Category: மக்கள் அவலம்

Home » மக்கள் அவலம்
Post

பதுளையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி வழங்குங்கள்.

29.10.2014 அன்று இலங்கை பதுளைமாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களுக்கு அவசர நிவாரண உதவியை புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வேண்டுகிறோம். தோட்டத் தொழிலாளர்களான இம்மக்கள் வாழ்வு முழுவதும் வறுமையோடு வாழ்பவர்கள். இயற்கையும் இவர்களை வஞ்சித்து இன்று அநாதரவாக்கப்பட்டுள்ளார்கள். மனிதர்கள் வாழக்கூடிய அடிப்படை வசதிகளையே இழந்து வாழும் இவர்களின் தற்போதைய அவலத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து உதவுமாறு நேசக்கரம் அமைப்பு வேண்டுகிறது. கொஸ்லாந்த சிறீ கணேசா வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்து வாடும் மக்களின் எண்ணிக்கை விபரம் :- 12...

Post

டென்மார்க் அன்னை அறக்கட்டளை ஆதரவில் நேசக்கரம் 2014 பொங்கல் விழா.

19.01.2014 அன்று மட்டக்களப்பு குசேலன்மலை மாணவர்கள் 42பேருடனும் எமது உறுப்பினர்களும் இணைந்து பொங்கல் விழாவினைக் கொண்டாடியுள்ளனர். மிகவும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட போரால் பாதிப்புற்ற மேற்படி கிராமத்தின் 27குடும்பங்களைச் சேர்ந்த 42 பிள்ளைகளுக்கான கற்பித்தல் செயற்பாடானது நேசக்கரம் அமைப்பின் உப அமைப்புகளில் ஒன்றான அரவணைப்பு அமைப்பின் கவனிப்பின் கீழ் இயங்கி வந்தது. இவ்வருடம் தேன்சிட்டு உளவள அமைப்பின் சிறப்புக் கவனிப்பினுள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு இனிவரும் காலங்களில் குசேலன்மலை பிள்ளைகளின் உளவள கல்வி மேம்பாட்டின் முழுமையான கவனிப்பையும் தேன்சிட்டு அமைப்பு...

Post

நேசக்கரம் இலவச கல்வித்திட்டத்திற்கு உதவி தேவை

நேசம் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் 2014ம் ஆண்டு பாடசாலை செல்வதற்கு கற்றல் உபகரணங்கள் இல்லாது கற்க வசதியற்ற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு ஏழை மாணவர்களுக்கான இலவச கொப்பி மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்க முடிவு செய்துள்ளோம். இதன் முதல் கட்டமாக 10ஆயிரம் கொப்பிகள் எழுதுகருவிகள் வழங்க உத்தேசித்துள்ளோம். இவ்வுதவியானது வடகிழக்கு மாகாணங்களில் வாடும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கே வழங்கவுள்ளோம். 10ஆயிரம் கொப்பிகளுக்கு தேவையான உதவி – 525000.00ரூபா எழுதுகருவிகள் –...

Post

உதவி. சிறுகதை. கனடா பூபாளம் பத்திரிகைக்காக சாத்திரி

யோகநாதன் கண்ணாடி முன்னால் நின்றபடி வழைந்து நெளிந்து தன்னை முழுவதுமாகப் கண்ணாடியில் பார்த்துவிட முனைந்து கொண்டிருந்தார்.அதுவும் தனது தலைக்கும் மீசைக்கும் அடித்த  டை யையும் மீறி எங்காவது வெள்ளை முடி தெரிந்து விடக்கூடாது என்பதுதான் அவரது கவலை.அதற்காக கன்னத்தின் ஓரங்களையும் மீசையையும் சீப்பால் மேலும் கீழுமாக பல தடைவை கிழறிப்பார்த்து சரி செய்து கொண்டவர்  தனது பிடரிப்பக்கத்தையும் முன்னும் பின்னுமாக இரண்டு கண்ணாடியை பிடித்து பார்த்துக் கொண்டவரிற்கு  அப்பாடா ஒரு இருபது வயது குறைந்தமாதிரி இருக்கு  என்று...

Post

மட்டக்களப்பில் தையல் நிலையம் ஆரம்பம்.

எம்மால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் தொழில் முயற்சியின் முதலாவது முதலீட்டாளராக நேசக்கரம் அமைப்பின் நீண்ட கால ஆதரவாளரான யேர்மனியில் வசித்து வரும் திரு.சபேசன் அவர்கள் இணைந்துள்ளார். ஏற்கனவே போரில் பெற்றோரை இழந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கு சபேசன் மாதாந்தம் உதவிக் கொண்டிருப்பதோடு அவசர உதவிகள் தொழில் முயற்சிகளுக்கும் உதவியுள்ளார். அத்தோடு தனது உறவினர்கள் நண்பர்களையும் நேசக்கரத்துடன் இணைத்து உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். அடுத்த கட்டமாக தையல் நிறுவனமொன்றை ஆரம்பிப்பதற்கான முதல் கட்ட உதவியையும் வழங்கியதோடு தையல் நிறுவனத்தை தொடர்ந்த...

தமிழினத்தின் மிகக் கேவலமான துரோகம்… (உண்மைகள் -பாகம்-1) – நிராஜ் டேவிட்
Post

தமிழினத்தின் மிகக் கேவலமான துரோகம்… (உண்மைகள் -பாகம்-1) – நிராஜ் டேவிட்

எமது சில உறவுகளுக்கு நானும் நீங்களும் தெரிந்துகொண்டே நிகழ்த்துகின்ற சில கேவலமான கொடுமைகள் பற்றிப் பேசுகின்றது இந்த உண்மைகள் பெட்டக நிகழ்ச்சி. முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை பற்றிய பெட்டக நிகழ்ச்சி (காணொளி)

அன்றொரு நாள் கரும்புலி இன்று புற்றுநோயாளி – சாந்தி ரமேஷ் வவுனியன்
Post

அன்றொரு நாள் கரும்புலி இன்று புற்றுநோயாளி – சாந்தி ரமேஷ் வவுனியன்

அவன் ஒரு கரும்புலி. ஒரு காலம் அவனின் தேவையும் சேவையும் தேவையாக இருந்தது. 15வயதில் இயக்கத்திற்குப் போனபோது இப்படியொரு கரும்புலிக் கனவை அவன் கண்டதேயில்லை. ஆனால் காலம் அவனை ஒரு புலனாய்வுப் போராளியாக்கியது புலனாய்வின் தொடர் எதிரியின் கோட்டைக்குள் பணியமைந்து தானாகவே கரும்புலிக்கான பயிற்சியையும் பெற்றுக் கொண்டு பிறந்த கிளிநொச்சியை விட்டு சமாதான காலத்தில் வெளியேறினான். குடும்பத்தில் தம்பியும் அக்காவும் போராளிகளானார்கள். எல்லாக் கரும்புலிகள் போல அவனும் குடும்பம் , உறவு என்ற வட்டத்தைத் தாண்டி தாயகக்கனவோடு...

3மாவீரர்களை நாட்டுக்குத் தந்த அப்பாவின் இன்றைய வறுமை.
Post

3மாவீரர்களை நாட்டுக்குத் தந்த அப்பாவின் இன்றைய வறுமை.

ஐயாவின் வாழ்க்கை இன்று ஒற்றைக் கட்டிலுக்குள் அடங்கிவிட்டது. 3ஆண்பிள்ளைகளும் 3பெண் பிள்ளைகளுமாக ஆறுபிள்ளைகளைப் பெற்று வாழ்ந்த வாழ்க்கையின் கடந்த காலத்தை எண்ணினால் அது பெரும் துயர் சூழ்ந்த காலம் தான். இப்போது தானொரு சுமையாகிப் போனேன் என்ற இயலாமைதான் மனசை உறுத்திக் கொண்டிருக்கிறது. ஐயா ஒரு கடற்தொழிலாளி. ஊரில் ஐயாவும் கடற்தொழிலால் முன்னேறி மற்றவர்களுக்கு ஒரு காலம் அள்ளிக் கொடுக்கும் கையாகத்தான் இருந்தார். மகிழ்ச்சிக்கு குறைவில்லாத வாழ்வு ஐயாவின் குடும்பம் அனுபவித்ததும் ஒரு காலம். ஐயாவின் மூத்த...

Post

நேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவின் அவசர வேண்டுகோள்.

சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்கள் கடும்மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளான கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை புலம்பெயர் உறவகளிடமிருந்து கோருகிறோம். வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கான சமைத்த உணவு , ஆடைகள் , அத்தியாவசியப் பொருட்கள் போன்றவை வழங்கப்பட வேண்டியிருக்கிறது. புலம் பெயர்ந்த அனைத்து தமிழர்களும் உங்கள் ஆதரவினை வழங்குமாறு நேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவினர் வேண்டிக் கொள்கின்றனர். உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :- Bank information...

Post

நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி ஆரம்ப நிகழ்வு.

நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி நிறுவனம் திறப்பு விழாவும் உணவு உற்பத்தியும் 09.06.2012 அன்று மட்டக்களப்பு விஸ்ணுகோவில் வீதி வந்தாறுமூலை நேசம் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்றது. நேசம் உற்பத்தியின் முதற்கட்ட உற்பத்தியாக உலர் உணவாக மிக்சர் உற்பத்தி ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வில் கணேஸ்வித்தியாலய அதிபர் உட்பட கல்விமான்கள் சமூக ஆர்வலர்கள் விளையாட்டுக்கழகத்தினர் , மற்றும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த மேற்பார்வை பொதுச்சுகாதார பரசோதகர் அதிகாரி உட்பட பணியாளர்களும் நேசம் உற்பத்தி பணியாளர்களும் கலந்து...