டென்மார்க்கில் பிசுபிசுக்க போகும் சமஸ்டி கூட்டம்! மாட்டிய சைக்கிள் கட்சி!


தமிழீழம் வேண்டாம்! சமஸ்டி வேண்டும்! என்ற கோசத்துடன் டென்மார்க்கில் நடைபெற இருந்த சைக்கிள் கட்சியின் கூட்டம் தடைசெய்யப்படகூடிய சந்தர்ப்பங்கள் வலுத்து வருவதாக தெரியவந்துள்ளது.

அனைத்துலக தொடர்பகத்தின் உப அமைப்பாக இயங்கும் மாலதி தமிழ்க்கலைக்கூடம் என்ற தமிழ் பாடசாலை, தமிழ் பிள்ளைகளின் நிகழ்வை நடாத்ததுவதற்காக என கூறி நகரசபையின் மணடபத்தை இலவசமாக பெற்று இந்த சமஸ்டி கூட்டத்தை நடாத்த இருந்தமை கண்டறியபட்டுள்ளது.

சமஸ்டி கூட்ட துண்டுப்பிரசுரத்தில் கூட்டத்தை ஓழுங்குபடுத்துபவர்களின் விபரங்கள் இல்லாததால் மண்டப உரிமையாளரான நகரசபையுடன் தொடர்புகொண்ட பொழுதே சைக்கிள் கட்சியினதும் அனைத்துலக தொடர்பகத்தினதும் பித்தலாட்டங்கள் தெரியவந்துள்ளது.

நகரசபைக்கு சொந்தமான மண்டபத்தை பொய்யான காரணங்களை தெரிவித்து மாலதி தமிழ் கலைக்கூடம் இலவசமாக பெற்று சிறிலங்காவில் இயங்கும் கட்சியின் கூட்டத்தை நடாத்துவது சட்டவிரோதம் என தெரியவந்துள்ளது.

மாலதி தமிழ் கலைக்கூடம் ஒரு சமூக, கலாச்சார தொண்டு நிறுவனமாக தமிழர் ஒருங்கிணைப்பு குழு (ரிரிசி) என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுளளது. குறிப்பிட்ட காரணுத்திற்காகவே நகரசபை பாடசாலையில் தமிழ் மொழி கற்ப்பிக்க இடம் கொடுக்கப்பட்டிருந்தது.

அரசியல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவோ, நடாத்தவோ, தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியில்லை.

இந்த விடையமானது மாலதி தமிழ் கலைக்கூடம் குறித்த நகரசபையில் தொடர்ந்து இயங்குவதிலும் சிக்கல்களை கொண்டுவரபடலாம்.

சைக்கிள் கட்சி டென்மார்க் நகரசபை ஒன்றை ஏமாற்றி இலவசமாக கிடைத்த மண்டபத்தில் நிகழ்வு நடாத்த முற்பட்டமை சட்டவிரோதம் என்பதால் சைக்கிள் கட்சியினர் மீது சட்ட நடவடிகை மேற்கொள்ளுமாறு டென்மார்க் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்வது தொடர்பாக வழக்கறிஞரை தமிழ் மக்கள் சந்திக்க இருப்பதாகவும் அறியமுடிகின்றது. இந்த விடயம் தொடர்பாக டென்மார்க் வெளிவிவகார அமைச்சுக்கும் தகவல் அனுப்பபட இருப்பதாக தமிழ்செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

Please reload

Please Wait