டென்மார்க்கில் நகரசபையை ஏமாற்றி இலவசமாக கூட்டம் நடாத்த முற்ப்பட்டது அம்பலமானதால் நகரசபையின் உத்தரவிற்கமைய வேறு ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்து கூட்டம் நடாத்தியுள்ளனர் சைக்கிள் கட்சியினர்.
அனைத்துலக தொடர்பகத்தின் உப அமைப்புக்களில் செயல்படுபவர்களும் தமிழ் தேசிய சொத்துக்களின் பினாமிகளுமே கூட்டத்தில் பெரும்பான்மையாக கலந்துகொண்டுள்ளனர். கூட்டம் நடந்த நகரத்தில் இருந்து சுமார் 15 பொதுமக்களே கலந்துகொண்டதை காணக்கூடியதாக இருந்தது. கூட்டத்தில் பெரும்பகுதியான நேரத்தை தமது அறிமுக உரைக்கே சைக்கிள் கட்சியினர் எடுத்துக்கொண்டிருந்தனர்.
மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக தமது பிரச்சார உரைகளையே வழங்கியிருந்தனர். இதனால் கலந்துகொண்ட சொர்ப்ப பொது மக்களும் கூட்டத்தில் இருந்து வெளியேறியிருந்தனர்.
சைக்கிள் கட்சியினரால் வேற்று நாட்டு அரசுகளுக்கு வழங்கப்பட்டு வரும் தீர்வு வரைவின் உள்ளடக்கம் தொடர்பான கேள்விகளுக்கு அவற்றை ஊடகங்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என பதிலளிக்கப்பட்டிருந்தது.
தமது வரைபில் ஒன்றுபட்ட பிரிக்கமுடியாத சிறிலங்காவுக்குள் தீர்வு பிரிவினையை சட்டவிரோதம் என தெரிவித்துவிட்டு டென்மார்க்கில் நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என கூறி மக்களை மயக்கியுள்ளார் சுகாஸ்.
அனைத்துலக தொடர்பகத்திற்கு நெருக்கமான ஒருவர் பொதுமகன் போன்று சைக்கிள் கட்சியினரை பாராட்டியிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
தாம் வாழும் நகரத்தில் டெனிஸ் மக்களிடம் தம்மை தலைகுனிய வைத்ததால் அந்த நகரத்தில் நீண்ட காலம் நன்மதிப்புடன் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் சைக்கிள் கட்சியினர் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்து வந்த சைக்கிள் கட்சியினர் இப்பொழுது ஜரோப்பிய நாடுகளின் அரசுகளையும் ஏமாற்ற தொடங்கியுள்ளனர். டென்மார்கில் நகரசபையை ஏமாற்ற முற்பட்டதற்கான சட்ட சிக்கல்களில் இருந்து தப்புவதற்காக கயேந்திரகுமார் உடனடியாக நோர்வேயில் இருந்து நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மற்றய ஜரோப்பிய நாடுகளிலும் சைக்கிள் கட்சியினர் அனைத்துலக தொடர்பகத்தின் உப அமைப்புக்கள் ஊடாக பொய்யான காரணங்களை கூறியே மண்டபங்களை பெற்று சமஸ்டி கூட்டங்களை ஒழுங்குசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பெல்யியத்தில் வரும் திங்கள்கிழமை தமிழ் பாடசாலை நடைபெறும் இடத்தில் சைக்கிள் கட்சியினர் சமஸ்டி கூட்டத்தை ஒழுங்குபடுத்தியுள்ளதாக பெல்யியத்தில் வாழும் முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர். இந்த மண்டப உரிமையாளருக்கும் நகரசபைக்கும் இந்தவிடயம் தெரிவிக்கப்படவுள்ளது.
தமிழீழ மக்களுக்கு வரலாற்று துரோகம் இழைக்க முற்பட்ட சைக்கிள் கட்சியினரை ஜரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் புறக்கணிக்க தொடங்கியுள்ளனர். கயேந்திரகுமார் ஓடியது போன்று மற்றய சைக்கிள் கட்சியின் உறுப்பினர்களும் ஜரோப்பிய மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்படுவார்கள் எனறே நம்பப்படுகின்றது. டென்மார்க்கில் இவர்களுக்கு எதிராக எடுக்கபடவிருக்கும் சட்டநடவடிக்கை எதிர்காலத்தில் இவர்கள் ஜரோப்பிய விசா எடுப்பதில் சிக்கலகளை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாரிஸ் நகரில் சைக்கிள் கட்சியினருக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் எடுக்கப்ட்டுவருதாக தெரியவருகின்றது. சைக்கிள் கட்சியனரின் புகைப்படங்கள் எரிக்கப்பட்டதை தொடர்ந்து துண்டுபிரசுர போராட்டங்களையும் தமிழ் தேசிய சுதந்திர செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
