தமிழீழத் தேசியத் தலைவரின் சமீபத்தில் எடுக்கப்பட்ட நிழற் படம் செயல்பாடடாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது ஐம்பதாவது அகவையில் தடம் பதித்துள்ள 2026 ஆண்டு தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலை அமைப்புக்கு மிகவும் முக்கியமான காலப்பகுதியாகும்.

சுவிஸ் நாட்டில் Bern மாநகரில் நேற்றைய தினம் தேசத்தின் புதல்வி துவாரகா தலைமையில் செயல்பாட்டளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை தமிழிழ தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ விடுதலை புலிகள் சுவிஸ் கிளை பொறுப்பாளராக சமீப காலத்தில் நியமிக்கப்பட்ட திரு .ரகுபதி அவர்கள் ஒழுங்குசெய்திருந்தார்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சமீபத்தில் எடுக்கப்பட்டநிழற் படம் யாருமே எதிர்பாரத வகையில் அதிரடியாக திரையில் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தேசத்தின் புதல்வி துவாரகா பிரபாகரன் அவர்கள் சிறப்புரை ஆற்றி இருந்தார். தேசியத் தலைவர் அவர்களுக்கு துணையாகவும் பக்கபலமாகவும் நம்பிக்கைக்கு உரிய தளபதிகள் முன்னிலையில் காணொளியில் கலந்துரையாடல் நடைபெற்றது .

நேற்றைய சந்திப்புகள் தொடர்பான தகவல்கள் பொது வெளியில் பதிவு செய்வதற்கான அனுமதியையும் தேசியதலைமை வழங்கியிருந்ததாக தமிழீழவிடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளை தெரிவித்துள்ளது.

தேசியத் தலைவர் அவர்களது நிழல் படத்தை பார்வையிட்டோர் கண்களில் நீர் வழிய தங்களுடைய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தியிருந்தமையை காணக்கூடியதாக இருந்துள்ளது.

10.01.2026 என்பது ஈழத்தமிழர் வரலாற்றில் மிகவும்முக்கிய காலப் பகுதியாக வரலாற்றில் நேற்றைய நாள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முள்ளிவாக்காலுக்கு பின்னர் தலைவரின் இருப்பு செயற்பாட்டாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் முதல்முதலாக உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசியத் தலைவரையும் சூரியனையும் கரங்களால் மறைத்துவிட முடியாது என்ற உண்மையை மிக விரைவில் காலம் உணர்த்தும் எனவும் சுவிஸ் செயல்பாட்டாளர் தெரிவித்துள்ளார்கள்.

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

Please reload

Please Wait