இந்தியா இலங்கை

காரைநகர் கடலில் 17 இந்திய மீனவர்கள் கைது.

இலங்கைக் கடற்பரப்பினை அண்மித்த காரைநகர் கடல்பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேரை, 3 விசைப்படகுடன் காங்கேசன்துறைக் கடற்படையினர் புதன்கிழமை (21) இரவு கைதுசெய்துள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார். கைதான மீனவர்கள் அனைவரும் புதுக்கோட்டை மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். கைதான மீனவர்கள் விசாரணையின் பின் கடற்றொழில் நீரியல்வளத்துறை மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியா

கற்பனைகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை… வைகோவுக்கு ஸ்டாலின் பதில்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் அபரிமிதமான கற்பனைகளுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை என்று, தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்‌. தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதால் சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று கேட்டறிந்து வருகின்றனர். அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த 17 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு […]

இந்தியா

இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் கருணாநிதி… மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் தேறி வருகிறார். இன்னும் 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார் என அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதால் சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவர் எளிதாக மூச்சு விடும் வகையில் டிரக்கியோஸ்டோமி சிகச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் மருத்துவமனை சென்று கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர். […]

இந்தியா

ஜெயலலிதாவின் மரணச் செய்தியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 597 ஆக அதிகரிப்பு

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமான செய்தியை கேள்வியுற்ற அதிர்ச்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 597 ஆக அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க தெரிவித்துள்ளது. இதேவேளை, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டு வருவதாக அ.தி.மு.க குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாக கடந்த 5ஆம் திகதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்டது. அவர் இறந்த செய்தியை கேள்வியுற்ற அதிர்ச்சியில் அன்று முதல் அவரது ஆதரவாளர்கள் மாரடைப்பு மற்றும் ஏனைய காரணங்களால் மரணமடைந்து வருகின்றனர். […]

இந்தியா இலங்கை தமிழ்

ஈழமகாகாவியம் எழுதுவதை என் பெரும்பணியாகக் கருதுகிறேன் : முல்லையில் வைரமுத்து

முல்லைத்தீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். இதன்போது சிறப்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து “ஈழ மகாகாவியம் எழுதுவதை என் வாழ்நாளின் பெரும்பணியாகக் கருதுகிறேன்” எனக் குறிப்பிட்டார். கவிஞர் வைரமுத்து பேசியதாவது, இந்தத் தியாகத் திருமண்ணில் நான் உணர்ச்சிமயமாக இருக்கிறேன். என் பேச்சு நிறைவடைவதற்குள் இருதயமே உடைந்துவிடாதே, என் கண்ணே கலங்கிவிடாதே என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். ஆசியாவிலேயே அதிகம் கல்வி கற்ற இனம் இலங்கைத் […]

இந்தியா இலங்கை தமிழ்

தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத பன்னிரெண்டாம் நாள்-26-09-1987

“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்துவிட்டது!திடீரென்று மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் […]

இந்தியா இலங்கை தமிழ்

தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத பதினோராம் நாள்-25-09-1987

“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்றன. […]

இந்தியா இலங்கை தமிழ்

தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத பத்தாம் நாள்-24-09-1987

“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” பெற்றோர் – பிள்ளைகள் – சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது. ஆனால், […]

இந்தியா இலங்கை தமிழ்

தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஒன்பதாம் நாள்-23-09-1987

“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. கூ…….கூ…..குக்….கூ……. அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான்,திலீபனை […]

இந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத எட்டாம் நாள்-22-09-1987

“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவினர் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் […]