இந்தியா

ரஜினி புது கட்சி: அண்ணன் விளக்கம்!

நடிகர் ரஜினிகாந்த் ஜூலை மாதத்தில் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவலை அவரது சகோதரர் சத்யநாராயணா மறுத்துள்ளார்.

இலங்கை

மகிந்தவில் தொங்கி நிற்கும் கருணாவின் கட்சி குண்டர்கள்!

மட்டக்களப்பில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைவராகவும், இராணுவ புலனாய்வு செயல்பாட்டாளர் கமலதாஸ் என்பவரை செயலாளராகவும் கொண்டு மட்டக்களப்பில் மட்டும் ஏற்படுத்திய புதிய அரசியல் கட்சியான “தமிழர் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு” குண்டர்கள் மன்னிக்கவும் தொண்டர்கள் நேற்று 24/05/2017ல் முன்னாள் ஐனாதிபதி மகிந்தராஷபக்‌ஷவை கொழும்பில் சந்தித்து எதிர்கால கிழக்குமாகாணசபை மற்றும் உள்ளூராட்சிசபை தேர்தலில் எப்படி குழுபறிக்கலாம் என்ற ஆலோசனையை மகிந்தராஐபக்‌ஷவிடம் இருந்து பெற்றனர்.

இலங்கை

விடுதலைபுலிகளின் தலைவர் பிராபாகரனுக்கு மரண அறிவித்தல் போஸ்டர்

விடுதலைபுலிகளின் தலைவர் பிராபாகரனுக்கு மரண அறிவித்தல் போஸ்டர்  வெளியிட்ட சிங்களவர்கள்;  போஸ்டர்  சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவல நாள் அன்று தமது வெற்றியை கொண்டாடிய சிங்களவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிராபாகரனுக்கு மரண அறிவித்தல் போஸ்டர் அடித்து வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர்.

இலங்கை

நீரில் மூழ்கும் அபாய கட்டத்தில் இலங்கை பாராளுமன்றம்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நியவன்னா ஓயவின் நீர்மட்டம் வேகமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பாராளுமன்றம் நீரில் மூழ்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை

அன்று பெண் புலி போராளி.. இன்றோ இராணுவ வீராங்கனை! போராளிகளின் சோகக்கதை

சுமார் மூன்று தசாப்தங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் நடை பெற்று வந்த யுத்தம் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த யுத்தத்தில் மக்கள் இழந்தவை ஏராளம். வார்த்தைகளால் விபரிக்க முடியாத துன்பங்களை பாதிக்கப்பட்ட மக்கள் அனுபவித்துள்னர். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா தமிழ்

முள்ளிவாய்க்கால் படுகொலை பற்றி கருத்துக்கூற மறுத்த ரஜினிகாந்த்!

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதன் நினைவு நாள் குறித்த கேள்விக்கு பதில் சொல்ல நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ்

புலிகளின் நிதியை உள்வாங்கவா… பணமாற்று கட்டுப்பாட்டு சட்டமூலம்.?

சீன முதலீடுகளை விட புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளே இலங்கைக்கு உகந்தது என்று நோர்வேயின் எரிக் சொல்ஹிம் இந்திய ஊடகத்திற்கு குறிப்பிட்டிருந்தார். இதனை அங்கீகரிக்கும் வகையில் விடுதலை புலிகளின் நிதியை சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே அரசாங்கம் பணமாற்று கட்டுப்பாட்டு சட்டமூலத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தமிழ் புலம்பெயர்

விடுதலைப் புலிகளுக்காக நிதிசேகரித்தவர்களின் தண்டனையை உறுதி செய்தது டச்சு உச்சநீதிமன்றம்

விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, தமிழர் ஒருங்கிணைப்பு குழு நபர்கள் நால்வருக்கான தண்டனையை நெதர்லாந்து உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

புலம்பெயர்

உயிரோடு இருப்பவருக்கு அஞ்சலி செலுத்திய பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர்

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் மாசி மாதம் வீரச்சாவடைந்த மாவீரர் நினைவு கூறும் நிகழ்வில் உயிரோடு இருப்பவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
26.02.2017 அன்று பிரான்சு தமிழர் ஒருகிணைப்பு குழுவின் அலுவலகத்தில்நடைபெற்ற நிகழ்வில் தமிழீழப்பாடகர் சாந்தன் அவர்களுக்கு பதிலாக தாயகப்பாடகர் திருமாறன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி நிகழ்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரெஞ்சுக்கிளை என்று தங்களை சொல்லிக்கொள்ளும் இவ் குழுவினர் தமிழீழப்பாடகர்கள் யார் என்பதை அறியாதவர்கள் இவ் கட்டமைப்பில் பணி செய்வதோடு இதை கேட்டால் வன்முறையான பதில்களையும் தருகின்றார்கள்

சங்கதி பதிவு […]

இந்தியா

குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு ஜெயலலிதா என பெயர் சூட்டிய சசிகலா

அதிமுக தலைமைக் கழகத்தில் நிர்வாகிகளை சந்தித்து தினந்தோறும் ஆலோசனை நடத்தி வருகிறார் சசிகலா. இந்நிலையில், ஆலோசனை கூட்டம முடிந்து திரும்பிக்கொண்டிருக்கையில், அங்கு காத்திருந்த தொண்டர்களைப் பார்த்து அவர் வழக்கம் போல கையை அசைத்து இரட்டை விரலைக் காட்டினார். சசிகலாவைப் பார்க்கக் கூடியிருந்த தொண்டர்களிடையே காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த பெண் தொண்டரும் ஒருவர். அவர் தனது குழந்தைக்குப் பெயர் வைக்குமாறு சசிகலாவிடம் கோரிக்கை வைத்தார். இதை ஏற்று அந்தப் பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டினார் […]