இலங்கை

மகிந்தவில் தொங்கி நிற்கும் கருணாவின் கட்சி குண்டர்கள்!

மட்டக்களப்பில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைவராகவும், இராணுவ புலனாய்வு செயல்பாட்டாளர் கமலதாஸ் என்பவரை செயலாளராகவும் கொண்டு மட்டக்களப்பில் மட்டும் ஏற்படுத்திய புதிய அரசியல் கட்சியான “தமிழர் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு” குண்டர்கள் மன்னிக்கவும் தொண்டர்கள் நேற்று 24/05/2017ல் முன்னாள் ஐனாதிபதி மகிந்தராஷபக்‌ஷவை கொழும்பில் சந்தித்து எதிர்கால கிழக்குமாகாணசபை மற்றும் உள்ளூராட்சிசபை தேர்தலில் எப்படி குழுபறிக்கலாம் என்ற ஆலோசனையை மகிந்தராஐபக்‌ஷவிடம் இருந்து பெற்றனர்.

இலங்கை

விடுதலைபுலிகளின் தலைவர் பிராபாகரனுக்கு மரண அறிவித்தல் போஸ்டர்

விடுதலைபுலிகளின் தலைவர் பிராபாகரனுக்கு மரண அறிவித்தல் போஸ்டர்  வெளியிட்ட சிங்களவர்கள்;  போஸ்டர்  சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவல நாள் அன்று தமது வெற்றியை கொண்டாடிய சிங்களவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிராபாகரனுக்கு மரண அறிவித்தல் போஸ்டர் அடித்து வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர்.

இலங்கை

நீரில் மூழ்கும் அபாய கட்டத்தில் இலங்கை பாராளுமன்றம்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நியவன்னா ஓயவின் நீர்மட்டம் வேகமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பாராளுமன்றம் நீரில் மூழ்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை

அன்று பெண் புலி போராளி.. இன்றோ இராணுவ வீராங்கனை! போராளிகளின் சோகக்கதை

சுமார் மூன்று தசாப்தங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் நடை பெற்று வந்த யுத்தம் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த யுத்தத்தில் மக்கள் இழந்தவை ஏராளம். வார்த்தைகளால் விபரிக்க முடியாத துன்பங்களை பாதிக்கப்பட்ட மக்கள் அனுபவித்துள்னர். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழ்

புலிகளின் நிதியை உள்வாங்கவா… பணமாற்று கட்டுப்பாட்டு சட்டமூலம்.?

சீன முதலீடுகளை விட புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளே இலங்கைக்கு உகந்தது என்று நோர்வேயின் எரிக் சொல்ஹிம் இந்திய ஊடகத்திற்கு குறிப்பிட்டிருந்தார். இதனை அங்கீகரிக்கும் வகையில் விடுதலை புலிகளின் நிதியை சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே அரசாங்கம் பணமாற்று கட்டுப்பாட்டு சட்டமூலத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்தியா இலங்கை

இலங்கைக்கு எதிராக முதல்அறிக்கை வௌியிட்டுள்ளார் சசிகலா!

இலங்கைக்கு எதிராக தனது முதல் அறிக்கையை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்களை விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. மேலும், அத்துமீறி கடற்தொழிலில் ஈடுப்பட்டதாக கூறி கடந்த 4ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் 10 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அண்மையில் ராமேசுவர கடற்தொழிலாளர்கள் 584 படகுகளில் கச்சத்தீவை அண்மித்த பகுதியில் கடற்தொழிலில் ஈடுப்பட்டிருந்த […]

இலங்கை

பலாலி விமானத்தளம் பிராந்திய தளமாக அபிவிருத்தி செய்யப்படும்!- ரணில்

யாழ். பலாலி விமானத்தளம், பிராந்திய விமானத்தளமாக அபிவிருத்திசெய்யப்படும். அது இலங்கைக்கு மாத்திரமல்லாமல் தென்னிந்தியாவுக்கும் சேவைகளைமேற்கொள்ளும் என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு தமிழ் பேசும் வடக்கு பகுதியை தொடர்புபடுத்தும்வகையில் இந்தியா அதனை அபிவிருத்தி செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், காங்கேசன்துறை துறைமுகம்அபிவிருத்தி செய்யப்படும்போது தமிழகத்துடனான தொடர்பு மேலும் அதிகரிக்கும் என்று அவர்சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை திருகோணமலை துறைமுகம் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானியமுதலீடுகளின் கீழ் அபிவிருத்தி […]

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய நடைமுறைகள்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை விஸ்தரிக்கப்படுவதால், அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு விமான நிலைய செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் விமான நிலைய செயற்பாடுகளின் காரணமாக பணி நேரங்களில் மாற்றம் செய்யப்படவுள்ளது. விமான பயணத்திற்காக வரும் பயணிகள் குறைந்த பட்சம் 5 மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்தில் வருமாறு பயணிகளிடம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். விமான நிலையம் மூடப்படும் காலப்பகுதியினுள் நாள் ஒன்று 20 பயணங்கள் இரத்து செய்யப்படவுள்ளன. விமான நிலைய […]

இந்தியா இலங்கை

காரைநகர் கடலில் 17 இந்திய மீனவர்கள் கைது.

இலங்கைக் கடற்பரப்பினை அண்மித்த காரைநகர் கடல்பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேரை, 3 விசைப்படகுடன் காங்கேசன்துறைக் கடற்படையினர் புதன்கிழமை (21) இரவு கைதுசெய்துள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார். கைதான மீனவர்கள் அனைவரும் புதுக்கோட்டை மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். கைதான மீனவர்கள் விசாரணையின் பின் கடற்றொழில் நீரியல்வளத்துறை மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை

“உரையாற்ற ஐந்து நிமிடங்கள் மாத்திரமே”-அவைத் தலைவர் சி.வி.கே.

இன்று இடம்பெறுகின்ற வடமாகாண சபை அமர்வில் உரையாற்றுகின்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் 5 நிமிடங்கள் மாத்திரமே உரையாற்ற வழங்கப்படும் என அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் வரவு – செலவுதிட்டம் தொடர்பான விவாதம் செவ்வாய்க்கிழமை (20) முதல் இடம்பெற்று வருகிறது. இதன்படி, இன்று வியாழக்கிழமை (22) விவசாய அமைச்சு தொடர்பான விவாதம் இடம்பெறுகின்றது. இன்று அமர்வுகள் ஆரம்பமாகியபோது, இன்று உரையாற்றுகின்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் 5 நிமிடங்கள் மாத்திரமே உரையாற்ற வழங்கப்படும். அதற்குள் அவர்கள் தெரிவிக்கவேண்டிய கருத்தைத் […]