மக்கள் அவலம் முக்கிய செய்திகள்

"எங்களுக்கு வாழ்வு தந்த 10 குடும்பங்களின் வாழ்வுக்கு கைகொடுங்கள்" – நேசக்கரம்

1) தீலீபன் (முன்னாள் போராளி ) முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு இடுப்பின் கீழ் உணர்விழந்துள்ளார். மனைவி ஒரு மகளுடன் வாழ்கிறார். மகள் 2ம்தரம் கற்கிறார். திலீபன் தொடர்ந்து படுக்கையில் இருக்கிறார். இவரை மனைவியே பராமரிப்பு உட்பட சகல தேவைகளையும் கவனிக்கிறார். படுக்கையில் இருப்பதால் படுக்கைப்புண் பாதிப்பு உள்ளது. தலையிலும் காயமடைந்தமையால் தலை கடும் வேதனையைக் கொடுக்கிறது. மருத்துவம் செய்வதற்கும் எவ்வித உதவியுமில்லை. இவரை விட்டு தொழிலுக்கு செல்ல முடியாத நிலமையில் இவரது மனைவி வீட்டில் கோழிவளர்ப்பு அல்லது கால்நடை […]

மக்கள் அவலம் முக்கிய செய்திகள்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான அவசர உதவிகளை நேசக்கரம் வழங்கியுள்ளது.

24.01.2012 கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக புதிய மகசீன் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் கழுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலமையில்அவதிப்படுகிற கைதிகளுக்கான முதற்கட்ட அவசர உதவியாக சாரம், பற்பசை, பற்தூரிகை சவர்க்காரம் , சவரக்கத்தி , பிஸ்கட் பக்கற் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் , விநாயகமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று வழங்கியுள்ளனர். கைதிகளை நேரில் […]

மக்கள் அவலம்

நலன்புரி நிலையதிற்கு படைமுகாம் இடமாறவுள்ளதால் மீள்குடியமராத மக்கள் அவலம்.

வரணிப் பகுதியில் உள்ள இராணுவ முகாமை கொடிகாமம், அல்லரை வடக்கு நலன்புரி நிலையம் இருக்கும் இடத்தில் அமைக்கப் போவதாக படையினர் கூறிய தகவலை அறிந்து அந்தப் பிரதேசத்தில் இதுவரை மீளக்குடியமர்வு செய்யப்படாத 45 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிர்க்கதியில் உள்ளனர். இராமாவில் நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டிருந்த பிரதேசத்தைச் சேர்ந்த 60 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிரந்தர காணி உறுதிகளையும் வைத்துக் கொண்டு மீளக்குடிய மர்வு செய்ய முடியாமல் ஏனைய பிரதேசங்களில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து […]

மக்கள் அவலம்

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உடனடி உதவி.

வன்னிப் பெரு நிலப்பரப்பில் தற்போது பெய்து வரும் அடை மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் இடம் பெயர்ந்து பாடசாலை மற்றும் தேவாலயங்களில் தஞ்சமடைந்துள்ளனர். நிரந்தர வருமானங்கள் எதுவும் இல்லாத இடம் பெயர்ந்த மக்கள் நாளாந்த உணவுப்பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்கள் இன்றி பெரும் அவதிப்படுகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் சில. கராச்சி பிரதேரத்தில் உள்ள சாந்தபுரம் 900 குடும்பங்கள் கண்டாவளை பிரதேரத்தில் உள்ள சிவபுரம் 254 குடும்பங்கள் கண்டாவளை பிரதேரத்தில் உள்ள குறக்கன்கட்டு 300 குடும்பங்கள் இந்த பகுதி மக்கள் […]

மக்கள் அவலம்

மாவீரர் நாள் கயிறுழுத்தல் போட்டியில் இவர்களையும் ஒருகணம்….

நாட்டில் ஏற்பட்ட யுத்தம், அதன் காரணமாக தமிழ் இளைஞர், யுவதிகள் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பன தமிழ் மக்களைப் படாதபாடுபடுத்தி வருகிறது. இந் நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எத்தனையோ தமிழ் இளைஞர், யுவதிகள் சிறைச்சாலைகளில் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் வேளையில், திருக்கேதீஸ்வரம் மன்னாரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (வயது-32) என்பவர் மேற்படி சட்டத்தினால் பிடிக்கப்பட்டு, சிறுநீரக நோயால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது இவரின் நிலைமை மோசமடைந்து செல்கின்றபோதும் இவருக்கு ஏற்பட்டுள்ள நோயைக் […]