியா வடக்கிற்கான வேட்புமனு நிராகரிப்பு!
தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் வவுனியா வடக்கிற்கான வேட்புமனு நிராகரிப்பு!

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தனித்துவமாக களமிறங்கி போட்டியிடுவதென நாம் முயற்சி செய்தபோதும், எம்மால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவினை இன்று நிராகரித்திருப்பதாக வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. வவுனியா வடக்கு பிரதேசத்தில் எமது போராளிகள் கட்சிமீது மக்களுக்கு இருந்துவந்த ஆதரவினை அடிப்படையாகவைத்தே நாம் மிகுந்த நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த தேர்தலில் போட்டியிடுவதென தீர்மானித்திருந்தோம். ஆனால் எமது வேட்பு மனு நிராகரிப்பு காரணமாக இந்த தேர்தலில் எம்மால் போட்டியிட முடியாமல்போனதையிட்டு நாம் ஏமாற்றம் அடைவதுடன்,எதிர்வரும் தேர்தல்களில் முழுமையாக நாம் பங்குபற்றுவதற்கான தடைகளை அகற்றுவதற்கு தற்போதைய நிராகரிப்பு என்ற முடிவை எமது எதிர்கால அரசியல் செயற்பாடுகளுக்கான படிப்பினையாக எடுத்து எமது போராளிகள் தொடர்ந்து தமது அரசியல் பயணத்தை வேகமாக முன்னெடுத்துச்செல்ல திடசங்கர்ப்பம் கொள்ளவேண்டும் என்பதை இங்கே வினையமாக வேண்டிநிற்கின்றோம். அத்துடன் இந்த தேர்தலில் நாம் போட்டியிடமுடியாமல் போனமைக்கு கூறப்பட்ட காரணங்களில் பிரதானமாக எமது தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் தலைவர் இந்த தேர்தலில் தான் போட்டியிடாமையே என்ற காரணத்தை முன்வைத்தே நிராகரித்திருப்பதாக அறியமுடிகின்றது. சட்டரீதியாக தலைவர் போட்டியட முடியாவிட்டால் அவரால் நியமிக்கப்படும் இன்னொருவர் தலைவரின் சிபாரிசுடன் போட்டியிடலாம் என்ற விடையத்தை எமது கட்சியின் தலைவர் நடைமுறைப்படுத்தியபோதும் அதை தேர்தல் திணைக்களம் ஏற்றுக்கொள்ளாது நிராகரித்திருப்பது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இருப்பினும் தற்போதைய இந்த சிறிய பின்னடைவினை ஓர் பெரிய படிப்பினையாக நாம் எடுத்துக்கொண்டு முன்னேறிச்செல்லவேண்டும் என்பதே எமது போராளிகளின் உறுதிப்பாடாகும்.
ஊடகப்பிரிவு
தமிழ் தேசிய போராளிகள் கட்சி
நடுவப்பணியகம்
கிளிநொச்சி.

Comments Closed

%d bloggers like this: