தாயகத்தில் உள்ள முன்னாள் போராளிகளே…..

Home » homepage » தாயகத்தில் உள்ள முன்னாள் போராளிகளே…..
தாயகத்தில் உள்ள முன்னாள் போராளிகளே…..

எமது தலைவரின் நாமத்தை உச்சரிக்க உரித்துடையவர்கள் தாயகத்தில் உள்ள முன்னாள் போராளிகளே…..

இருந்தும் உங்களில் சிலர் எமது தலைவரின் தனித்துவ பண்புகளை பின்பற்றாது ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து உங்களை தலைவரின் வளர்ப்புகளாக காட்டமுனைவது கேலிக்குரியதே. தனித்துவமாக செயற்பட்டு புலிகளுகடகான பலத்தை அரசியல்ரீதியாக பெறுவதை தவிர்த்து, ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து அவர்களை பலப்படுத்த நீங்கள் முனைவதானது உங்கள் சிலரின் தன்னம்பிக்கையிழந்த அனாகரீகமான செயலன்றி வேறொன்றுமல்ல.தமிழர்களுக்கான தற்கால அரசியல் என்பது எமது தலைவரின் சிந்தனைகளிலிருந்துதான் ஊட்டம்பெறுகின்றதென்ற உண்மை நிலையினை நீங்கள் உணர்ந்து, புலிகளுக்கான தனித்துவ அரசியல் பலத்தினை உருவாக்கவேணட்டியவர்களாக உங்களை மாற்றி உறுதியுடன் பயணிக்கவேண்டியவர்கள் நீங்களே.இருந்தும் எமது தலைவரின் அரசியல் கொள்கைகளை தமது சிந்தனைகளாக முன்வைத்து தற்போதைய அரசியல்வாதிகள் தம்மை பலப்படுத்திவரும் இன்றைய காலகட்டத்தில் உங்களுக்கே உரித்தான எமது தலைவரின் பண்புகளை நீங்கள் கைவிட்டு மாற்று கட்சிகளுடன் ஓரிருவராக இணைந்து உங்களை மட்டும் பலப்படுத்த நீங்கள் முனைவதானது உங்கள் சிலரின் சுயநலமேயன்றி வேறொன்றுமல்ல.

எனவே எமது முன்னாள் போராளிகளே……..

உங்களுக்கான தனித்துவ அரசியல் அடையாளமற்று நீங்கள் ஏனைய கட்சிகளின்பின் அலைவதை விடுத்து உங்களை நீங்கள் தனிப்பெரும் அரசியல் கட்சியாக பலப்படுத்த முயலவேண்டும் என்பதே எமது போராளிகளினதும், மக்களினதும் உண்மையான விருப்பமாகும்.

(இதை நீங்கள் நடைமுறைப்படுத்தாதவரை உங்களை நீங்கள் ஏனைய கட்சிகளுடன் இணைத்து போராளிகளென அறிமுகம் செய்வது கேலிக்குரியதாகவே எம்மால் நோக்கப்படும்)

Comments Closed

%d bloggers like this: