இந்தியா முக்கிய செய்திகள்

முத்துக்கு​மாருக்கு வீரவணக்கம் செலுத்திய தமிழர் எழுச்சி இயக்கத்தின​ர் கைது!

வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முத்துக்குமார் சாலையில் (ஆடோசு சாலை, சாஸ்திரி பவன்) கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழர் எழுச்சி இயக்கத்தினர் வீரவணக்கம் செலுத்தி கைதானது அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக தி.பி.2043, சுறவம் 15ஆம் நாளான (29-01-2012, ஞாயிற்றுக்கிழமை) இன்று காலை 10.45 மணி அளவில், வீரத் தமிழ்மகன் தீக்குளித்த முத்துக்குமார் சாலையில் (ஆடோசு சாலை) தமிழர் எழுச்சி இயக்கத்தினர் மூன்றாம் ஆண்டு வீரவணக்கம் செலுத்த சுமார் 60 பேர் ஊர்வலமாக வந்தனர். அப்போது […]

இலங்கை முக்கிய செய்திகள்

சிறிலங்கா அரசை காப்பாற்ற சம்பந்தனுக்கும் சிறிலங்கா அரச தரப்புக்கும் இடையில் இரகசிய பேச்சு?

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், சிறிலங்கா அரசு தரப்பு பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் மற்றும்சிறிலங்கா பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன ஆகியோருக்கும் இடையில் இரகசியச் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன. கொழும்பில் கடந்த 27.01.2012ஆம் திகதி இந்தச் சந்திப்பு இடம் பெற்றிருப்பதாகவும், இந்தச் சந்திப்பின் போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் […]

சிறிலங்கா முக்கிய செய்திகள்

சவேந்திர சில்வாவின் நியமனத்தை நிராகரிக்குமாறு பான் கீ மூனிடம் அமெரிக்க மனிதஉரிமை அமைப்புகள் இணைந்து வேண்டுகோள்.

ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், அமெரிக்காவைத் தளமாக கொண்ட மனிதஉரிமை அமைப்புகள் பலவும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் இந்த நியமனத்தை நிராகரிக்குமாறும் ஐ.நா பொதுச்செயலரிடம் கோரியுள்ளன. SPEAK Human Rights, Environmental Initiative, UNROW Human Rights Impact Litigation Clinic at American University Washington College of Law, the Centre for Justice and Accountability and the […]

கட்டுரைகள் முக்கிய செய்திகள்

கூட்டமைப்பின் ஆபத்தான அணுகுமுறைகள்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களும் செயற்பாடுகளும் தமிழ் மக்கள் ஆக்கபூர்மான பணிகளில் ஈடுபடுவதனை திசைதிருப்பும் கபடநோக்கம் கொண்ட உத்திகளே ஆகும். கடந்த வாரம் கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த் வருடாந்த தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றியிருந்தார். அந்த உரையில் அவர் கூறுகின்ற ஒருசில விடயங்கள் தொடர்பாக இந்த பத்தி ஆராய உள்ளது. இதற்கு காரணம் சுமந்திரன் அவர்கள் கூட்டமைப்பில் […]

சிறிலங்கா முக்கிய செய்திகள்

ஜெனீவாவில் சிறிலங்கா அரசைக் காக்க 15 பேர் கொண்ட குழு விரைவு; அமைச்சர்கள் தலைமையில் நடவடிக்கைகள் தீவிரம்.

ஜெனீவாவில் பெப்ரவரி மாத இறுதியில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்காக்கு எதிரான தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாமல் தடுப்பதில் சிறிலங்கா அரசு தீவிரமாக உள்ளது. இந்தப் பணிகளுக்காக சிறிலங்கா அமைச்சர்கள் பலரை உள்ளடக்கிய 15 பேர் கொண்ட குழு பல்வேறு நாடுகளுக்கும் விரையவுள்ளது. நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை இந்தக் குழு கொழும்பில் இருந்து புறப்படவுள்ளது. சிறிலங்காயின் இறுதிப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காகச் சர்வதேச விசாரணை […]

கட்டுரைகள் முக்கிய செய்திகள்

செனட் சபைக்குள் ஒளிந்திருக்கும் தீர்வு பொறிகள்-இதயச்சந்திரன்

சைக்கிள்கள் டோக்கன்களாக உருமாறிய கதையை, இந்திய வெளிநாட்டமைச்சர் யாழ்ப்பாணத்தில் நின்றபோது பார்த்தோம். பொலிஸ், காணி, நிதி, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உட்பட்ட பல முக்கிய விடயங்களை நாமே நிர்வகிக்கக் கூடிய தீர்வையே எதிர்பார்க்கின்றோமென கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறும்போது, “செனட் சபை’ என்கிற டோக்கனை காட்டுகிறது அரசு. இந்த டோக்கன் விளையாட்டு, மாவட்ட அபிவிருத்திச் சபையிலிருந்து ஆரம்பமாகிறது. தங்கத்திற்கு மாற்றீடாக டொலர் தாள்களை அச்சடித்து, உலக வளங்களை தனதாக்கி, பெரும் வல்லரசான அமெரிக்காவின் […]

இந்தியா ஒலி-ஒளி முக்கிய செய்திகள்

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் மற்றும் மாணவர் பாசறை துவக்க நாள் விழா.

  நாம்தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியான பெருந்தமிழர் சிவகங்கை இராசேந்திரனுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பரங்கிப்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் செந்தமிழன் சீமான் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மாலை சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயில் தெருவில் நாம் தமிழர் மாணவர் பாசறை தொடக்கவிழாவும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் […]

சிறிலங்கா முக்கிய செய்திகள்

தன்னைப் பாதுகாப்பு ராஜபக்ச குடும்பத்தின் பொறுப்பு என்கிறார் சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா!

தான் இதுவரை ராஜபக்ச குடும்பத்திற்கே உழைத்ததாகவும், எனவே தன்னை பாதுகாத்துக் கொள்வது ராஜபக்ச குடும்பத்தின் பொறுப்பு எனவும் சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இந்நாட்களில் விரதமிருந்து கதிர்காமத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்டு வரும் சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா, அங்கு அவருக்கு நெருக்கமான சிலரிடமே மேற்கண்டவாறு கூறியுள்ளார். தற்போது தன்னைப் பாதுகாப்பதற்காக சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச நேரடி தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும், களனி பிரதேச சபைத் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் சிறிலங்கா சனாதிபதி மிக விரைவில் சிறந்த […]