அனைத்துலகம்

தாய்லாந்தில் தமிழீழ தேசிய மாவீரர்நாள்

தாய்லாந்தில் தற்போது நடைபெறுகின்ற சிறிலங்கா மற்றும் சில மேற்குலக அரசுகளின் நெருக்கடியின் மத்தியிலும் ஈழ மண்ணுக்காக இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களின் நினைவு நாளை தாய்லாந்து வாழ் தமிழ் மக்கள் அனுட்டித்தனர்.

அனைத்துலகம்

மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுக்க அனைத்துலகமும் வாழும் உலகத்தமிழனம் தயாரகி வருகின்றது.

தமிழீழம், தமிழகம் உட்பட அமெரிக்கா முதல் ஒஸ்றேலியா வரையிலான சகல கண்டங்களிலும் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் மாவீரர் நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றது. தமிழர் தாயகம் எங்கும் சிறிலாங்கா படையினர் மிகவும் விழிப்பு நிலையில் இருப்பதோடு மாவீரர் நாளோட தொடர்பட்ட செய்திகளை வெளியிட வேண்டாம் என்ற எச்சரிக்கையும் ஊடகங்களுக்கு விடப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தமிழர்தாயகம் எதிர்கொண்டுள்ள சிங்கள் பேரினவான அடக்குமுறையை புலம் பெயர் தமிழர் சமூகம் நெஞ்சினில் சுமந்த வண்ணமே மாவீரர் நாள் ஏற்பாடுகளை முன்னெடுத்த வருகின்றனர். ஏற்கனவே […]

அனைத்துலகம்

ராஜபட்சேவிடம் உதவி கேட்கவில்லை: நேபாளம் மறுப்பு

நேபாளத்தில் நிலவும் அரசியல் பிரச்னைகளை தீர்க்க இலங்கை அதிபர் ராஜபட்சேவிடம் உதவி கேட்கப்பட்டதாக வெளியான தகவலை நேபாள அதிபரின் அதிகாரப்பூர்வ ஊடக ஆலோசகர் மறுத்துள்ளார். கடந்த மாதம் சீனாவில் இலங்கை அதிபர் ராஜபட்சேவை சந்தித்துப் பேசியபோது, தனது நாட்டின் அரசியல் பிரச்னையைத் தீர்க்க உதவுமாறு நேபாள அதிபர் ராம் பரண் யாதவ் கேட்டுக் கொண்டதாக, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் கூறியிருந்ததாக, இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால், இத்தகவலை நேபாள […]

அனைத்துலகம்

கலிபோர்னிய அரசு தலைமை வழக்கறிஞராக தமிழ்ப் பெண் முதல் தடவையாத் தெரிவு

அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாண அரசு தலைமை வழக்கறிஞராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர். இவர் அமெரிக்காவில் குடியேறி அங்கு வசிக்கும் ஆபிரிக்கர் ஒருவரை மணந்து கொண்டார். இந்தத் தம்பதிகளின் மகள் கமலா ஹாரிஸ் இப்போது கலிபோர்னியா மாகாண அரசு தலைமை வழக்கறிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அந்த மாகாணத்தில் இப்பதவிக்கு வரும் முதல் பெண் என்ற பெருமையையும் முதல் வெள்ளையர் […]

அனைத்துலகம்

நமிபியாவிலிருந்து ஜெர்மனி வரவிருந்த விமானத்தில் சூட்கேசில் வெடிகுண்டு

நமிபியா விமான நிலையத்திலிருந்து ஜெர்மனி புறப்படவிருந்த விமானத்தில் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் ஒன்றினுள் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் மிகுந்த பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. வின்ட்ஹோக் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மியூனிச் செல்வதற்காக இருந்த விமானத்தில் சந்தேகப்படும் வகையில் பார்சல் இருந்ததால் அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பெட்டியில் டைமர், டெட்டனேட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேறு எந்த வெடிபொருளும் இதுவரை அதிகாரிகள் கையில் சிக்கவில்லை. தகவல் அறிந்த உடன் ஜெர்மனி விமான நிலையமும் உஷார்படுத்தப்பட்டது. ஏற்கனவே இந்த […]

அனைத்துலகம்

15 ஆண்டுகால வீட்டுக் காவலில் இருந்து விடுதலையானார் ஆங் சான் சூகி

மியான்மர் நாட்டின் தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி(65), 15 ஆண்டுகால வீட்டுக் காவலில் இருந்து நேற்று மாலை விடுதலையானார். அவரின் வீட்டின் முன் கூடியிருந்த ஏராளமான தொண்டர்கள், இந்த விடுதலையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். மியான்மர் விடுதலை போராட்டத் தலைவரான ஜெனரல் ஆங் சான் – கின் கி தம்பதியருக்குப் பிறந்தவர் ஆங் சான் சூகி. ஆரம்பத்தில் டில்லியில் படித்த சூகி, பின்னர் பிரிட்டன் சென்று ஆக்ஸ்போர்டு […]

அனைத்துலகம்

பெனாசிரை கொன்றது யார்?கோர்ட்டில் அறிக்கை தாக்கல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிரைக் கொலை செய்தது தலிபான்கள் தான், அவரது கொலையில் முன்னாள் பிரதமர் முஷாரப்புக்குத் தொடர்பில்லை என, பாக்., கூட்டுப் புலனாய்வுக்குழு, தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 2007, டிச., 27 அன்று பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ தன் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு கிளம்பிய போது, சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து அங்கு மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடந்தது. இதில், 24 பேர் கொல்லப்பட்டனர். அவரை நோக்கி இளைஞன் […]

அனைத்துலகம்

ஐ.நா.,வில் இந்தியாவுக்கு இடம் கிடைக்குமா? சந்தேகத்தை கிளப்புகிறது அமெரிக்கா

“ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் மறுசீரமைப்புத் திட்டத்தில் எந்நேரம் வேண்டுமானாலும் திருப்பம் நிகழலாம்’ என, அமெரிக்க வெளியுறவுத் துறை இணைச்செயலர் ராபர்ட் ப்ளேக் எச்சரித்துள்ளார். இதனால் ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, “ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் விரைவில் மறுசீரமைக்கப்பட்டு, அதில் இந்தியாவுக்கும் இடம் அளிக்கப்படும்’ என, வாக்குறுதியளித்தார். அவரது இந்த வாக்குறுதி சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை […]