இலங்கை புலம்பெயர்

வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை நாட்டுக்கு கொண்டுவர புதிய திட்டம்

வெளிநாடுகளில் இருக்கின்ற விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதே பரிவர்த்தனை கட்டுப்பாட்டு திருத்தச் சட்டமூலத்தின் மறைமுகமான திட்டம் என கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழ் புலம்பெயர்

விடுதலைப் புலிகளுக்காக நிதிசேகரித்தவர்களின் தண்டனையை உறுதி செய்தது டச்சு உச்சநீதிமன்றம்

விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, தமிழர் ஒருங்கிணைப்பு குழு நபர்கள் நால்வருக்கான தண்டனையை நெதர்லாந்து உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

புலம்பெயர்

உயிரோடு இருப்பவருக்கு அஞ்சலி செலுத்திய பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர்

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் மாசி மாதம் வீரச்சாவடைந்த மாவீரர் நினைவு கூறும் நிகழ்வில் உயிரோடு இருப்பவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
26.02.2017 அன்று பிரான்சு தமிழர் ஒருகிணைப்பு குழுவின் அலுவலகத்தில்நடைபெற்ற நிகழ்வில் தமிழீழப்பாடகர் சாந்தன் அவர்களுக்கு பதிலாக தாயகப்பாடகர் திருமாறன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி நிகழ்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரெஞ்சுக்கிளை என்று தங்களை சொல்லிக்கொள்ளும் இவ் குழுவினர் தமிழீழப்பாடகர்கள் யார் என்பதை அறியாதவர்கள் இவ் கட்டமைப்பில் பணி செய்வதோடு இதை கேட்டால் வன்முறையான பதில்களையும் தருகின்றார்கள்

சங்கதி பதிவு […]

புலம்பெயர்

பண மோசடியில் ஈடுபட்ட இலங்கை தம்பதி கனடா பொலிஸில் சரணடைந்தனர்.

பண மோசடியில் ஈடுபட்ட இலங்கை தம்பதி கனடா பொலிஸில் சரணடைந்துள்ளதாக செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்னொருவரின் வீட்டை அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும் கடன் பெற்ற கணவனும், மனைவியும் வேறு வழி இல்லாமல் கனடா பொலிஸில் சரணடைந்துள்ளனர். கணவன் – வயது 57, மனைவி வயது – 54 ஆகியோரே போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி செய்துள்ளனர். 2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அளவில் முதல் தடவை விண்ணப்பித்து பெருந்தொகை ரொக்க பணத்தை […]

புலம்பெயர்

தமிழர் வரலாற்று மையத்திடம் தற்போது இருப்பது BBQ சாம்பலா ? அல்லது பாலாண்ணையின் அஸ்தியா?

உலகத்தமிழர் வரலாற்று மையம் நேற்று தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அண்ணையின் புனித அஸ்தியின் ஒருபகுதி தம்மிடம் வந்திருப்பதாகவும், தாம் உரிய தருணம் வரும்வரை தாம் பாதுகாப்பதாகவும் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அடேல் பாலசிங்கம் அன்ரியின் கையெழுத்துடனான கண்டன அறிக்கையும் கூடவே வந்திருந்து. இதைத்தொடர்ந்து பல முகநூல் போராளிகள் களமிறங்கி தங்களுக்குத் தெரிந்த தாக்குதல்களை நடாத்திக்கொண்டிருக்கின்றனர். உண்மையில் என்ன இது என்று பார்த்தால் 2006 டிசம்பர் 14 பாலா அண்ணை சாவடைந்ததனால் அவர் ஏற்கனவே கேட்டுக் கொண்டதன்படி அதாவது […]

புலம்பெயர்

“தன் கணவரின் அஸ்தியை காக்க சிறையிலிருந்து வெளிவந்து மீண்டும் சிறைசென்ற அடேல் பாலசிங்கம்” – கழுகுவிழியன்.

சிந்தியுங்கள் தமிழீழ மக்களே..! – பிரித்தானியாவில் அடேல் பாலசிங்கம் அவர்கள் உயிரோடுதான் இருக்கிறாரா என்ற தமிழீழ மக்களாகிய உங்களின் சந்தேகத்திற்கு இன்று 20-12-2016 முடிவு கிடைக்கப்பெற்றுள்ளது. உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்பிற்கு பின்னர் அதாவது 17-05-2009ற்கு பின்னராகிய சுமார் ஏழு வருடகால இடைவெளிக்குள் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் இன்றுதான் தமிழீழ மக்களுக்கு தனது கணவரான தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் அஸ்தி தொடர்பாக பெரிய அறிக்கையொன்றை விடுத்துள்ளார். இந்த அறிக்கைகூட அவரது தனிப்பட்ட […]

புலம்பெயர்

விடுதலைப்புலிகளின் தடையை நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை

அமெரிக்காவில் விடுதலைப்புலிகளின் தடையை நீக்கவேண்டும் என்று ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது விடுதலைப்புலிகள் தடைக்கு உட்பட்டுள்ளமையால், தமிழர்கள் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. விடுதலைப்புலிகளின் தடை காரணமாக, அமரிக்காவில் உள்ள தமிழர்கள், வெளிநாடுகளுக்கு சென்று நாடு திரும்பும் போது அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர். பல மணிநேரம் விசாரணைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கிறிஸ்மஸ் தினங்களில் தமிழர்களுக்கு சிறிய நிவாரணமாக ஒபாமா, விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை […]

speciel டென்மார்க் புலம்பெயர்

புலிகளின் குரல் வானொலிக்கு எதிரான சதி முயற்சியில் டென்மார்க் தமிழ்குழு.

டென்மார்க்கில் வசிக்கும் மகேஸ் எனப்படும் பொன்னம்பலம் மகேஸ்வரனின் தலைமையில் இயங்கும் மகேஸ்குழுவினர்களினால் மேற்கொள்ளப்படும் தமிழ் தேசவிரோத செயல்பாடு கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவீரர் கஸ்ரோ அவர்களின் தலைமையில் இருந்த அனைத்துலக தொடர்பகம் அல்லது ரிரிசி யினை கைப்பற்றியதனூடாக புலம்பெயர் நாடுகளில் இருந்த தமிழ் தேசிய சொத்துக்களை தம்வசப்படுத்தியுள்ளனர். இப்பொழுது இந்த குழுவில் முக்கிய நபராக செயல்படும் டென்மார்க் கேர்ணிங் நகரில் வசிக்கும் சசி என்பவர் ஊடாக புலிகளின் குரல் வானொலிக்கு எதிரான சதி முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலிகளின் குரல் […]

புலம்பெயர்

பிரித்தானியாவில் இடம்பெற்ற “தேசத்தின் குரல்” மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு!

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உட்பட இம்மாத(மார்கழி) மாவீரர்களுக்கும், மாமனிதர் யோசப் பரராஜசிங்கம் உட்பட இலங்கை படைகளால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமான வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெற்றது. தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் அமைந்துள்ள (oxford) உலகத் தமிழர் வரலாற்று மைய மாவீரர் மண்டபத்தில் இந்த நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது. வேணுகோபால் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில் பொதுச் சுடரினை கிலிங்டன் தமிழ் பாடசாலை நிர்வாகி (தமிழ் கல்விக்கூடம்) சசிகலா நிரூபன் ஏற்றிவைக்க நிகழ்வுகள் […]

அனைத்துலகம் புலம்பெயர்

பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கான வேண்டுகோள்!

அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள் நீடிப்பு,பிரான்சில் நெருக்கடி நிலையை ஜூலை மாதம் 15-ந் தேதி வரை மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்க வகை செய்து, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப் பட்டுள்ளது . அதன்பேரில் நேற்று ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஓட்டெடுப்பில், நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீட்டிப்பதற்கு 288 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், தீர்மானம் நிறைவேறியது. எதிராக 32 பேர் மட்டுமே வாக்களித்தனர். வரும் ஏப்ரல், மே, ஜூன் […]