இலங்கை தமிழ் புலம்பெயர்

இலங்கை அரசுக்கு விலைபோய்விட்டதா உலகத் தமிழ் அமைப்புக்கள்?

போர்க்குற்ற விசாரணைகளின்றி விடுதலைப்புலிகளின் போராளிகள் மட்டும் உள்நாட்டு நீதிமன்றத்தில் ஒருதலைப்பட்சமாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதையிட்டு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தாது மௌனம் சாதிப்பது ஏன்? சர்வதேச சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு போராளி கண்ணதாசனுக்கான பொதுமன்னிப்பை மீறிய தீர்ப்பினை முன்னுதாரணப்படுத்தி புலம்பெயர் அமைப்புக்கள் ஐ.நாவை நோக்கிய தமது போராட்டங்களை மேற்கொண்டிருக்கலாம். மேலும் போராளி கண்ணதாசனுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை என்பது விடுதலைப்புலிகள் மீது போர்க்குற்றங்களை வலிந்து சுமத்தும் நோக்கத்தை மையமாகக் […]

இலங்கை தமிழ் புலம்பெயர்

சிங்களச் சட்டத்தை தமிழருக்கெதிராக சிங்களவர் கையிலெடுத்தால்,தமிழீழச் சட்டத்தை மீண்டும் தமிழர்கள் தம் கையில் எடுக்க நேரிடும்! -எல்லாளன்-

முன்னாள் போராளி திரு.கண்ணதாசன் அவர்களுக்கான இலங்கை நீதிமன்றின் அபத்தமான தீர்ப்பானது நம் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் சிங்களச் சட்டத்தால் விடப்பட்ட ஓர் இனரீதியான அடக்கியாளும் எச்சரிக்கையே! அடிப்படையில் இலங்கை சிங்கள ஆட்சியாளர்களின் தம்மினம் சார்ந்த தமது பாரபட்சமான தமிழர் விரோத அரசியல் செயற்பாடுகள் காரணமாகவே தமிழர்கள் தம்மை தாமே ஆளவேண்டும் என்ற வைராக்கியத்தை தமக்குள் வளர்த்து கடந்த முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை சிங்கள அரசுக்கெதிராக தாம் நிகழ்த்தியிருந்தார்கள். உண்மையில் தமிழர்களுக்கான இந்த உளவியல் வைராக்கியத்தை சிங்கள ஆட்சியாளர்களே […]

speciel இலங்கை டென்மார்க் தமிழ் புலம்பெயர்

பலகோடி பேரம்பேசல்களுடன் தொடுக்கப்பட்ட வழக்கின் நோக்கமானது முடக்கப்பட்ட புலிகளின்நி திகளை பகிர்ந்தெடுப்பதையே இலக்காகக் கொண்டது!

விடுதலைப்புலிகளின் சொத்துமுடக்கத்தை நீக்குவதற்காகவே விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள பயங்கரவாத தடைக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழத் தனியரசிற்கான நிழல் அரசாங்கத்தை நிறுவி அதனை நிர்வகிப்பதற்கான நிதி வளங்களை பாரிய முதலீடுகள் மூலம் கிடைக்கப்பெறும் வருமானங்களின் மூலமே கட்டியெழுப்பி வந்தது. இந்தப் பாரியமுதலீடுகள் பெரும்பாலும் வெளிநாடுகளில் வாழ்ந்துவந்த தமிழர்களின் பெயர்களிலே பதிவுசெய்யப்பட்டிருந்தது. அந்த முதலீடுகள் வீடுகளாக,வர்த்தக நிலையங்களாக,பலசரக்குக் கடைகளாக,கோயில்களாக,காணிப்பரப்புகளாக, எரிபொருள் நிரப்பு நிலையங்களாக,உண்டியல் பணப்பரிமாற்ற நிலையங்களாக, நிதி வைப்புக்களாக,படகுகட்டும் தொழிற்சாலைகளாக (yard),பயணிகள் […]

speciel இலங்கை தமிழ் புலம்பெயர்

“அனைத்துலகத் தொடர்பகம் தற்போது இலங்கை புலனாய்வாளர்களின் கட்டமைப்பே”-முன்னாள் போராளிகள்

புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் எனும் கட்டமைப்பு 2009ம் ஆண்டுடன் செயலிழந்துவிட்டது தற்போது இருப்பதாக சொல்லப்படும் கட்டமைப்பு இலங்கை புலனாய்வாளர்களின் கட்டமைப்பே!! ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை தமக்கு சாதகமாக்கி புலத்தில் புலிகளாக வேடம்தரித்து நிதிமோசடிக்கு தயாராகும் இலங்கை புலனாய்வாளர்கள்!! எமது இயக்கத்தின் மீதான உலக நாடுகளின் தடைகளை எமது இயக்கம் இராணுவ பலத்தோடு இருந்தபோது அதை அகற்ற முன்வராத அனைத்துலக தொடர்பகம் எனும் தற்போதைய புலிகளற்ற கட்டமைப்பு,இன்று அத் தடைகளை தாம்தான் உடைத்தெறிந்ததாக ஊடகங்கள் ஊடாக தற்போது பலவிதமான […]

இலங்கை தமிழ் புலம்பெயர்

இறுதிக் களத்தில் நடந்த உண்மைச் சம்பவங்கள்!

சுயநலவாத முட்டாள்களுக்காக நாம் ஆயுதம் ஏந்தி போராடவில்லை! தமிழராக வாழாத முட்டாள்களுக்கு இது சமர்ப்பணம்! முள்ளிவாய்க்காலில் போராளிகளாக எதிரிகளிடம் அகப்பட்ட போராளிகளில் சிலபத்துப் போராளிகளே காயங்கள் அற்றநிலையில் அகப்பட்டார்கள்.2006-2009mayவரைக்கும் படுகாயமடைந்த அதாவது போர்முனைக்கு போகமுடியாத போராளிகள் மட்டும் சுமார் 7000ம் பேர்வரை முள்ளிவாய்க்காலின் தறப்பாள் மருத்துவ நிலையங்களில் கடுமையான மருத்துவ நெருக்கடிகளுக்கு மத்தியில் உயிரோடு தினமும் போராடிக்கொண்டிருந்தார்கள். இவற்றைவிட ஒருசில வாரங்கள் இயக்கத்தில் இணைக்கப்பட்ட சில ஆயிரம் போராளிகளும் போராளிகள் என்ற தகுதிநிலையை முழுமையாக பெற்றிராத புதிய […]

இலங்கை தமிழ் புலம்பெயர்

நீதியரசர் கொலை முயற்சியுடன் போராளிகளை தொடர்புபடுத்தியமைக்கு முன்னாள் போராளிகள் கண்டனம்!!

நல்லூரில் நடைபெற்ற நீதியரசர் இளஞ்செளியன் மீதான கொலைமுயற்சியில் ஈடுபட்டவர் முன்னாள் போராளி என பொய்யான செய்தி வெளியிட்ட ஊடகங்களை முன்னாள் போராளிகள் கண்டித்துள்ளதுடன் தமது ஊடக எழுச்சிக்காக தாமே ஊகித்து தயாரிக்கும் பொய்யான செய்திகளை எமது மக்கள்மத்தியில் பரப்பிவரும் இணைய மற்றும் அச்சு ஊடகங்களை தாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும்; “எமது புனிதமான அமைப்பின் பெயரை கொச்சைப்படுத்தமுனையும் நாசகாரிகள் மத்தியில் எமது மக்கள் தாம் விழிப்புடன் இருந்து அவர்களை இனங்கண்டு செயற்படவேண்டும்” எனவும் முன்னாள் போராளிகள் […]

speciel இலங்கை டென்மார்க் புலம்பெயர்

ரிசிசி வன்முறைக்குழுவின் நிதிசேகரிப்பில் கஜேந்திரகுமார் குழுவினருக்கும் பங்கு.

தமிழ்தேசிய சொத்துக்களை களபரம் செய்துள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் புலம்பெயர்நாடுகளில் மீண்டும் நிதிசேகரிப்பில் ஈடுபட்டுள்ளமையை ஏற்கனவே வெளியிட்டுருந்தோம். ரிசிசி வன்முறைக்குழுவினர் டென்மார்க் சட்டங்களையும் மீறி வீடு வீடாக சென்று நிதிசெகரிப்பில் இப்பொழுது ஈடுபட்டுள்ளமை ஆதாரங்களுடன் எமக்கு கிடைக்கப்பட்டுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பினாமி அமைப்புக்களின் ஒன்றியமாக செயல்படும் டென்மார்க் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தின் Spar Nord வங்கியில் உள்ள கணக்கிலகத்திற்கு மாதம் மாதம் பணம் செலுத்தும் ஒப்பந்தத்தில் மக்களை கையெழுத்து ஈடுமாறு வேண்டியே இந்த நிதிசேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். […]

speciel இலங்கை புலம்பெயர்

தமிழ்மக்களுக்கு சனநாயகப்புலிகளின் வேண்டுகோள்.

விடுதலைப்புலிகளின் அரசியல் அமைப்பாக செயல்படும் சனநாயப்போராளிகள் கட்சியின் பொதுச்செயலாளர் கதிர் அவர்களினால் தமிழ்மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தேசியத்திற்காக போராடியவர்கள் தெருவில் நிற்கும் போது தேசியத்தின் பெயரில் நடக்கு அரசியல் துரோகங்கள் தொடற்பாகவும் தமது செயற்பாடுகள் தொடற்பாகவும் கூறப்பட்டிருக்கும் அறிக்கையில் புலம்பெயர்நாடுகளில் வாழும் முன்னால் போராளிகளையும் அமைப்புக்களையும் தம்முடன் இணைந்து பணியாற்ற அழைப்புவிடுத்துள்ளனர். அத்துடன் கட்டுக்கடங்காத அமைப்புகளை எந்தவொரு நாட்டிலும் விடுதலைப்புலிகளின் பெயரில் இயங்க அனுமதிக்கப்போதில்லை எனவும் கண்டிப்புடன் எச்சரித்துள்ளனர். விடுதலைப்போராட்டத்தில் வித்தான […]

தமிழ் புலம்பெயர்

லண்டனில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தமிழருக்கு சிறை!

லண்டனில் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தமிழர் ஒருவரை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். 32 வயதான சிந்துஜான் யோகநாதன் என்ற தமிழரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனக்கு சொந்தமான Audi காரில் வைத்து இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு லண்டன் பகுதியில் Perivale,Northolt மற்றும் Harrow பகுதிகளில் வைத்து ஆறு பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிந்துஜான் யோகநாதனிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையின் மூலம் […]

இலங்கை டென்மார்க் புலம்பெயர்

நிதி சேகரிப்பில் மீண்டும் ரிரிசி கும்பல்.

தமிழீழ விடுதலைக்காக சேகரிப்பட்ட நிதிகளையும், சொத்துக்களையும் கையடகப்படுத்தியிருக்கும் ரிரிசி குழுவினர் நிதி சேகரிப்பில் மீண்டும் புலம்பெயர் நாடுகளில் ஈடுபடவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமது அல்லகைகளுக்கான கூட்டங்களை மிகவும் இரகசியமாக நடாத்தி வருகின்றனர். இப்பொழுது ரிரிசி குழுவினர் டென்மார்கை தளமாக கொண்டு மகேஸ் தலமையில் இயங்குகின்றனர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும், தமிழீழ விடுதலைப்புலிகளின் மௌனத்தையும் தொடர்ந்து முன்னால் போராளிகள் தாயக்த்திலும் புலம்பெயர் நாடுகளிலும் போரின் வடுக்களுடன் வாழ்ந்து வருகையில் ரிரிசி குழுவினர் தமிழீழ தேசிய சொத்துக்களையும் தமதாக்கி கொண்டு […]