இந்தியா

தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாட்டம்: போலீசார்-வக்கீல்கள் வாக்குவாதம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இன்று 56 வது பிறந்த நாள். இதை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தடா வழக்கறிஞர் மனோகரன் தலைமையில் 25 வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் பிறந்த நாளை கொண்டாடினர். கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நீதிமன்ற வளாகத்திற்குள் கொடி,தோரணம் கட்டினர். போலீசார் வந்து இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று எச்சரித்தனர். இது எங்கள் இடம். இது எங்கள் இஷ்டம் என்று போலீசாருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்தனர். சென்ற ஆண்டு இதே நாளில் […]

இந்தியா

சீமான் மீதான வழக்கின் விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இனவெறி சிங்கள கடற்படையை கண்டித்து குரல் கொடுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தமிழன் சீமான் அவர்களின் கைதை எதிர்த்து அவருடைய சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை கடந்த நான்கு மாதங்களாக வழக்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது இந்நிலையில் கடந்த […]

இந்தியா

தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் – பழ. கருப்பையா

கணினிப் பயன்பாட்டில் தமிழ் மொழியின் எழுத்துக்களை ஒரே மாதிரியாகப் பயன்படுத்த “TAMIL ALL CHARACTER ENCODING 16″ மென்பொருளில் ஜ, ஷ, க்ஷ, ஸ, ஹ என்னும் (வடமொழி) கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதை முதலில் கவனிக்காமல் இருந்துவிட்டு, அப்புறம் ஏன் இப்போது பின்வாங்குகிறார் முதல்வர் கருணாநிதி” என்று கேட்கிறது ஒரு குரல்! ஆகா…! முதல்வர் காலம் க்டந்தாவது தமிழ் குறித்து நல்லறிவு பெற்று, எதிர்க்கவேண்டிய வட மொழி எழுத்துகளை எதிர்திருக்கிறாரே என்று களிப்பேருவகை அடைந்தோம்! கருணாநிதி மத்திய […]

இந்தியா செய்திகள்

டக்ளஸ் தேவானந்தா ஒரு தேடப்படும் குற்றவாளியே – சென்னை நீதிமன்றம்

முன்பு சென்னையில் தங்கியிருந்தபோது கொலை, கொள்ளை மற்றும் குழந்தை கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட, இலங்கையின் இப்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு தேடப்படும் குற்றவாளியே என சென்னை நீதிமன்றம் அறிவித்துள்ளது. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்நாட்டில் தங்கி இருந்தபோது 1986-ம் ஆண்டில் சென்னை சூளைமேட்டில் துப்பாக்கி சூட்டில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை 4 வது கூடுதல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. […]

இந்தியா ஒலி-ஒளி செய்திகள்

ராஜபக்சே உருவத்தை விளக்குக் கம்பங்களில் கட்டித் தொங்கவிடும் தமிழ் உணர்வாளர்கள்

ஒரு லட்சம் தமிழ்ச் சொந்தங்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்த சிங்கள இனவெறியன் ராஜபக்சேவுக்கு இரத்தினக் கம்பளம் விரித்து, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது தமிழர் விரோத இந்திய மத்திய அரசு. கற்பழித்துக் கொல்லப்பட்ட தமிழ்ச் சகோதரிகள்- விண்ணிலிருந்து வீசப்பட்ட கொத்துக்குண்டுகளால் செத்துமடிந்த குழந்தைச் செல்வங்கள்- ஓடஓட விரட்டிக் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள்- என்று ராஜபக்சே கும்பலுக்கு போர்க்குற்றத்தின் கீழ் கடும் தண்டனை கிடைக்க ஓராயிரம் காரணங்கள் இருக்கின்றன. [mp3player width=300 height=100 config=tamilnadumodrajapaksa.xml playlist=tamilnadumodrajapaksa.xml] காமன்வெல்த் போட்டிக்கு […]