இந்தியா இலங்கை தமிழ்

நாம் தமிழர் கட்சியின் அரசியல் ஆட்சி தமிழகத்தில் மலரவேண்டும் – தமிழ் தேசிய போராளிகள் கட்சி

எமது அன்புக்குரிய தமிழக தொப்பிழ்கொடி உறவுகளே…. இரு நாடு ஓரு இனம் என்ற இரத்த பந்தத்தால் இணைக்கப்பட்ட நாம் நிலத்தால் பிளவுபட்டிருந்தாலும் மொழியால் நாம் ஒன்றுபட்டு எமது மொழியினதும், மக்களினதும் பூரண விடுதலைக்காக இணைந்து உழைக்கவேண்டிய அவசியத்தை இங்கே வலியுறுத்த விரும்புகின்றோம். நாம் தமிழர் கட்சியின் தலைவரான மதிப்பிற்குரிய அண்ணன் சீமான் அவர்களை தமிழக மக்களாகிய நீங்கள் உங்கள் அரசியல் தலைவராக தெரிவுசெய்யவேண்டும் என்பதே தமிழ் தேசிய போராளிகள் கட்சியினதும், எமது மக்களினதும் ஆவலான எதிர்பார்ப்பாகும். இதுவரைக்கும் […]

இந்தியா தமிழ்

பெண்ணை தாக்கிய ஏஎஸ்பிக்கு பதவி உயர்வு.

திருப்பூரில் மதுபானக் கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை தாக்கிய ஏ.எஸ்.பி. பாண்டியராஜனுக்கு எஸ்.பி.யாக பதவி உயர்வு வழங்கியுள்ளது தமிழக அரசு. திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கொடூர தாக்குதல் நடத்தினர். திருப்பூர் கூடுதல் எஸ்.பி. பாண்டியராஜன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சரமாரியாக கன்னத்தில் அறைந்தார். இதில் ஈஸ்வரி என்ற பெண்ணும், சிவகணேஷ் என்ற வாலிபரும் […]

இந்தியா தமிழ்

விலைக்கு வாங்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்: வெளியான வீடியோ ஆதாரங்கள்

தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விலைக்கு விற்கப்பட்டதாக Times Now பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வரான ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து சட்டமன்றத்திலும் அதிமுக கட்சியிலும் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவி வகித்தபோது அதிமுக பொதுச்செயலாளராக இருந்த சசிகலா திடீரென அவரது பதவியை பறித்ததாக புகார் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து பன்னீர் செல்வத்திடம் இருந்த முதல்வர் பதவி எடப்பாடி பழனிச்சாமியிடம் சென்றது. இந்நிகழ்வை […]

இந்தியா

ரஜினி புது கட்சி: அண்ணன் விளக்கம்!

நடிகர் ரஜினிகாந்த் ஜூலை மாதத்தில் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவலை அவரது சகோதரர் சத்யநாராயணா மறுத்துள்ளார்.

இந்தியா தமிழ்

முள்ளிவாய்க்கால் படுகொலை பற்றி கருத்துக்கூற மறுத்த ரஜினிகாந்த்!

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதன் நினைவு நாள் குறித்த கேள்விக்கு பதில் சொல்ல நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியா

குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு ஜெயலலிதா என பெயர் சூட்டிய சசிகலா

அதிமுக தலைமைக் கழகத்தில் நிர்வாகிகளை சந்தித்து தினந்தோறும் ஆலோசனை நடத்தி வருகிறார் சசிகலா. இந்நிலையில், ஆலோசனை கூட்டம முடிந்து திரும்பிக்கொண்டிருக்கையில், அங்கு காத்திருந்த தொண்டர்களைப் பார்த்து அவர் வழக்கம் போல கையை அசைத்து இரட்டை விரலைக் காட்டினார். சசிகலாவைப் பார்க்கக் கூடியிருந்த தொண்டர்களிடையே காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த பெண் தொண்டரும் ஒருவர். அவர் தனது குழந்தைக்குப் பெயர் வைக்குமாறு சசிகலாவிடம் கோரிக்கை வைத்தார். இதை ஏற்று அந்தப் பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டினார் […]

இந்தியா இலங்கை

இலங்கைக்கு எதிராக முதல்அறிக்கை வௌியிட்டுள்ளார் சசிகலா!

இலங்கைக்கு எதிராக தனது முதல் அறிக்கையை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்களை விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. மேலும், அத்துமீறி கடற்தொழிலில் ஈடுப்பட்டதாக கூறி கடந்த 4ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் 10 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அண்மையில் ராமேசுவர கடற்தொழிலாளர்கள் 584 படகுகளில் கச்சத்தீவை அண்மித்த பகுதியில் கடற்தொழிலில் ஈடுப்பட்டிருந்த […]

இந்தியா

பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் சசிகலா.

அதிமுகவின் பொதுச்செயலாளராக இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் சசிகலா முறைப்படி பொறுப்பேற்றார். போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து இன்று மதியம் ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் அதிமுக பொதுச்செயலாளருக்கான இருக்கையில் அமர்ந்து கோப்புகளை பார்வையிட்டுள்ளார். இதன்போது, சசிகலா முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போன்ற சிகை அலங்காரத்துடன் காணப்பட்டுள்ளார். இவரை பின்பக்கமாக இருந்து பார்த்த தொண்டர்களுக்கு ஜெயலலிதாவா, சசிகலாவா என சந்தேகத்தை வரவழைப்பதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. […]

இந்தியா

அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா – சசிகலா கோஷ்டி இடையே மோதல்.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர் மற்றும் வழக்கறிஞரை சசிகலா நடராஜனின் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கினர். இதில் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அதிமுக பொதுக்குழு நாளை சென்னையில் கூடுகிறது. இப்பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலராக தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்பதில் மன்னார்குடி கோஷ்டி தீவிரமாக இருக்கிறது.ஆனால் சசிகலாவுக்கு கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சசிகலாவை எதிர்த்து சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

இந்தியா

நக்கீரனின் புதிய புகைபடமா? திமுக தலைவரின் வைத்தியசாலை படம்.

2009 ம் ஆம் ஆண்டு மே மாதம் தலைவர் பிரபாகரன் இறந்த செய்தி வெளியாகிய போது அவர் தான் இறந்த செய்தியை தொலைக்காடசியில் பார்த்துகொண்டிருப்பது போன்று ஒரு படத்தை வெளியிட்டு மக்களை குழப்பிய திமுக ஆதரவு பத்திரிகை நக்கீரன் இப்பொழுது தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதி நலமடைந்து வருவதாகவும் அவர் கலைஞர் தொலைக்காடசியை பார்த்துகொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. மறைந்த அதிமுக தலைவர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வைத்தியசாலையில் சிகிச்சை […]