அனைத்துலகம் தமிழ்

பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டவர்களுக்கான முக்கிய செய்தி!

பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டை சேர்ந்தவர்களுக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறவுள்ள நிலையில், பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டவர்கள் குடியுரிமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே, கடந்த 27ஆம் திகதி உள்துறை அமைச்சு Jay Visva Solicitorsக்கு அனுப்பிய மின்னஞ்சலில் பின்வரும் தகவலை தெரிவித்துள்ளது. நிரந்திர வதிவுரிமை பத்திரம் பெற்றவர்கள் கல்வி, சுகாதாரம், உதவிப்பணம், ஓய்வூதியம் மற்றும் சமூக வீட்டு […]

அனைத்துலகம்

முடிவுக்கு வந்தது விமான கடத்தல் விவகாரம், பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

118 பேருடன் பயணிகள் விமானம் ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக ‘Afriqiyah Airways A320’ என்ற பயணிகள் மால்டாவில் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்பட்ட செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், குறித்த கடத்தல் சம்பவம் தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானத்தை கடத்தியவர்கள் என தெரிவிக்கப்படும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

அனைத்துலகம்

கட்டுப்பாட்டை மீறி வீதியில் நின்றவர்கள் மீது மோதிய விமானம்.

ஒரு கொலம்பிய போயிங் 727 ரக சரக்குவிமானம் விமான நிலைய ஓடுபாதையில் இருந்து கட்டுப்பாட்டை மீறி விமான நிலையத்திற்கு வெளியில் பார்வையாளர்களாக நிற்வர்களை மோதியுள்ளது. இந்த விபத்தில் வீதியில் நின்ற பார்வையாளர்கள் எவரும் பலியாகவில்லை ஆனால் விமானத்தில் இருந்த அறுவரில் ஒருவரே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மீன்களை ஏற்றிச்சென்ற விபத்துக்குள்ளான விமானத்தின் விமானியும் இறந்துள்ளதாக தெரிவித்த கொலம்பிய ஊடகம் விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. நேற்று மாலை கொலம்பிய தலைநகர் போகாரா நோக்கி புறப்பட்டபோதே இந்த […]

அனைத்துலகம்

சுவிஸ் குடியுரிமை பெறுவது எளிமையாக்கப்படும் என சுவிட்சர்லாந்து அரசு அறிவிப்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள மூன்றாம் தலைமுறை புலம்பெயர்ந்தவர்கள் குடியுரிமை பெறுவதை எளிமையாக்கப்படும் என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. பிற நாடுகளில் உள்ள சட்டங்களை போல் சுவிட்சர்லாந்து நாட்டில் ஒருவர் பிறந்தால் மட்டும் அவருக்கு குடியுரிமை கிடைக்காது. சுவிஸில் குடியேறிய தாத்தா/பாட்டி அல்லது தந்தை/தாய் ஆகியவர்கள் சுவிஸ் குடியுரிமை பெறவில்லை என்றால், இவர்களின் சந்ததியினர் மூன்றாம் தலைமுறை புலம்பெயர்ந்தவர்கள் என அழைக்கப்படுகின்றனர். இந்த மூன்றாம் தலைமுறையினர் சுவிஸில் பிறந்திருந்திருந்தாலும் கூட அவர்களுக்கு குடிமக்களை போல் குடியுரிமை வழங்கப்படாமல் […]

அனைத்துலகம்

சுவிஸர்லாந்தில் துப்பாக்கி சூடு…! ஒருவர் பலி, மூன்றுபேர் கவலைக்கிடம்

சுவிஸர்லாந்து சூரிச் மாநிலத்தில் சற்று முன்னர் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. மேலும், இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களின் நிலை கவலைக்கிடமான முறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.

அனைத்துலகம்

ஜேர்மன் மார்க்கெட்டில் கனரக வாகனம் ஏற்றித்தாக்குதல்..! 9 பேர் பலி, 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்

ஜேர்மனியில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து ஒன்றில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைநகர் பெர்லினில் பொது மக்கள் கிறிஸ்துமஸ் மார்கெட் ஒன்றில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது வேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஜேர்மன் ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும், இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். […]

அனைத்துலகம் புலம்பெயர்

பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கான வேண்டுகோள்!

அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள் நீடிப்பு,பிரான்சில் நெருக்கடி நிலையை ஜூலை மாதம் 15-ந் தேதி வரை மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்க வகை செய்து, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப் பட்டுள்ளது . அதன்பேரில் நேற்று ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஓட்டெடுப்பில், நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீட்டிப்பதற்கு 288 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், தீர்மானம் நிறைவேறியது. எதிராக 32 பேர் மட்டுமே வாக்களித்தனர். வரும் ஏப்ரல், மே, ஜூன் […]

அனைத்துலகம்

பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே, 8 மாடி பில்டிங் இடிந்து விழுந்தது! 90 பேர் பலி!!

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் புறநகரான சவாரில் ரானா பிளாசா என்ற பெயரில் 8 மாடி கட்டிடம் ஒன்று இன்று காலை, இடிந்து விழுந்தது. இந்த கட்டிடத்தில் பல ரெடிமேட் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. கட்டிடம் இடிந்து தரைமட்டமான போது அங்கு சுமார் 600 தொழிலாளர்கள் ஆடை உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று தெரிய வருகிறது. சற்றும் எதிர்பாராத வகையில் அந்த பில்டிங் இடிந்து விழுந்ததில், விபத்தில் பலியானோர் எண்ணிக்கை குறைந்தபட்சம் 87 ஆக உள்ளது. […]

அனைத்துலகம்

ரஷ்யாவில் ‘வேட்டை’ கடைக்கு உள்ளே துப்பாக்கி சூடு! 6 பேர் பலி!!

ரஷ்யாவில் இன்று வேட்டைக்கு பயன்படும் பொருட்கள் விற்கும் கடை (hunting shop) ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் பணிபுரிந்த விற்பனையாளர்கள் 3 பேர் உட்பட, 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட தனிப்பட்ட  வீடியோக்களில், கடைக்கு வெளியே விழுந்து கிடக்கும் உடல்களை காணக்கூடியதாக உள்ளது. 6 பேரை சுட்டுக் கொன்ற நபர், கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த BMW காரில் ஏறி பறந்து விட்டார். கொல்லப்பட்ட 6 பேரில், 14 வயது […]

அனைத்துலகம்

பொதுநலவாய நாடுகளின் மாநாடு, வேறொரு நாட்டுக்கு மாற்றப்படக்கூடிய சாத்தியங்கள்

கொழும்பில் நடத்தப்படவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாடு, வேறொரு நாட்டுக்கு மாற்றப்படக்கூடிய சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள பொதுநலவாய அமைச்சு செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் இந்த கூட்டத்தின் போது இலங்கை விடயம் தொடர்பில் பேசுவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருக்கவில்லை எனினும் கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற பொதுநலவாய நீதித்துறை மாநாட்டின் போது இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருந்தனர். அதில் இலங்கையை பொதுநலவாய அமைப்பில் […]