இலங்கை டென்மார்க் புலம்பெயர்

நிதி சேகரிப்பில் மீண்டும் ரிரிசி கும்பல்.

தமிழீழ விடுதலைக்காக சேகரிப்பட்ட நிதிகளையும், சொத்துக்களையும் கையடகப்படுத்தியிருக்கும் ரிரிசி குழுவினர் நிதி சேகரிப்பில் மீண்டும் புலம்பெயர் நாடுகளில் ஈடுபடவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமது அல்லகைகளுக்கான கூட்டங்களை மிகவும் இரகசியமாக நடாத்தி வருகின்றனர். இப்பொழுது ரிரிசி குழுவினர் டென்மார்கை தளமாக கொண்டு மகேஸ் தலமையில் இயங்குகின்றனர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும், தமிழீழ விடுதலைப்புலிகளின் மௌனத்தையும் தொடர்ந்து முன்னால் போராளிகள் தாயக்த்திலும் புலம்பெயர் நாடுகளிலும் போரின் வடுக்களுடன் வாழ்ந்து வருகையில் ரிரிசி குழுவினர் தமிழீழ தேசிய சொத்துக்களையும் தமதாக்கி கொண்டு […]

speciel டென்மார்க் புலம்பெயர்

புலிகளின் குரல் வானொலிக்கு எதிரான சதி முயற்சியில் டென்மார்க் தமிழ்குழு.

டென்மார்க்கில் வசிக்கும் மகேஸ் எனப்படும் பொன்னம்பலம் மகேஸ்வரனின் தலைமையில் இயங்கும் மகேஸ்குழுவினர்களினால் மேற்கொள்ளப்படும் தமிழ் தேசவிரோத செயல்பாடு கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவீரர் கஸ்ரோ அவர்களின் தலைமையில் இருந்த அனைத்துலக தொடர்பகம் அல்லது ரிரிசி யினை கைப்பற்றியதனூடாக புலம்பெயர் நாடுகளில் இருந்த தமிழ் தேசிய சொத்துக்களை தம்வசப்படுத்தியுள்ளனர். இப்பொழுது இந்த குழுவில் முக்கிய நபராக செயல்படும் டென்மார்க் கேர்ணிங் நகரில் வசிக்கும் சசி என்பவர் ஊடாக புலிகளின் குரல் வானொலிக்கு எதிரான சதி முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலிகளின் குரல் […]

டென்மார்க்

விமானியாக பணி புரியும் டென்மார்க் தமிழ் பெண்.

பல சொந்த பாடல்கள் மூலம் பிரபலமாகிய ஈழத்து தமிழ் பெண்மணி அர்ச்சனா செல்லத்துரை அவர்கள் விமான பயிர்ச்சி முடித்து இப்பொழுது டென்மார்கில் விமானி ஆகியிருப்பது ஈழத்தமிழர்களுக்கு உலக தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விடயம்.

டென்மார்க்

ஐ.எஸ்.தீவிரவாதிகளின் வீடியோவை பார்த்து காதலனுடன் தாயாரை கொலை செய்த சிறுமி

டென்மார்க் நாட்டை சேர்ந்தவர் லிசா போர்ச் (வயது 15) இவர் அப்துல்லா என்ற வாலிபரை காதலித்து வந்தார். அப்துல்லா ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர். இவரது காதலுக்கு தாயார் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். ‘உன்னை விட வயது அதிகம் உள்ள நபருடன் பழகாதே’ என கண்டித்து உள்ளார். இந்த நிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகளிள் பிணையக்கைதிகளை தலையை வெட்டி கொல்லும் வீடியோக்களை யூடியூப் வழியாக லிசா பார்த்து உள்ளார் இந்தை தொடர்ந்து ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர தீர்மானித்துள்ளார். […]

டென்மார்க்

வடமாகாண முதல்வருக்கு கொலைமிரட்டல் விட்டவர்களுடன் அனந்தி சசிதரன் டென்மார்க்கில் இரகசிய சந்திப்பு.

தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு எதிரானவர்களின் ஏற்பாட்டில் தற்பொழுது ஜரோப்பிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நோர்வேயில் இருந்து பிரான்ஸ் செல்லும் பொழுது டென்மார்க்கிலும் தமிழ் தேசியகூட்டமைப்பிற்கு எதிரானவர்களுடன் ஒரு இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். நடைபெற்று முடிந்த வடமாகாணசபைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும் தேர்தலில் பங்குபற்றிய தமிழ் தேசியக்கூட்டமைப்பை வசைபாடியும் அறிக்கைகள் வெளியிட்ட இந்த குழுவினரின் இணையத்தளத்தில் மட்டுமே முதலவர் விக்கினேஸவரனுக்கு எதிரான கொலைமிரட்டல் வெளியிடப்பட்டிருந்தது. வடமாகாண சபைத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று […]

டென்மார்க்

தமிழர்கள் பெருமை மிக்க இனம் நாடுகடந்த அரசில் டெனிஸ் பிரதிநிதி புகழாரம்.

தமிழ் ஈழ இடைக்கால நிர்வாக அரசின் இரண்டாவது அமர்வுக்கான அங்குராப்பண நிகழ்வுக்கு வருகை தந்துள்ள அங்கத்தவர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். எனது பெயர்; ட்றோல்ஸ் றாவுன் [Troels Ravn] தற்போதைய டென்மார்க் அரசின் சமூக சனசாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினன். கல்வி சார்ந்த விடயங்களுக்குப் பொறுப்பானவன். நானொரு பாடசாலை அதிபருமாவேன். 1985ல் டென்மார்க்கிற்கு வந்த தமிழ் அகதிகளின் தொடர்பு பள்ளிக்கூடத்தினூடு உருவானது. தமிழர்களின் கல்வி ஆர்வமும் முயர்ச்சியும் அவர்கள் மட்டில் அசாதாரண ஈடுபாட்டை உருவாக்கியது. நீங்கள் […]

டென்மார்க் முக்கிய செய்திகள்

டென்மார்க்கில் கரும்புலிகள் நாள் நினைவு வணக்க நிகழ்வு.

டென்மார்க்கில் பில்லுண்ட் நகரத்தில் உள்ள திறந்த வெளியரங்கில் கரும்புலிகள் நாளாகிய வரும் சூலை மாதம் 5ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழீழ தேசத்தின் அக்கினிக்குஞ்சுகளுக்கான இந்த நினைவு வணக்க நிகழ்வு தமிழர் நடுவம் டென்மார்க்கின் அனுசரனையுடன் தமிழ்தேசிய நினைவேந்தல் அகவம் டென்மார்க்கால் ஒழுங்குசெய்ப்பட்டுள்ளது. தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தம்மை வெடியாக்கி வீரகாவியமான அனைத்து கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி வணக்கம் செலுத்த அனைவரும் அழைக்கப்டுகின்றனர். இடம்: BILLUND FRILUFT, Lærkevej 21, 7190 […]

டென்மார்க்

21ம் நூற்றாண்டின் மாபெரும் மனிதப்படுகொலை நினைவு – தமிழர் நடுவம் டென்மார்க்

முள்ளிவாய்கால் மனிதப்படுகொலையின் 4ம் ஆண்டு நிறைவு நினைவு நாளில் தமிழர் நடுவம் டென்மார்க் வெளியிட்டுள்ள அறிக்கை. முள்ளிவாய்க்கால் படுகொலையானது தமிழினத்தின் மீது சிங்கள அரசு புரிந்த இனப்படுகொலையில் மாபெரும் மனிதப்படுகொலைமட்டுமல்ல 21ம் நூற்றாண்டில் நடைபெற்ற மாபெரும் மனிதப்படுகொலையாகவும் உள்ளது. முள்ளிவாய்காலில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதும் தமிழ் இனத்தின் மீது சிறிலங்கா அரசு சகலவிதமான இனப்படுகொலையையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. தமிழ் மக்களின் நிலங்கள் சிறிலங்காபடைகளின் முகாம்களுக்கும் சிங்கள மக்களின் திட்டமிட்ட குடியேற்றத்திற்கும் என பறிக்கப்படுகின்றன. தமிழர்களின் கலாச்சார […]

டென்மார்க்

2013 இசை நட்சத்திரம் யார் ?

இசைப்பயண வளர்ச்சிக்கும் இசைத்தட்டுக்களில் பாடுவதற்கும் இனிய குரல்களை தேடும் பாடல் போட்டி ! இசை நட்சத்திரம் 2013 பில்லுண்ட் மாநகரில் காலம் 19 – 05 – 2013 – ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் kl.14.30 பாடுவோர் எல்லோரும் பாடுங்கள் பரிசில்களை தட்டிச்செல்லுங்கள் முடிவுத்திகதி 15 -05 – 2013 குறிப்பு ; பாடல்கள் கரோக்கிகளில் நீங்களே தெரிவு செய்து தரவேண்டும் இன்னுமொரு இன்ப அதிர்ச்சி ! 2013 கலைஞர் களம் இதே நாளில் ! இதே மேடையில்! […]

டென்மார்க் முக்கிய செய்திகள்

டக்கிளஸ் ஊடாக தாயக மக்களுக்கு உதிவி வழங்கும் டென்மார்க் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

டென்மார்க் அரசால் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் வங்கி கணக்குகள் 2008ம் ஆண்டு முடக்கப்பட்டதும் உலகச் சிறுவர் காப்பகம் என்னும் அமைப்பு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் (டென்மார்க் கிளை) உருவாக்கப்பட்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கணக்குகள் முடக்கியதற்கான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லாதமையால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு எதிரான வழக்கு கடந்த ஆண்டு தள்ளுபடிசெய்யப்பட்டது. உலகச் சிறுவர் காப்பகத்திற்கும் தமிழ்ர் புனர்வாழ்வுக் கழகத்திற்கும் எதுவித தொடர்புகளும் இருக்கவில்லை. மாறாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு போட்டியாகவே இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதாக பலரும் […]