அனைத்துலகம்

நோர்வேயில் பிள்ளைக்கு அடித்த இந்திய தம்பதிகளுக்கு சிறைத்தண்டனை !

தமது பிள்ளைக்கு அடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நோர்வேயின் வதிவுரிமை கொண்ட இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த சந்திரசேகருக்கு 18மாதங்களும் அவரது மனைவி அனுபமா சந்திரசேகருக்கு 15மாதங்களும் நோர்வே நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. அத்தம்பதிகளின் 7வயது மகன் தனது பெற்றோர் தனக்கு அடிப்பதாக பாடசாலையில் ஆசிரியர்களிடம் முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாட்டையடுத்து அச்சிறுவனை நோர்வே சிறுவர் காப்பகம் பொறுப்பெடுத்து கொண்டது. எனினும் அச்சிறுவனை தமது நாட்டிற்கு கொண்டு சென்று விட்டு மீண்டும் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைப்பதாக கோரியதையடுத்து அச்சிறுவன் […]

அனைத்துலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்:கருத்துக்கணிப்பில் பராக் ஒபாமாவை முந்திய மிட் ரோம்னி

அடுத்த மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் அதிபருமான ஒபாமா(51), குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் மிட் ரோம்னி (65) ஆகியோருக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது. பல்வேறு கருத்து கணிப்புகளில் இருவரும் சமமான நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில், தொலைக்காட்சியில் நேருக்கு நேர் விவாதம் நேற்று நடந்தது. கொலராடோவில் உள்ள டென்வர் நகர பல்கலைக்கழகத்தில் இந்த விவாதம் நடந்தது. அமெரிக்க தொலைக்காட்சிகள் அதிபர் பதவி வேட்பாளர்களின் விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்தன. இந்த விவாதத்தில் […]

அனைத்துலகம் சிறப்புச்செய்தி முக்கிய செய்திகள்

ஈழத் தமிழர்களுக்குக் குரல் கொடுத்த ஊடகவியலாளர் சிரியாவில் கொலை!!

ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுத்துவந்த மரியா கெல்வின், இன்று சிரியாவில் நடந்த தாக்குதல் ஒன்றில் சற்றுநேரத்துக்கு முன்னர் கொல்லப்பட்டார் சிரியாவில் அந் நாட்டு அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் மக்கள் போராட்டத்தை உலகறியச் செய்யவும், செய்திகளைச் சேகரிக்கவும் அவர் அங்கே தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 30 ஆண்டுகளாக ஊடகவியலாளராகப் பணியாற்றிய இவர், போர் நடைபெறும் அனைத்து நாடுகளுக்கும் சென்றுள்ளார். 2001ம் ஆண்டு இவர் இலங்கை சென்றிருந்தவேளை ஆயுதப்படையினர் தாக்குதலுக்கு உள்ளாகி தனது ஒரு கண்ணை இழந்தார். அவருக்கு […]

அனைத்துலகம்

இந்திய பாதுகாப்பு படையினரால் வங்கதேசவர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரிப்பு

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் படுகொலை செய்யப்படும் வங்கதேசத்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வங்கதேசம் புகார் அளித்துள்ளது. அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ராபர்ட் பிளேக்கிடம் அந்நாடு இந்த புகாரை தெரிவித்துள்ளது. ராபர்ட் பிளேக்குடனான சந்திப்பின் போது வங்கதேச பிரதமரின் ஊடக உதவி செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் படுகொலைகளும் சித்திரவதைகளும் குறைத்துக் கொள்ளப்படும் என்று இந்தியா பலமுறை உறுதி அளித்திருந்தது. ஆனால் இத்தகைய உறுதிமொழிகளை அந்நாடு கடைபிடிக்கவில்லை என்று […]

அனைத்துலகம் முக்கிய செய்திகள்

"நாம் ஆயுதம் கொடுத்த சிறிலங்கா அரசு போர் குற்றம் புரிந்தது உண்மை!" – நோர்வேக்கான பாகீஸ்தான் தூதுவர்.

நாம் சிறிலங்காவிறகான ஆயுதத்தை கொடுத்தோம் ஒரு நாட்பு நாடு என்ற முறையில் நாம் அவர்களுக்கு ஆயுதத்தை கொடுத்தோம் எனினும் சிறிலங்காவில் போர் குற்றம் ,டம் பெற்றமை உண்மை தான் ஆனால் நான் தமிழரிடம் மன்னிப்புக் கேட்கிறேன.; அவர்களுக்கு ,லங்கையில் நடந்தவற்றிக்கு நான் தமிழரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன். ,னிமேலாவது எஞ்சிய தமிழர்கள் சிங்களவர்களுடன் நிம்மதியாக வாழுவார்கள் என நம்புகிறேன் என்று நோர்வே பாராளுமன்றத்தில் தமிழ் ஊடகவியளாளன் சேதுருபன் நடராசா கேட்ட கேள்விக்கு பதிலளித்தார் முன்னால் சிறலங்காவிற்கான பிரதி […]

அனைத்துலகம் முக்கிய செய்திகள்

ஆர்ப்பாட்டங்களையடுத்து பதவி விலகினார் மாலைதீவு ஜனாதிபதி! இராணுவத் தலைமையகத்தில் தஞ்சம்!!

மாலைதீவு அரசாங்க வானொலியை அந்த நாட்டின் பொலிஸ்துறை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து எதிர்க்கட்சிகளின் ஒலிபரப்புச் சேவைகளும் அதில் இணைக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் ஜனாதிபதியான முகம்மத் நஸீத் தேசிய இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார். மாலைதீவு ஜனாதிபதியால் சில வாரங்களுக்கு முன்னர் அந்த நாட்டு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கைது செய்யுமாறு இராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டிருந்ததனையடுத்து மாலைதீவில் அமைதியின்மை ஏற்பட்டது தெரிந்ததே. பிந்திய தகவல்களின்படி மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் நசீட் தனது பதவியிலிருந்து திடீர் இராஜினாமா செய்துள்ளதாக மாலைதீவு இராணுவ வட்டாரங்கள் […]

அனைத்துலகம்

அதிகாரப் பகிர்வை வழங்க சிறிலங்காவுக்கு அழுத்தங்களை ஏற்படுத்துக! – புதுடில்லிக்கு ஆலோசனை!

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கான அழுத்தங்களை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்படுத்துவதற்கு இந்தியா பங்களிப்பு வழங்க வேண்டிய தேவையுள்ளதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேசக் கற்கைகளுக்கான கல்லூரியின் பேராசிரியர் அனுராதா எம்.செனோய் தெரிவித்துள்ளார். ‘தமிழ் மக்கள் வாழும் வடக்குக் கிழக்குப்பகுதிகளுக்கு அரசியல், பொருளாதார அதிகாரங்களுக்கான உத்தரவாதம் தேவைப்படுகிறது. இந்நிலையில் இவ்விகாரம் தொடர்பில் இந்தியா அதிகளவுக்கு ஆதரவான பங்களிப்பை வழங்க வேண்டும். சுய நிர்வாகத்துடன் 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரப் பகிர்வுக்கான […]

அனைத்துலகம்

முஷாரப் பாகிஸ்தானுக்கு திரும்பினால் கைதாவார்: பாகிஸ்தான் அரசாங்கம்

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியான பர்வேஸ் முஷாரப் நாடு திரும்பினால் நிச்சயம் கைது செய்யப்படுவார் என பாகிஸ்தனர் பிரதமர் யூஸுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார். சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதமர் கிலானி, சி.என்.என். தொலைக்காட்சியுடன் பேசுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் ‘உண்மையில் அவருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு உள்ளது. பல தீவிர குற்றச்சாட்டுகள் உள்ளன. அவருக்கு எதிராக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. நிச்சயமாக அவர் நாடு திரும்பும்போது அக்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும். இராணுவத் […]

அனைத்துலகம்

4000 பேருடன் உல்லாச கப்பல் கவிழ்ந்தது!

4000இற்கும் அதிகமானோருடன் பயணம் செய்த பாரிய உல்லாச கப்பலொன்று இத்தாலிய கரையோரத்தில் கவிழ்ந்தால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரை காணவில்லை என அறிவிக்கப்பபட்டுள்ளது. கொஸ்டா கொன்கோர்டினா எனும் இக்கப்பலில் சுமார் 3200 பயணிகள் உட்பட 4000 இற்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். 290 மீற்றர் நீளமான இக்கப்பல் கிக்லியோ தீவுக்கருகிலுள்ள பவளப்பாறையில் நேற்றிரவு மோதியதையடுத்து கப்பல் ஒருபுறமாக சரிந்தது. இத்தாலி, ஜேர்மன், பிரான்;ஸ், பிரிட்டன் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இக்கப்பல் பயணிகளில் அடங்குவர். கப்பலிலிருந்த பயணிகளும் […]

அனைத்துலகம்

தலிபான்களின் சடலங்கள் மீது அமெரிக்கப் படையினர் சிறுநீர் கழிக்கும் வீடியோவினால் சர்ச்சை

ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட தலிபான் கிளர்ச்சியாளர்களின் சடலங்கள் மீது அமெரிக்கப் படையினர் சிறுநீர் கழிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கப் படையினரின் இந்நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் லியோன் பனேட்டா, இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார். அமெரிக்க இராணுவ சீருடையணிந்த அமெரிக்கப் படையினர் நால்வர், தரையிலுள்ள 3 சடலங்கள் மீது சிறுநீர் கழிக்கும் காட்சி அவ்வீடியோவில் உள்ளது. அக்காட்சி படம்பிடிக்கப்படுவதை அவர்கள் உணர்ந்தவர்களாக தென்படுகின்றனர். ‘இந்த வீடியோவை நான் பார்த்துடன் […]