இலங்கை தமிழ்

மாவீரர் நாள் நிகழ்வினை மாற்றியமைக்க முனையும் கஜேந்திரகுமாரை கண்டிக்கும் போராளிகள்.

தமிழீழவிடுதலைப் போராட்டத்தில் வித்தான போராளிகளை நினைவுகூறுவதற்காக தமிழீழ தேசியதலைவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மாவீரர்நாளில் மாற்று இயக்கத்தினரையும் நினைவுகூறப்போவதாக அறிவித்த கயேந்திரகுமாரின் கருத்தை வன்மையாக கண்டித்து தம்ழ்த்தேசிய சனநாயக போராளிகள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. கயேந்திரகுமாரின் கட்சியினருக்கு என கூறி ரிசிசி வன்முறைக்குழுவினர் நிதிசேகரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கண்டன அறிக்கை! தமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சி. எமது மாவீரர் நாள் நிகழ்வினை மாற்றியமைக்க முனையும் அ.இ.த.கா.கட்சியின் தலைவரான திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம்! எமது தேசியத் […]

இலங்கை தமிழ்

டடி முகாம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய சனநாயக போராளிகளின் துணிச்சலான மாவீரர் நாள் நிகழ்வுகள்!

மக்களின் குடிமனைகளிலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றருக்கும் குறையாத தூரத்தைக்கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதியில் போலியான தமிழ்த்தேசியவாதிகளின் கண்களில் படாது முற்றுமுழுதான போராளிகளையும்,மாவீரர் குடும்பங்களையும் மட்டுமே உள்ளடக்கி மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வானது எமது தமிழ் தேசிய சனநாக போராளிகளின் தனித்துவமான இறுமாப்பையே எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. வன்னியிலுள்ள ஏனைய துயிலும் இல்லங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில்தான் இருந்துவருகின்றது.ஆனால் டடி முகாம்போன்ற துயிலுமில்லங்கள் ஒன்று இரண்டே உள்ளன’ஆயினும் அவைகள் இராணுவத்தின் பூரண பிடிக்குள் இருந்துவருகின்றன. எனவே இம்முறை […]

இலங்கை தமிழ்

விடுதலைப் புலிகளால் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலைப் புலிகளுக்கெதிராக ஒருங்கிணைக்கும் ஒட்டுக்குழுவினர்!

துரோகி கருணாவினதும் அனந்தியினதும் நீலன் அணி எனும் ஒட்டுப்படைகளினதும் வழித்தோன்றலே க.இன்பராசா எனும் நபர்! புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்ட நபர்களின் அமைப்பானது எப்படி ஓர் அரசியல் கட்சியாக தன்னை மாற்றியமைக்க துணிந்தது..? திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த க.இன்பராசா என்பவர் தான் இயக்கத்தில் இணைந்த சில வருடங்களிலேயே பெண்களுடன் தகாதமுறையில் பழகியதன் காரணமாக 1997ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகளால் தண்டிக்கப்பட்டு கலைக்கப்பட்டவராவார். இவர் வன்னியின் இரணைப்பாலை கிராமத்திலுள்ள ஒரு பெண்ணை 1998ம் ஆண்டு காலப்பகுதியில் மணம்முடித்து ஒருசில வருடங்களில் […]

இலங்கை தமிழ்

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அம்பாறை செயற்பாட்டாளர் வடிவேல் சசிதரன் அக்கட்சியிலிருந்து தப்பியோட்டம்! -எல்லாளன்

ஜ.போ.கட்சியின் மட்டு,அம்பாறை மாவட்டங்களின் இணைப்பாளர் திரு.பிரபா அவர்களின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் வ.சசிதரன்! சில வாரங்களுக்கு முன்னர் வ.சசிதரன் என்பவரை ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் தமது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தி அவரை தற்காலிக பணிநீக்கம் செய்திருந்தனர். இதன் காரணமாக அவர் மனவிரக்தியடைந்து கருணா குழுவின் புலனாய்வு பணிக்காக கருணாவினால் தந்திரமாக அமர்த்தப்பட்டு பிரயாணித்துவரும் க.இன்பராசாவின் தலைமையிலான விசர்க்குழுவில், மன்னிக்கவும் புலனாய்வுக்குழுவில் குறித்த வ.சசியும் தன்னை இணைத்துக்கொண்டார். மேற்குறிப்பிட்ட சசி என்பவரை கருணா கிழக்கில் தான் பிரிந்துநின்றவேளை தனது […]

இலங்கை தமிழ்

வவுனியாவில் நீலன் அணியினால் த.வி.புலிகளின் பாணியில் வெளியிடப்பட்ட தூஷண பிரசுரம்.

சுவிஸ்,லண்டன் மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளில் இருந்து செயற்பட்டுவரும் ராயு,பார்த்தீபன்,வீமன் ஆகிய மூன்று ஈனத்தமிழ் இலங்கை புலனாய்வு நபர்களின் வழிநடத்துதலில் தாயகத்தில் இவர்களின் பணத்திற்கு சோரம்போன ஒருசிலரைவைத்து நேற்றையதினம் வவுனியாவில் புலிகளின் பாணியில் வடிவமைக்கப்பட்டு அந்நபர்களால் வீவப்பட்ட  துண்டுப்பிரசுரங்களின் உண்மையான சூத்திரதாரிகளாவர். இவர்கள் அனைவரும் வன்னியின் முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும்,தமது மாவட்டம் சார்ந்த பெயர்களில் முகநூல்களை திறந்து பிரதேசவாத பாணியில் இயங்கிவருவதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முகநூல்களான “முல்லைமண்,முல்லைத்தீவு முல்லை,புலனாய்வுத்துறை மற்றும் புலனாய்வுத்துறை தலைமை” எனும் நான்கு […]

இலங்கை தமிழ்

கள்ள முகநூல்களில் படையெடுத்துள்ள கோட்டபாயவின் புலனாய்வு அணிகள்! எல்லாளன்

புலனாய்வுத்துறை,முல்லை மண்,முல்லைத்தீவு முல்லை,புலனாய்வுத்துறை தலைமை, தமிழ் பிரபா,வந்திய தேவன்,ஈழம் புரட்சி போன்ற முகனூல்கள் தற்போதுவரை 100%எம்மால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது-  விழிப்பின்றேல் நாம் வீழ்வது உறுதி! உண்மை நிலையை உணர்ந்து, துரோகத்தை அறிந்து,சிங்கள புலனாய்வாளர்களுடன் தம்மை ஒற்றர்களாக இணைத்து புலத்தில் புலிகளாக பிரயாணிக்கும் “விசேட அணி” எனும் ஒருசில தமிழ் துரோகக் கைக்கூலிகளை எமது புலம்பெயர் மக்களும்,தாயக மக்களும் இவர்களை அடையாளம்கண்டு மிகவும் விழிப்புடன் தாம் பிரயாணிக்கவேண்டியது இன்றைய நெருக்கடியான காலகட்டத்திற்கு மிகவும் அவசியமானது. கடந்த 2009ம் ஆண்டிற்குப் பின்னர் […]

இலங்கை டென்மார்க் தமிழ் புலம்பெயர்

மரண அறிவித்தல் : அமரர் விஜயரட்ணம் சுதாகரன் (சுதா )

கிரியை: – வெள்ளிக்கிழமை 25/08/2017, 10:00 மு.ப முகவரி: – Vestre Kirkegård, Silkeborgvej 40, 8700 Horsens, Denmark தகனம்: – வெள்ளிக்கிழமை 25/08/2017, 12:30 பி.ப முகவரி: – Vestre Kirkegård, Silkeborgvej 40, 8700 Horsens, Denmark அமரர் விஜயரட்ணம் சுதாகரன் (சுதா ) வாடகை கார் நிறுவன (TAXI) உரிமையாளர் Horsens. மலர்வு 12.08.1967                         […]

இலங்கை டென்மார்க் தமிழ்

டென்மார்க்கில் சாவடைந்த வசந்தன் அவர்களை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் என விடுதலைப்புலிகள் கௌரவிப்பு!

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் மைக்கேல் வசந்தன் அவர்களுக்கு எமது வீரவணக்கம். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் விடுதலைப் பற்றுறுதியை வெளிப்படுத்தும் செயற்பாடுகளில் முன்னின்று உழைத்த ஒரு அற்புத மனிதனை நாம் இன்று இழந்திருக்கின்றோம். எமது இயக்கத்தின் முதல் மகளிர் படையணி தளபதியாகவிருந்த மேஜர் சோதியா அவர்களின் சகோதரனான வசந்தன் அவர்கள் எமது தேசியத்தலைவரின் நம்பிக்கையையும்,நன்மதிப்பையும் பெற்றிருந்தவர். மேஜர் சோதியா அவர்கள் எமது இயக்கத்தின் முதல் மகளிர் படையணித் தளபதியாக தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்டிருந்தவர். இந்திய இராணுவத்துடனான போர்களில் மணலாற்றுக்காட்டுப்பகுதியில் […]

இலங்கை சிறப்புச்செய்தி டென்மார்க் தமிழ் புலம்பெயர்

மாவீரர் மேஜர் சோதியா அவர்களின் சகோதரர் வசந்தனுக்கு டென்மார்க் தமிழர் நடுவத்தின் கண்ணீர் அஞ்சலிகள்.

கண்ணீர் அஞ்சலி அமரர் வசந்தன் Grindsted, Denmark மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் என்ற இயற்பெயரை கொண்ட திரு வசந்தன் அவர்கள் சாவடைந்த செய்தி எமக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றது. வசந்தன் அவர்கள் மூத்த போராளி மாவீரர் மேஜர் சோதியா அவர்களின் சகோதரர். அவருடைய சகோதரர் ரூபகுமாரும் தமிழீழவிடுதலையை நெஞ்சினில் சுமந்து ஆரம்பகாலத்தில் ஈபிஆர்எல்எப் அமைப்புடன் தன்னை இணைத்து செயல்பட்டிருந்த நிலையில் விபத்து ஒன்றில் சாவடைந்திருந்தார். வசந்தனின் தாய் தந்தையினர் தமிழீழ தேசியதலைவர் மேதகு பிரபாகரனின் நன்மதிப்பை பெற்றிருந்ததுடன் […]

இலங்கை தமிழ் புலம்பெயர்

வெள்ளைப்புலியை எலியாக்கிய TCCயினர். – எல்லாளன்

எமது தலைவரால் போற்றப்பட்ட வெள்ளைப்புலியை இன்று TCCயினர் தாம் பிடித்து வெள்ளை எலியாக்கி அடைத்து வைத்துள்ளார்கள்! 2009வரை புலத்தினில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் மக்களிடம் திரட்டப்பட்ட புலிகளுக்கான நிதிகள் அனைத்தும் அடேல் என்கிற முன்னாள் வெள்ளைப் புலிக்குத்தான் தாம் செலவழித்தோம் என்ற செய்தியை அந்த வெள்ளைப்புலியின் இறுதிமூச்சு அடங்கிய பிற்பாடு அவரைவைத்து ஏப்பம்விட்டுவரும் புலம்பெயர் அமைப்பார் நிச்சையம் தாம் எதிர்காலத்தில் சொல்லுவார்கள் என்பதை முன்கூட்டியே இங்கே பதிவுசெய்ய விரும்புகின்றோம். மேலும் போர் முடிவுற்று இன்றுவரை எட்டு ஆண்டுகள் […]