ஒலி-ஒளி புலம்பெயர் முக்கிய செய்திகள்

ஒற்றைக் குடையின் கீழ் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என ஐ.நா முன்றலில் அணிதிரளுமாறு நடிகர் சத்யராஜ் அழைப்பு !

எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகும் மனித உரிமை மாநாட்டின் பொழுது தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பவேண்டும் என தமிழ் உணர்வாளரும், ஈழத்தமிழருக்காக எப்போது குரல்கொடுப்பவருமான நடிகர் சத்தியராஜ் அழைப்பு விடுத்துள்ளார் எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகும் மனித உரிமை மாநாட்டின் பொழுது, சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும், இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை கோரியும் தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பவேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். […]

புலம்பெயர் முக்கிய செய்திகள்

பெப்ரவரி 27முதல் மார்ச் 5ம் நாள் வரை தமிழர்கள் அனைவரும் ஜெனீவா நோக்கி அணிதிரள்வோம்.. செந்தமிழன் சீமான் அழைப்பு..

பெப்ரவரி 27ஆம் நாள் தொடங்கவிருக்கின்ற ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி, புலம்பெயர் தமிழர்களை ஐ.நா முன்றிலில் அணிதிரளுமாறு தமிழகத்தில் இருந்து செந்தமிழன் சீமான் அறைகூவல் விடுத்துள்ளார். ஜெனீவாவை நோக்கிய நடை பயணங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள சீமான் அவர்கள், பெப்ரவரி 27ஆம் நாள் முதல்  மார்ச் 5ம் நாள் வரை நடை ஐ.நா மனித உரிமைச் சபை முன்றலில்  சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி, இடம்பெறவிருக்கின்ற […]

இந்தியா

கருணை மனுக்களின் நிலவரம்: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதிப்பு.

முருகன், பேரறிவாளன், சாந்தன் தூக்குத் தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களின் நிலவரம் குறித்த விவரங்களை மூன்று நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் மறு ஆய்வு மனுக்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கோ, உச்ச நீதிமன்றத்துக்கோ மாற்றக் கோரும் மனு மீது பின்னர் விசாரணை நடத்தப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் […]

சிறிலங்கா

டக்ளஸ் மீதான வழக்கு தீர்ப்பு எதிர்வரும் செவ்வாய்! – சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கு விசாரணைக்காக, அவரை இந்தியாவுக்கு கொண்டு வர உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் முடிந்துள்ளதால், வரும் 21ம் நாள் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. சென்னை சூளைமேட்டில், 1986ம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் திருநாவுக்கரசு என்பவர் பலியானார். இருவர் காயமடைந்தனர். அப்போது சென்னையில் தங்கியிருந்த, ஈபிஆர்எல்எவ் இயக்கத்தைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 10 பேர் மீது, சூளைமேடு காவல்துறையினர் வழக்கு […]

இந்தியா

விஜயகாந்த் நண்பர் இப்ராகிம் ராவுத்தர் உட்பட தேமுதிக முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.

தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், சினிமா தயாரிப்பாளருமான இப்ராகிம் ராவுத்தர், இன்று அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். அ.தி.மு.க- தே.மு.தி.க கட்சிகளுக்கிடையே கடுமையான உரசல் இருந்து வரும் நிலையில், இப்ராகிம் ராவுத்தர் அதிமுக பக்கம் வந்துள்ள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. தேமுதிக சார்பில் சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட்டவர் உட்பட தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் இன்று அதிமுக தலைமைக்கழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் […]

இந்தியா

கச்சதீவை விரைவில் கைப்பற்றியே தீருவேன் – ஜெயலலிதா சபதம்

தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கான ஒரே தீர்வாக உள்ள கச்சதீவை நிச்சயம் மீட்டே தீருவேன் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியாக கூறியுள்ளார். கச்சதீவுக்கு தமிழக மீனவர்கள் தடையின்றி செல்லவும் அதனை ஒட்டிய இடங்களில் இழந்த உரிமையை மீட்கவும் கச்சதீவினை இந்தியாவுக்கே திரும்பப் பெறுவதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை திமுக பொதுக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: இலங்கையுடன் ஏற்பட்ட உடன்பாட்டின் படி கச்சதீவை அவர்கட்கு […]

இந்தியா முக்கிய செய்திகள்

முத்துக்கு​மாருக்கு வீரவணக்கம் செலுத்திய தமிழர் எழுச்சி இயக்கத்தின​ர் கைது!

வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முத்துக்குமார் சாலையில் (ஆடோசு சாலை, சாஸ்திரி பவன்) கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழர் எழுச்சி இயக்கத்தினர் வீரவணக்கம் செலுத்தி கைதானது அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக தி.பி.2043, சுறவம் 15ஆம் நாளான (29-01-2012, ஞாயிற்றுக்கிழமை) இன்று காலை 10.45 மணி அளவில், வீரத் தமிழ்மகன் தீக்குளித்த முத்துக்குமார் சாலையில் (ஆடோசு சாலை) தமிழர் எழுச்சி இயக்கத்தினர் மூன்றாம் ஆண்டு வீரவணக்கம் செலுத்த சுமார் 60 பேர் ஊர்வலமாக வந்தனர். அப்போது […]

இந்தியா ஒலி-ஒளி முக்கிய செய்திகள்

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் மற்றும் மாணவர் பாசறை துவக்க நாள் விழா.

  நாம்தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியான பெருந்தமிழர் சிவகங்கை இராசேந்திரனுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பரங்கிப்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் செந்தமிழன் சீமான் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மாலை சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயில் தெருவில் நாம் தமிழர் மாணவர் பாசறை தொடக்கவிழாவும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் […]

தமிழீழம்

எங்களுடைய அடுத்த சந்ததி இன்னும் வேகமாகப் போராடும்! – தமிழ்க்கவி

தாயகத்தில் இருந்து அண்மையில் தமிழகம் சென்றிருந்த தமிழ்க் கவி அவர்களை ஆனந்தவிகடன் செவ்விகண்டு வெளியிட்டுள்ளது. ஈழத்தின் இன்றைய நிலைமை என்ன? அங்கே இருந்து தமிழகத்தில் தன்னுடைய சொந்தங்களைப் பார்க்க வந்த தமிழ்க் கவி என்ற பெண்ணைச் சந்தித்தோம். மீண்டும் அவர் ஈழத்தின் வன்னிப் பகுதிக்குச் செல்ல வேண்டிய வாழ்க்கை நெருக்கடி இருந்தாலும், அதிக உணர்வுடன் பேசியது ஆச்சர்யம் கொடுத்தது! கவிஞர், எழுத்தாளர், தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர், பெண்ணியவாதி என்ற பல்வேறு முகங்களைக்கொண்ட தமிழ்க் கவி, […]

தமிழீழம்

திருமலை கடற்படைத்தளத்தில் இரகசியத் தடுப்பு முகாம்கள்; காணாமற் போனோர் பலர் அங்கு சிறை

திருகோணமலை கடற்படை முகாம் அமைந்துள்ள வளாகத்தில் இரகசியத் தடுப்பு முகாம்கள் இயங்கிவருகின்றன என்று தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது காணாமற்போனோரைத் தேடியறியும் குழு. கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் இந்த முகாம்களில் காணாமல்போனோர்களில் பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று தமக்குத் தகவல் கிடைத்துள்ளது என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது. இந்தத் தகவல்களின் உண்மைத் தன்மை என்னவென்பதை அரசு உடனடியாக அம்பலப்படுத்த வேண்டும் என்று காணாமற்போனோரைத் தேடியறியும் குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்து […]