கடந்த வருடம் பல லட்சம் தமிழர்களை புதைகுழியில் புதைத்த சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராசபக்ச இன்று தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஏற்றுக்கொள்வதையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்ளையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்பதுடன், ஏற்கனவே கலந்துரையாடப்பட்டது போன்று இணைந்துசெயற்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் சனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணம் குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, சனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் கையெழுத்திட்டு கடந்த வருடம் […]
தமிழீழம்
தமிழ் பெண்கள் மீது வன்முறைகளை தொடரும் சிறீலங்காப்படை
முல்லைத்தீவின் அளம்பிலில் மீள்குடியேறியுள்ள மக்களின் வீடுகளுக்கு செல்லும் ஸ்ரீலங்காப்படையினர் பெண்கள் மீதான வன்முறைகளில் ஈடுபட்டுவருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர கிராமமாக அளம்பில் கிராமம் காணப்படுகின்றது. கடல்தொழிலினை முதன்மைத்தொழிலாக கொண்ட மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றார்கள். ஸ்ரீலங்காப்படையினரின் போர் நடவடிக்கையினாலும் கடல்தொழில் செய்யும்போது ஸ்ரீலங்காப்படையினர் மேற்கொண்ட தாக்குதல்களினாலும் துணைவன்மார்களை இழந்த விதவைகளே பெருமளவில் காணப்படுகின்றார்கள். இவ்வாறு கடந்த மாதம் 19ம் 20ம் நாட்களில் அளம்பில் வடக்கு பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்களின் வீடுகளில் ஸ்ரீலங்காப்டையினர் புகுந்து சேட்டைகளில் […]
யாழ்ப்பாண சிறிலங்கனின் நடத்தையால் மாணவி பாடசாலையில் இருந்து வேளியேற்றப்பட்டார்.
ஒழுக்கீனமாக நடந்து கொண்டார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் யாழ்.சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஒருவர் பாடசாலையில் இருந்து இடை நிறுத்தப்பட்டு உள்ளார். யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த மாணவன் ஒருவருடன் உல்லாசமாக இருந்தார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு. இருவரும் உல்லாசமாக இருந்தமையை காட்டும் புகைப்படங்கள் இணையத் தளங்கள் பலவற்றிலும் கடந்த ஓரிரு வாரங்களாக உலா வந்து இருக்கின்றன. ஒழுங்கீனமாக நடந்தமை மூலம் பாடசாலையின் நற்பெயருக்கும், நன்மதிப்புக்கும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டார் என்று கல்லூரி நிவாகம் […]
"எமது மண் எமக்கே உரித்தானது"- யாழ் மக்கள்
தமிழீழத்தின் கலாச்சார தலைநகரமான யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றத்தை தடுக்குமுகமாக நாவற்க்குழி பகுதியில் குடியேறிய தமிழீழ மக்கள் தமது கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக கூறியுள்ளார்கள். சிறிலங்காவின் ஆக்கிரமிப்பால் இடம்பெயர்ந்து பல ஆண்டுகளாக ஏதிலிகளாக வாழ்ந்த தமிழ்மக்கள் இந்தப்பகுதியில் இப்பொழுது குடியேறியுள்ளனர். சிறிலங்கா அரசின் ஆதரவுடன் சிங்களமக்கள் கடந்த மாதம் யாழ்ப்பாணம் வருகை தந்து நாவற்குழி பகுதியில் குடியேறியிருந்தனர். இந்த பகுதிக்கு மேலும் பல சிங்களமக்களை குடியேற்றுமுகமாக சிறிலங்கா அரசு நாவற்குழியில் இருந்து சிறிலங்காவிற்கு இலகுவாக பிரயாணம் […]
தந்தை செல்வா நினைவுத் தூபி சிங்கள “சுற்றுலாப் பயணி”களினால் சேதமாக்கப்பட்டுள்ளது
யாழ் நகரப் பகுதியில் அமைந்திருக்கின்ற தந்தை செல்வா நினைவுத் தூபி இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளது அங்கு அலங்கரிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த மரங்கள் யாவும் வெட்டி எறியப்பட்டுள்ளன. முற்றுமுழுதான உச்ச பாதுகாப்பிற்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பல தரப்பிலும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே யாழ் பொதுசன நூலகத்திற்கு சென்றிருந்த சிங்கள சுற்றுலாப்பயணிகள் பொதுசன நூலகத்தை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தமை தெரிந்தண்து. சம்பவத்தின் போது நூலகத்தின் புத்தகங்கள் பலவும் எடுத்து வீசப்பட்டிருந்தன. […]
பன்னிரு வேங்கைகளின் 23ம் ஆண்டு நினைவு நாள்
1987ம் ஆண்டு இலங்கை, இந்திய சமாதான உடன்படிக்கை காலத்தில் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் கடற்கண்காணிப்பு பணியில் விடுதலைப்புலிகளின் “கடற்புறா” ரோந்துப்படகு ஈடுபட்டிருந்த போது இந்திய கடற்படையினால் வலுகட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்ட வேளையில் இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடித்து பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன்,அப்துல்லா, ரகு, நளன், ஆனந்தகுமார், மிரேஸ், அன்பழகன், ரெஜினோல்ட, பழனி, கரன், தவக்குமார் ஆகிய வேங்கைகளின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
அடித்துக்கொல்லப்பட்ட வி.புலிகள் உறுப்பினர் திடுக்கிடும் வீடியோ வெளியாகியுள்ளது
இலங்கை அரச படைகளால் சமீபத்தில் அடித்துக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலி நபர் ஒருவரின் படம் வெளியாகியிருந்ததை யாவரும் அறிந்ததே. தென்னை மரம் ஒன்றோடு சேர்த்து கட்டிவைத்து அடித்துக் கொலைசெய்யப்பட்ட இப் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இதன் காணொளி வெளியாகியுள்ளது. இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் War Without Witness என்கிற அமைப்பே தற்போது இக் காணொளிகளை வெளியிட்டுள்ளது.