“எமது மக்களுக்கான அரசியல் உரிமைகளுக்காக எமது தலைமையில் விரைவில் இலங்கை அரசுடன் பேசவுள்ளோம்.”- மூத்த போராளி திரு.சபா

Home » homepage » “எமது மக்களுக்கான அரசியல் உரிமைகளுக்காக எமது தலைமையில் விரைவில் இலங்கை அரசுடன் பேசவுள்ளோம்.”- மூத்த போராளி திரு.சபா
“எமது மக்களுக்கான அரசியல் உரிமைகளுக்காக எமது  தலைமையில் விரைவில் இலங்கை அரசுடன் பேசவுள்ளோம்.”-  மூத்த போராளி திரு.சபா

எமது மக்களின் தார்மீக அரசியல் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே நாம் ஆயுதம் ஏந்தினோம். தற்கால தமிழ் அரசியல்வாதிகள் எம்மை மீண்டுமொரு ஆயுதப்போருக்குள் தள்ள முற்படுகிறார்கள்.
என மூத்த போராளி திரு.சபா அவர்கள் தெரிவிப்பு

இலங்கை அரசானது இன்னொரு ஆயுதப்போரை தமிழர்கள் மீது தான் திணிக்க முற்படாது, அரசியலில் சம அந்தஸ்த்தை எமது இனத்திற்கு எந்தவித கால இழுத்தடிப்புக்களுமின்றி விரைவாக வழங்க முன்வரவேண்டும்.

எமது ஆயுதப்போரானது எந்தவொரு பயங்கரவாத சிந்தனைகளையும் அடிப்படையாக்க்கொண்டு ஆரம்பிக்கப்பட்டதல்ல.மாறாக அது எமது மக்களின் அரசியல் உரிமைகளை அடிப்படையாக கொண்டவை.

இலங்கை தமிழரசு கட்சியின் அன்றைய அரசியல் கொள்கைகளை செயலளவில் உருப்பெறவேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்களின் தலைமையிலான பல்வேறுவகையான சாத்வீக போராட்டங்களை எமது மக்கள் அன்று நடத்திவந்தார்கள்.

இருந்தபோதும் எமது மக்களின் அந்த நியாயமான கோரிக்கைகள் எவையும் அன்றைய இலங்கை அரசின் செவிகளை எட்டமறுத்தன.அத்துடன் அந்த கோரிக்கைகளை விடுத்த எமது மக்களை அடக்கியாளவும் அன்றைய அரசுகள் முற்பட்டன.

இதன் காரணமாகவே வன்முறையை எமது மக்கள் நாடவேண்டிய சூழல் உருப்பெற்றது.நாம் போராளிகளாக மாறமுன்பு மக்களாக இருந்தவர்கள்.அதனால்தான் நாம் கூறுகிறோம் மக்களே புலிகள்,புலிகளே #மக்கள் என்று நாம் மக்களாக இருந்து எதிர்பார்த்தவைகளைத்தான் அன்றும் இன்றும் என்றுமான எமது தார்மீக அரசியல் உரிமைக்கான கோரிக்கைகள் ஆகும்.

அன்றைய மக்கள்தான் அன்றைய இலங்கை அரசியல் தலைவர்களால் தமக்கு கிடைக்கப்பெறாத உரிமைகளை பெறுவதற்காக தம்மை புலிகளாக்கி பெறமுனைந்தார்கள் என்பதை இன்றைய இலங்கை அரசிற்கு நாம் கூறவேண்டியதல்ல.

விலைமதிக்கமுடியாத எமது உடன்பிறப்புக்களின் உயிர்ப்பலிகளின் பின்னராகிய இன்றும் எமது இனத்திற்கு வழங்கப்படாத நியாயமான உரிமைகளை சிங்கள மக்களைப்போன்று எமக்கும் சமனான வழங்குங்கள் என்றே நாம் இன்றும் கோரிவருகிறோம்.

எமது தற்கால அரசியல் கோரிக்கைகளும் அன்றைய அரசுகள்போன்று இன்றைய அரசுகளாலும் ஒருவேளை ஏற்றுக்கொள்ளப்படாமல் தோற்கடிக்கப்படுமாயின்,நிச்சயம் சர்வதேசத்தை நோக்கிய எமது மக்களின் உரிமை மீட்புக்கான அரசியல் போராட்டங்கள் எதிர்காலத்தில் பாரிய அழுத்தங்காளாக தொடரும் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

மேலும் இன்றைய சுயநலவாத சிந்தனைகளுடைய எமது தமிழ் அரசியல் தலைமைகளை நம்பி தொடர்ந்தும் எமது மக்களின் அரசியல் கோரிக்கைகளை அவர்களிடம் விட்டுவைக்க போராளிகளாகிய நாம் விரும்பவில்லை.

இதற்கான பிரதான காரணம்,எமது அரசியல்வாதிகளில் எமது மக்களுக்கும்,எமக்கும் ஏற்பட்டிருக்கும் பல தாசாப்தகால கசப்பான அனுபவங்களே.

இன்றைய தமிழ் அரசியல் தலைவர்களைப்போன்றே அன்றைய எமது அரசியல் தலைவர்களும் தமது சுயநலவாத சிந்தனைகளோடும், குறுகிய மனப்பான்மையோடும் இருந்துவந்தார்கள்.

இதன் காரணமாகவே ஆயுதப்போரையும் அன்று நாம் சந்தித்திக்கவேண்டிய சூழல் எழுந்தது.

இன்றைய எமது அரசியல்வாதிகளின் உள்நோக்கமும் அதுதான். அதாவது இன்றைய தமிழ் இளைஞர்களை தமது திட்டமிட்ட கருத்துக்களால் மீண்டும் போர் வெடிக்கும் என்று உசுப்பேற்றிவருகிறார்கள்.

ஆகவே மூன்று தசாப்தகால போரின் பட்டறிவான அனுபவங்களின் அடிப்படையில் இருந்துகொண்டு போராளிகளாகிய நாம் சொல்கிறோம்,#நாம் மீண்டுமொரு போரை சிறிதளவும் எதிர்பார்க்கவில்லை, விரும்பவுமில்லை.

மாறாக எமது மக்கள் பல தசாப்தங்களாக தாம் கேட்டுவரும் தமக்கான தார்மீக அரசியல் உரிமைகளையே நாம் எதிர்பார்க்கின்றோம்.

அத்துடன் தலைமுறை தலைமுறையாக போர் வெடிக்கும் என்று கூறிவரும் எமது தற்கால அரசியல் தலைவர்களை நம்பி ஒருபோதும் நாம் மீண்டுமொரு ஆயுதப்போரை தொடரப்போவதும் கிடையாது.

எனவே எமது மக்களுக்கான அரசியல் உரிமைகளை எமது போராளிகளின் தலைமையில் விரைவில் நாம் பொறுப்பேற்று, எமது மக்களின் எமக்கான அரசியல் அங்கீகாரத்துடன் இலங்கை அரசுடன் பேசவுள்ளோம் என்பதனையும் இங்கே எமது மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
நன்றி
தலைமை ஒருங்கிணைப்பாளர்-
போராளி திரு.சபா
“போராளிகள் ஒருங்கிணைப்பு குழு”

Comments Closed

%d bloggers like this: