ஜரோப்பா வந்துள்ள சமஸ்டி சைக்கிள்கள்! கொளுத்தப்படும் சைக்கிள்கள்!

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற தாகத்துடன் தமது உயிரை கொடையாக்கிய மாவீரர்களின் கனவை தாய்நாட்டில் கலைத்தவர்கள் இப்பொழுது ஜரோப்பா நாடுகளிற்கு வரவளைக்கப்பட்டுள்ளார்கள். கேபி யினால் வழிநடாத்தப்படும் அனைத்துலக தொடர்பகம் அல்லது தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரே இவர்களை களமிறக்கியுள்ளனர்.

சிறிலங்காவில் கொண்டுவரப்படவுள்ள ஒற்றையாட்சிக்கான அரசமைப்பை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பது மறுக்கமுடியாது, அத்துடன் சிறிலங்காவில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் 6ம் திருத்தச்சட்டத்திற்கு அமையவே தமது தீர்வு திட்டங்களை முன்வைக்கமுடியும் என்பதும் உண்மை, ஆனால் தமிழ் மக்களிற்கான தீர்வு சமஸ்டி/கூட்டாச்சி என தமிழ் மக்களிடம் திணிக்கும் உரிமை எவருக்கும் இல்லை.

தமிழீழ தேசிய தலைவரும் கூட்டாச்சியைத்தான் தீர்வாக பேச்சுவார்த்தைகளில் முன்வைத்தார் என கருத்துரைக்கும் சைக்கிள் கட்சியினர் தமிழீழ தேசிய தலைவரை தமிழ் மக்களிடம் பிழையாக சித்தரிக்க முனைகின்றனர்.

தமிழீழ கோரிக்கையையை தான் கைவிட்டால் தன்னை சாதாரணபோராளியே சுட்டுக்கொல்லலாம் என தேசிய தலைவர் 2002 நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டடில் மீளக்கூறியது இப்பொழுதும் இணையத்தளங்களில் பார்க்கக்கூடியதாக உள்ளது.

1976 நிறைவேற்றப்பட்டு 1977 இல் தமிழ் மக்களால் ஆணை வழங்க்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையிலேயே விடுதலைப்பேராட்டம் தமிழ் மக்களால் மேற்க்கொள்ளப்பட்டு வரப்பட்டது.

2009 மே மாதம் ஆயுதங்களை தான் தேசிய தலைவர் மௌனித்தார்! தமிழீழ தேசத்தின் விடுதலையை அல்ல.!

தேசிய தலைவரின் ஆயத மௌனிப்பை தொடர்ந்து புலம்பெயர் நாடுகளில் தமிழ் அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான மீள் வாக்கெடுப்பிலும் பெரும்பான்மையான தமிழ் மக்கள் கலந்துகொண்டு இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கான தீர்வு சுதந்திர தமிழீழமே என வாக்களித்திருந்தனர்.

டென்மார்க்கில் டென்மார்க் தமிழர் பேரவையால் ஒழுங்கமைக்கப்பட்டு ஒரு டெனிஸ் வாகெடுப்பு நிறுவனத்தால் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் 98.2 வீதமான டென்மார்க் வாழ் தமிழ் மக்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீள வலியுறுத்தியிருந்தனர்.

இப்பொழுது கேபியின் ஆலோசனையுடன் தமிழீழ தேசிய தலைமையின் இருப்பை மறுதலித்து தேசிய புதல்வி மருத்துவர் துவாரகாவின் செயல்பாடுகளை குழப்பும் அனைத்துலக தொடர்பகத்தினர் தமிழ் மக்களின் அபிலாசைகளையும், ஆணைகளையும் மறுதலித்து சைக்கிள் கட்சியினருடன் இணைந்து டென்மார்க் அரசியல் தலைவர்களிடமும் டென்மார்க் வாழ் தமிழ் மக்களிடமும் இலங்கை தீவில் தமிழ் மக்களிற்க்கான தீர்வு கூட்டாச்சி எனவும் இதையே எமது தேசிய தலைமையும் கோரியதாக பரப்புரை செய்ய முனைகின்றனர்.

இனிவரும் காலங்களில் அனைத்துலக தொடர்பகத்தினர் தமிழரின் தாகம் சமஸ்டி என்றும் நம்புங்கள் நாளை சமஸ்டி பிறக்கும் எனவும் கோசம் இடவேண்டியது தான்.

தமிழ் மக்கள் விரைவாக ஒன்றிணைந்து செயல்பட்டு தமிழீழதேசிய தலைமையின் வருகையை விரைவுபடுத்துவதே போலி தமிழ்தேசியவாதிகளையும் போலி புலிகளைகளையும் ஓரங்கட்டி தமிழ் தேசிய சொத்துகளை மீட்டு போரினால் பாதிக்கப்பட்டுள்ள எமது தாயக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றமுடியும்.

தமிழீழத் தனியரசுக் கோரிக்கையில் இருந்து பின்வாங்குவது தவறு – தமிழக முதல்வருக்குப் பழ.நெடுமாறன் ஐயா கடிதம்.

வை கோவின் கண்டன அறிக்கை.

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

Please reload

Please Wait