முன்னாள் முள்ளியவளை,நெடுங்கேணி பிரதேச அரசியல்துறை பொறுப்பாளரான அமரர் இரத்தினசிங்கம் ஆனந்தராசா என்று அழைக்கப்படும் (பிறையாளன்) அவர்களே 05-12-2017 நேற்றைய தினம் சாவடைந்தவராவார். இவருக்கு தமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சியினர் தமது கண்ணீர் வணக்கத்தை தெரிவித்திருக்கின்றனர்.
தமிழ்
தமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சியின் சமகால அரசியல் நிலைப்பாடு!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளாக நாங்கள் வாழ்ந்தபோது எப்படியான தனித்துவ பண்புகளோடு உறுதியாக நின்று போரிட்டுவந்தோமோ, அதிலிருந்து சிறிதளவும் எமது தனித்துவ பண்புகளை நாம் விட்டுக்கொடாது அரசியலிலும் மிகவும் உறுதியாக நின்று எமது மக்களுக்காக நேர்மையாக உழைக்கவேண்டும் என்பதே எமது குறிக்கோளாகும். எமது ஆயுதப்போராட்ட காலத்திலும்சரி, தற்போதைய அரசியல் போராட்டத்திலும்சரி நாம் நாமாகவே இருக்க விரும்புகின்றோம். புலிகளுக்கான அரசியல் பாதை என்பது கட்சிதாவும் பழக்கங்களை கொண்டதல்ல என்பதனையும் இங்கே நினைவூட்ட விரும்புகின்றோம். எமது தமிழ் தேசிய சனநாயக […]
மாவீரர் நாள் நிகழ்வினை மாற்றியமைக்க முனையும் கஜேந்திரகுமாரை கண்டிக்கும் போராளிகள்.
தமிழீழவிடுதலைப் போராட்டத்தில் வித்தான போராளிகளை நினைவுகூறுவதற்காக தமிழீழ தேசியதலைவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மாவீரர்நாளில் மாற்று இயக்கத்தினரையும் நினைவுகூறப்போவதாக அறிவித்த கயேந்திரகுமாரின் கருத்தை வன்மையாக கண்டித்து தம்ழ்த்தேசிய சனநாயக போராளிகள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. கயேந்திரகுமாரின் கட்சியினருக்கு என கூறி ரிசிசி வன்முறைக்குழுவினர் நிதிசேகரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கண்டன அறிக்கை! தமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சி. எமது மாவீரர் நாள் நிகழ்வினை மாற்றியமைக்க முனையும் அ.இ.த.கா.கட்சியின் தலைவரான திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம்! எமது தேசியத் […]
டடி முகாம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய சனநாயக போராளிகளின் துணிச்சலான மாவீரர் நாள் நிகழ்வுகள்!
மக்களின் குடிமனைகளிலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றருக்கும் குறையாத தூரத்தைக்கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதியில் போலியான தமிழ்த்தேசியவாதிகளின் கண்களில் படாது முற்றுமுழுதான போராளிகளையும்,மாவீரர் குடும்பங்களையும் மட்டுமே உள்ளடக்கி மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வானது எமது தமிழ் தேசிய சனநாக போராளிகளின் தனித்துவமான இறுமாப்பையே எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. வன்னியிலுள்ள ஏனைய துயிலும் இல்லங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில்தான் இருந்துவருகின்றது.ஆனால் டடி முகாம்போன்ற துயிலுமில்லங்கள் ஒன்று இரண்டே உள்ளன’ஆயினும் அவைகள் இராணுவத்தின் பூரண பிடிக்குள் இருந்துவருகின்றன. எனவே இம்முறை […]
டென்மார்க்கில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்ற மண்டப அருகில் வெடிகுண்ட புரளி.
நேற்று பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டு HP Hansens vej – 50, 7400 Herning ல் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் எழுச்சியாக நடைபெற்றது. நிகழ்வு நடைபெற்ற மணடப அருகில் விசமிகளால் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அறிவிக்கப்பட்டதால் பொலிசார் குவிக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதும் எதுவித வெடிகுண்டுகளும் மீட்கப்படவில்லை. புரளி மேற்கொண்டவரை பொலிசார் தேடிவருதாக டெண்மார்க் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சந்தேகநபர் மீது பயங்கரவாததடை சட்டம் கொண்டும் தண்டிக்கப்படலாம் என பொலிசார் ஊடகஙடகளுக்கு தெரிவித்துள்ளனர். மாவீரர் […]
டென்மார்க்கில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் 30வது நினைவுநாள் நிகழ்வு.
டென்மார்க்கில் Randers நகரில் நாடுகடந்த அரசின் ஆதரவாளர்களால் நடாத்தப்பட்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30வது நிகழ்வில் தமிழ்மக்கள் கலந்துகொண்டு மலர்வணக்கம் சுடர்வணக்கம் செய்தனர். நிகழ்வில் கலந்துகொண்ட நாடுகடந்த அரசின் அவைத்தலைவர் நாகலிங்கம் பாலச்சந்திரன் முதன்மை சுடரை ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்துவைத்தார். மாவீரர் தியாகதீபம் திலீபனின் நினைவுக்ககுறிப்புக்கள் பலரால் நினைவு கூறப்பட்டதுடன் கவிதைகளும் வாசிக்கப்பட்டது. நிகழ்வை ஒழுங்கமைத்த தமிழ்தேசியசெயல்பாட்டாளர் கமலநாதன் தியாகதீபம் திலீபனின் நினைவுகுறிப்புக்களுடன் நிகழ்வை ஒழுங்கு செய்தபோது கொண்ட அனுபவங்களை கண்ணீர்மல்க எடுத்துரைத்தார். தொடர்ந்து நாடுகடந்த அரசின் […]
டென்மார்க்கில் நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளின் ஒன்றுகூடல்.
தியாகதீபம் தீலீபனின் 30வது நினைவுகூறலும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளுடான கலந்துரையாடலும் டென்மார்க்கில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசின் ஆதரவாளர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. Randers நகரில் நடைபெறவுள்ள நிகழ்வில் டென்மார்க்கில் வாழும் தமிழீழமக்களை கலந்துகொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டியுள்ளனர்.
விடுதலைப் புலிகளால் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலைப் புலிகளுக்கெதிராக ஒருங்கிணைக்கும் ஒட்டுக்குழுவினர்!
துரோகி கருணாவினதும் அனந்தியினதும் நீலன் அணி எனும் ஒட்டுப்படைகளினதும் வழித்தோன்றலே க.இன்பராசா எனும் நபர்! புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்ட நபர்களின் அமைப்பானது எப்படி ஓர் அரசியல் கட்சியாக தன்னை மாற்றியமைக்க துணிந்தது..? திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த க.இன்பராசா என்பவர் தான் இயக்கத்தில் இணைந்த சில வருடங்களிலேயே பெண்களுடன் தகாதமுறையில் பழகியதன் காரணமாக 1997ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகளால் தண்டிக்கப்பட்டு கலைக்கப்பட்டவராவார். இவர் வன்னியின் இரணைப்பாலை கிராமத்திலுள்ள ஒரு பெண்ணை 1998ம் ஆண்டு காலப்பகுதியில் மணம்முடித்து ஒருசில வருடங்களில் […]
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அம்பாறை செயற்பாட்டாளர் வடிவேல் சசிதரன் அக்கட்சியிலிருந்து தப்பியோட்டம்! -எல்லாளன்
ஜ.போ.கட்சியின் மட்டு,அம்பாறை மாவட்டங்களின் இணைப்பாளர் திரு.பிரபா அவர்களின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் வ.சசிதரன்! சில வாரங்களுக்கு முன்னர் வ.சசிதரன் என்பவரை ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் தமது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தி அவரை தற்காலிக பணிநீக்கம் செய்திருந்தனர். இதன் காரணமாக அவர் மனவிரக்தியடைந்து கருணா குழுவின் புலனாய்வு பணிக்காக கருணாவினால் தந்திரமாக அமர்த்தப்பட்டு பிரயாணித்துவரும் க.இன்பராசாவின் தலைமையிலான விசர்க்குழுவில், மன்னிக்கவும் புலனாய்வுக்குழுவில் குறித்த வ.சசியும் தன்னை இணைத்துக்கொண்டார். மேற்குறிப்பிட்ட சசி என்பவரை கருணா கிழக்கில் தான் பிரிந்துநின்றவேளை தனது […]
வவுனியாவில் நீலன் அணியினால் த.வி.புலிகளின் பாணியில் வெளியிடப்பட்ட தூஷண பிரசுரம்.
சுவிஸ்,லண்டன் மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளில் இருந்து செயற்பட்டுவரும் ராயு,பார்த்தீபன்,வீமன் ஆகிய மூன்று ஈனத்தமிழ் இலங்கை புலனாய்வு நபர்களின் வழிநடத்துதலில் தாயகத்தில் இவர்களின் பணத்திற்கு சோரம்போன ஒருசிலரைவைத்து நேற்றையதினம் வவுனியாவில் புலிகளின் பாணியில் வடிவமைக்கப்பட்டு அந்நபர்களால் வீவப்பட்ட துண்டுப்பிரசுரங்களின் உண்மையான சூத்திரதாரிகளாவர். இவர்கள் அனைவரும் வன்னியின் முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும்,தமது மாவட்டம் சார்ந்த பெயர்களில் முகநூல்களை திறந்து பிரதேசவாத பாணியில் இயங்கிவருவதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முகநூல்களான “முல்லைமண்,முல்லைத்தீவு முல்லை,புலனாய்வுத்துறை மற்றும் புலனாய்வுத்துறை தலைமை” எனும் நான்கு […]