புலம்பெயர்

மகிந்தவின் வருகைக்கு எதிராக லண்டன் விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம்

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரித்தானிய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக விமான நிலையத்தில் திடீர் போராட்டம் நடக்கவிருப்பதாக அறியப்படுகிறது. இன்று சிறிலங்கா இருந்து (சிறிலங்கா.நேரம்) மாலை 11.35 மணிக்கு UL 509 என்ற இலக்கமுடைய ஏர் லங்கா விமானத்தில் மகிந்த லண்டன் நோக்கிப் புறப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமான செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் கொழும்பில் இருந்து புறப்பட்ட UL509 விமானத்தில் மாலதீவு ஊடாக இன்று இலண்டன் நேரம் இரவு 19.45 மணிக்கு வந்தடைய இருந்த போது தற்போதய தகவல்களின் அடிப்படையில் தாமதமாக இன்று இரவு […]

புலம்பெயர்

மகிந்த பிரித்தானியா வருகை – எதிர்ப்புத் தெரிவிக்க பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு

தமிழர்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வர இருப்பதால், அவரது பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. ஒக்ஸ்போர்ட் சங்கத்தின் அழைப்பை ஏற்று பிரித்தானியா வரவுள்ள மகிந்த எதிர்வரும் 2ஆம் நாள் (02-12-2010) மாலை 6:00 மணியளவில் Oxford Union, Frewin Court, Oxford என்ற முகவரியில் பல்கலைக்கழக சமூகத்தின் முன்னிலையில் உரையாற்ற இருக்கின்றார். ஊடகங்களில் குறிப்பிட்டவாறு கடந்த மாதம் மகிந்த […]

புலம்பெயர்

"எல்லோரும் கரம்கோர்த்து விடுதலைத்தேரை இழுக்கவேண்டும்"- நோர்வே மாவீரர்நாள் நிகழ்வில் பெ.மணியரசன்

நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோவில் கார்த்திகை27  மிகவும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியாகவும் நடைபெற்றுள்ளது மூவாயிரத்துக்கு மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டு தேசவிடுதலைக்காய் விதையாய் வீழ்ந்த வீரருக்கு நெய்விளக்கேற்றி மலர்தூவி மரியாதை செலுத்தி தேசப்புதல்வர்களின் கனவை நனவாக்க விடுதலைப்பணியை முன்னெடுப்போமென உறுதியும் எடுத்துக்கொணடனர். அத்தோடு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் மாவீரர் கானங்களும் அன்னைபூபதி தமிழ் கலைக்கூடத்தின் மாணவிகள் வழங்கிய நிமிர்வு நாட்டிய நாடகமும் தமிழகத்திலிருந்து வருகை தந்த தமிழ்த்தேச பொதுவுடமைக்கட்சியின் செயலாளரும் தமிழீழ உணர்வாளருமான திரு பெ.மணியரசன் அவர்களின் எழுச்சிமிகு பேச்சும் மாவீரர் […]

புலம்பெயர்

பெல்ஜியத்தில் வரலாறு காணாதவகையில் தமிழ் மக்கள் மாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பெல்ஜியத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் 500ற்க்கும் மேற்பட்ட எமது உறவுகள் கலந்து கொண்டு உணர்வுபுர்வமாக கடைப்பிடித்தனர். பெல்ஜியத்தில் வசிக்கும் அனைத்து மாவீரர் குடும்பங்களும் கலந்து கொண்டு தங்கள் சகோதரர்களுக்கு கண்ணீர்மல்க அகவணக்கம் செலுத்தினார்கள். அனைத்து மாவீரர்கள் குடும்பங்களை கௌரவித்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. சிவந்தன் அவர்களின் உணர்ச்சி மிக்க உரை பெல்ஜியம் வாழ் தமிழர்களை உணர்வின் உச்சத்திற்க்கு கொண்டு சென்றதுடன் இளையோரையும் தட்டி எழுப்பியது. பெல்ஜிய நாட்டின் இசை கலைஞர்களுடன் பிரான்சு நாட்டு […]

புலம்பெயர்

40,000 மேற்பட்ட மக்கள் பிரித்தானியா மாவீரர் நாள் நிகழ்வில்

பிரித்தானியாவில் வரலாறு காணாத மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வு. 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு இருப்பதாக Eelam Press செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்

எமக்காய் களமாடிய மாவீரச் செல்வங்களை நெஞ்சில் நிறுத்தி விடுதலை போராட்டத்தை முன்னெடுப்போம் – நோர்வே ஈழத்தமிழர் அவை

எம் மண்ணிற்காக களமாடி வீர காவியமான எமது மரியாதைக்கும் பாசத்திற்கும் உரிய மாவீரர்களை நினைவு கூரும் பொன்னாளில், எமது லட்சியமான தமிழீழத்தை அடைந்தே தீருவோம் என உறுதி எடுத்துக்கொள்வோம். எமது இனமும் மொழியும் மண்ணும் உள்ளவரை இவ்வையகம் எமது மாவீரர்களின் பெயர் சொல்லி வீர கானம் இசைத்திடும். அவ்விசை எம்மை இயக்கும் விசையாகவும் விளங்கி, எமது இலக்கை நிச்சயம் அடைய வழி சமைக்கும் என்பதில் நோர்வே ஈழத்தமிழர் அவை அசைக்க முடியா நம்பிக்கை வைத்துள்ளது. நோர்வே ஈழத்தமிழர் […]

புலம்பெயர்

கனடா ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் (UFT ) நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

கனடா ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் (UFT ) தமிழ் மாணவர்கள் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீர்ர் தின நிகழ்வு 18ம் திகதி வியாழக்கிழமை மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிவரை நடைபெற்றது. முதலில் கனேடிய தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழீழக் கொடி ஏற்றப்பட்டது. அடுத்ததாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அதன்பின் அங்கு வருகை தந்திருந்த மாணவர்கள் மலர்தூவி மாவீர்ர்களுக்கு தமது வணக்கத்தை தெரிவித்தனர். இதன் பின்னர் மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட எழுச்சி நடனங்கள், பேச்சுக்கள், பாடல்கள் […]

செய்திகள் புலம்பெயர்

நீதி கேட்டு மூன்றாவது நாளாகத் தொடரும் மிதிவண்டிப்பயணம்.

பேர்லின் நகரம் நோக்கி, பெல்ஜியம் – புறூசலில் இருந்து 11.10.2010 அன்று திரு.தேவன் குகதாசன், திரு.சின்னத்துரை அருணதாசன், செல்வன்.சஞ்சீவன் சிவசுப்பிரமணியம் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற மிதிவண்டிப்பயணம் இன்று மூன்றாவது நாளாக 102 கிலோமீற்றர்களைக் கடந்துLEVERKUSEN என்னும் இடத்தை வந்தடைந்துள்ளனர்.இவர்கள் சென்றடையவுள்ள 1000 கிலோமீற்றர் பயணத்தில் 302 கிலோமீற்றர் தூரத்தை மூன்று நாட்களில் காலநிலையின் சமச்சீரற்ற தன்மையையும் கவனத்தில் எடுக்காது உறுதியுடன் கடந்துள்ளார்கள். மிதிவண்டிப்பயணம் செல்கின்ற வழிகளிளெல்லாம் தமிழினப்படுகொலைகள் மற்றும் சிறிலங்காவிலுள்ள தமிழரின் உண்மை நிலை பற்றிய விபரங்கள் […]

செய்திகள் புலம்பெயர்

மாந்தநேயப் பயணம் தொடர்கிறது மிதிவண்டியில்.

சிறீலங்கா அரசினால் இனப் பேரழிவுக்கு உட்படுத்தப்பட்ட தமிழினத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும், அனைத்துலக நாடுகளிடம் முறை கேட்டும் பிரித்தானியாவிலிருந்து திரு.சிவந்தன் அவர்கள் தொடங்கிய நடைபயணம் ஜெனீவாவில் நிறைவடைய, அங்கிருந்து திரு.ஜெகன், திருமதி.தேவகி குமார், திரு.வினோத் ஆகியோர் தொடர்ச்சியாக பெல்ஜியத்திலுள்ள ஐரோப்பியஒன்றியம் வரை நடைபயணம் மேற்கொண்டு, கடந்த 27.06.2010 அன்று புறூசல் நகரில் ‘எழுவாய் தமிழா நெருப்பாய்’ என்னும் நடைபயண நிகழ்வு நிறைவடைய, அதன் தொடர்ச்சியாக பெல்ஜியம் – புறூசலிலிருந்து சேர்மனியின் பேர்லின் நகரம் நோக்கி, இன்று நண்பகல் […]

செய்திகள் புலம்பெயர்

யேர்மனியில் நடைபெற்ற ஈழத்தமிழர் மக்கள் அவைக்கான பொதுக்கூட்டம்

10.10.2010 அன்று யேர்மனியில் Essen நகரத்தில் ஈழத்தமிழர் மக்கள் அவையை அமைப்பதற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் மதிப்புக்குரிய அருட்தந்தை Emmanuel அவர்கள் கலந்துக்கொண்டார். அத்தோடு, இக் கூட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தந்து சிறப்பித்தனர். அகவணக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இக் கூட்டத்தில் முதலாவதாக ஈழத்தமிழர் மக்கள் அவையின் உருவாக்கம் பற்றியும் முக்கிய நோக்கங்களும் மற்றும் செயற்பாடுகள் பற்றியும் மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர் […]