Category: சிறப்புச்செய்தி

Post

சீமானா?? மாயமானா?? – சாத்திரி

அண்மைக்காலத்தில் சமூகவலைத்தளங்களிலும் இணையப்பக்கங்கள் என எங்கும் சர்ச்சைக்குரிய விவாதங்களிற்கு சொந்தக் காரராக இருப்பவர் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.இவர் சர்ச்சைக்குள்ளாவதற்கு அதிக காரணங்கள் இவர் கட்சி நடாத்துவதே ஈழத் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மையமாக வைத்து என்பதால்தான்.அதே நேரம் தமிழ்நாட்டு அரசியல் கட்சி ஒன்றிற்கு  புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களால் இணையக் கிளைகள் நடாத்தப் படுவதும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே.அதென்ன இணையக் கிளைகள்...

Post

நினைவு கூரப்பட்ட நாசிப்படுகொலைகளும்- மறக்கப்பட்ட கிழக்கு படுகொலைகளும்- இரா.துரைரத்தினம்

ஜேர்மன் ஜனாதிபதி Joachim Gauck இரண்டாம் உலகப்போரின் போது நாசிப்படைகளால் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டின் Oradour-sur-Glane கிராமத்திற்கு அண்மையில் விஜயம் செய்து கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ஜேர்மன் நாட்டின் நாசிப்படைகளால் 1944ஆம் ஆண்டு யூன் 10ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த படுகொலையில் 247 சிறுவர்கள் உட்பட 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை நடந்த பின்னர் இந்த பகுதிக்கு செல்லும் முதலாவது ஜேர்மன் அரசுத்தலைவர் இவராகும். இவருடன் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஹொய்ஸ் ஹொலண்டே (François...

Post

எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்.!

22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். எல்லாளனைத் தோற்கடித்ததாகப் பெருமைகொண்ட சிங்கள இனத்திற்கு, யார் எல்லாளன் என்பதை தமிழீழ தேசியத் தலைவர் காண்பித்த நாள் அது. ஏன் இந்த உலகமும் எல்லாளனை அறிந்துகொண்டது அந்த நாளில்தான். இந்த எல்லாளன் நடவடிக்கை ஒரு சில மணி நேரங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டபோதும், இதற்கான திட்டமிடல்களும், பயிற்சிகளும், வேவுகளும் மிக நீண்ட காலமாக இடம்பெற்றன. இந்த வெற்றிக்காக...

Post

ஒன்றுபட முனைந்த பரிதியும் அதை தடுத்து நிறுத்தப் போராடிய ரகுபதியும்,தனமும்?

சாத்திரி அவர்கள் எழுதும் கட்டுரையை காலத்தின் தேவை கருதி இங்கு பிரசுரிக்கிறோம். தலைமைச் செயலகம், நாடு கடந்த அரசு, அனைத்துலகச் செயலகம், ஆகியன ஒன்றிணைந்து புலம் பெயர் தேசங்களில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நகர்த்தவேண்டும் என கடந்த வருடம் தொடராக பிரான்சில் நடந்த பேச்சு வார்த்தைகளில் சிலதில் நானும் கலந்து கொண்டிருந்தேன் அந்த பேச்சு வார்த்தைகள் அனைத்துலக செயலகத்தின் அடம் பிடிப்பால் தோல்வியில் முடிந்து போக, நானும் பின்னர் அது பற்றிய அக்கறை கொள்ளவில்லை, ஆனால் இந்த...

Post

"ஒற்றுமையாகுங்கள் அல்லது ஒதுங்கி வழிவிடுங்கள்"-தமிழீழ எல்லாளன் படையின் இறுதி எச்சரிக்கை

“ஒற்றுமையாகுங்கள் அல்லது ஒதுங்கி வழிவிடுங்கள்! இறுதி எச்சரிக்கை!!” என்ற தலைப்பில் எல்லாளன் படையின் நடவடிக்கைப் பொறுப்பாளர் த.மணியரசனின் பெயரில் அறிக்கைவெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், “விடுதலைப் புலிகளின் வெவ்வேறு பிரிவுகளை கடந்த டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஒரு ஒற்றுமைக்குள் வருமாறு நாம் கேட்டிருந்தோம். இதற்கான பதிலை ஒரு சில பிரிவுகள் எமக்கு ஆக்க பூர்வமாக தெரிவித்திருந்தனர். ஆனால், விடுதலைப் புலிகள் நெடியவன் அணியின் ‘அனைத்துலக கட்டமைப்பு’, தாமே விடுதலைப் புலிகள் என அறிவித்துள்ளதாகவும், தனித்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும்...

Post

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ தேசிய மாவீரர் நாள் அறிக்கை.

பெயருக்காகவோ புகழுக்காகவோ அல்லது போர்மீது கொண்ட பற்றுதலாலோ எமது மாவீரர்கள் களமாடவில்லை என இன்றைய அதிகாரபூர்வ மாவீரர் நாள் செய்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். தமிழீழ மாவீரர் நாள் – 2012 தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/07/12 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27/11/ 2012. அன்பிற்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாய் விளங்கிய நாயகர்களைப் பூசிக்கும் புனிதநாள். எம்மண்ணை ஆக்கிரமித்து எமது மக்களைக் கொன்றொழிக்கப் படையெடுத்த...

Post

கடைசி அடி. சாத்திரி

குறிப்பு. “கடைசி அடி சிறுகதை கடந்த மூன்று வாரங்களிற்கு முன்னரே எழுவரை சஞ்சிகைக்காக எழுதி அனுப்பி விட்டிருந்தேன். எனவே இதனை அண்மைய பாரிஸ் சம்பவத்துடன் போட்டு குளப்பி கொள்ளதோவையில்லை. ஆனாலும் கதையில் கூறப்பட்டுள்ளது போல் நடப்பதற்கான சாத்தியங்களை மறுப்பதற்கும் இல்லை.” – சாத்திரி “சூரிச்” புகையிரத நிலையத்தினுள் நுழைந்த அமுதன் அங்கிருந்த சிற்றுண்டி சாலையை நோக்கி நடந்தான். அங்கு இருந்த கதிரைகளில் பிஸ்கற்றை சாப்பிட்டபடி விளையாடிக்கொண்டிருந்த மாலதியும் தமிழினியும் பல நாட்களிற்கு பின்னர் அமுதனைக் கண்டதும், அப்பா...

Post

நான் ஒரு விபச்சாரி (ஆனந்த விகடன் செவ்விக்கான) எதிர்வினை.

ஆனந்த விகடன் உள்ளிட்ட பிற தளங்களில் நடக்கும் பிரச்சாரத்திற்கான பதில் ஆனந்த விகடனில் வெளியாகி இருக்கும் பேட்டியை, ஏற்கனவே டெசோ மாநாட்டில் மையப்படுத்தப்பட்ட மறுவாழ்வு, மறு சீரமைப்பு என்பதன் தொடர்ச்சியாக‌வே எங்க‌ளால் புரிந்து கொள்ள‌ முடிகிற‌து. விடுதலை கோரிக்கை என்பது எவ்வகையிலும் உயிர்ப்போடு இருக்கக் கூடாது என்பதற்காக நடைபெறும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியை விகடன் செய்திருப்பதுதான் வேதனை. இன்று உலக நாடுகள் ‘தமிழீழ விடுதலை’ என்கிற கோரிக்கையை எப்படி புதைப்பது என்று திணறுகிறார்கள்… புலம்பெயர் அமைப்புகளை மனித...

Post

எரிக் சொல்கெய்மின் கருத்துக்கான எதிர்வினை.

முன்பு விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்குமிடையில் பேச்சுக்கள் நடைபெறுவதற்கு நடுநிலையாளராகப் பணியாற்றிய நோர்வே நாட்டைச் சேர்ந்த திரு. எரிக் சொல்கெய்ம் அவர்கள் அண்மையில் பி.பி.சி செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய நேர்காணலில், எமது அமைப்பின் தலைமை மீது அபாண்டமாகப் பழிசுமத்தியது தொடர்பாக எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டியது தமிழீழ விடுதலைப் புலிகளாகிய எமது கடமையாகும். அந்த நேர்காணலில், தாம் ஒழுங்கமைத்த சரணாகதி ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளாமல் விடுதலைப் புலிகளின் தலைமை வீண்பிடிவாதம் பிடித்ததால்தான் தமிழ்மக்களுக்கு இப்பேரழிவு ஏற்பட்டதென்று திரு....

Post

பொட்டம்மான் தப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக் கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரான பொட்டம்மான் உயிருடன் தப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனை இராணுவ புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக இனவாத அரசியல்வாதி ஒருவர் தனது சகாக்களிடம் பதற்றத்துடன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போர் முள்ளிவாய்க்காலில் நிறைவடைந்தது. போரின் இறுதிக் கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும்...