தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் புதல்வி தேசத்தின் தலைமகள் துவாரகா பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய புலம் பெயர் ஈழத்தமிழர்கள். கரும்புலிகளின் நாளான யூலை 5 மாலை குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்புக்கு சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பல நாடுகளில் இருந்து சென்று இருந்ததாக அறியமுடிகின்றது.
செல்வி துவாரகா அவர்களின் தாய் மாமனாரான ஏரம்பு சிறிதரன் அவர்களும் சென்று தேசத்தின் தலைமகளை சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் நேரடியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஏரம்பு சிறிதரன் உடன் டென்மார்க்கில் இருந்து மேலும் சில தமிழீழ சுதந்திர செயற்பாட்டளாகள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த சந்திப்பில் தமிழீழ தேசியதலைவர், தளபதி பொட்டு அம்மான் மேலும் பலரின் இருப்பு தொடர்பில் பல விடையங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.
ஏரம்பு சிறிதரன் அவர்கள் உட்பட அங்கு சென்றவர்கள் மகிழ்வோடும்இகண்ணீரோடும் துவாரகாவை விட்டு விடைபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று சுவிற்சலாந்தில் நடைபெற்ற கரும்புலிகளுக்கான வணக்கநிகழ்விலும் பெருமளவான தமிழ்மக்கள் கலந்துகொண்டனர். வணக்கநிகழ்வை தழிழீழவிடுதலைப்புலிகளின் சுவிற்சலாந்து கிளை ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்வில் உரையாற்றிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் முக்கிய உறுப்பினரும் தமிழீழ புலனாய்வுதுறையின் பொறுப்பாளர் பொட்டம்மானின் மைத்துனருமாகிய நசீர் அவர்கள் உரையாற்றும் போது தளபதி பொட்டம்மான் உடன் தான் கடந்த மே மாதம் உரையாடியதாகவும் பொட்டம்மான் அவர்களால் கூறப்பட்ட விடயங்களையும் மக்களுக்கு எடுத்துகூறினார்.