தமிழீழமே தீர்வு! தனி ஈழத்துக்கே மக்களாணை!1977…… ..வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு அகவை ஐம்பது
தமிழீழமே தீர்வு! தனி ஈழத்துக்கே மக்களாணை!
பாரிஸ் நகரில் உறுதி பூண் ஒன்று கூடல்
காலம்: 15 மார்ச் 2026
இடம்: பிரகாசம் மண்டபம்,
Espace shine.
1 Rue du bois Colbert
94190 Villeneuve st Georges
France
தந்தை செல்வா தலைமையில் தமிழீழத் தனியரசுக்கான மக்களாட்சித் தீர்மானம் 1976 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. தந்தை செல்வா இனிமேல் ஈழத்தமிழர்கள் தமது கோரிக்கையாக சமஸ்டியை முன்வைக்க மாட்டார்கள் என்று திடமாக அறிவித்தார்.
1977 ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தில் இத் தீர்மானத்துக்கு மக்களாணை வழங்கப்பட்டது. இலக்கை வெல்ல இளைய தலைமுறையை அளப்பரிய தியாகங்கள் புரியத் தயாராகுமாறு வட்டுக்கோட்டைத் தீர்மானம் கோரியது.
அறப்போராக மறப்போர் எழுந்தது. முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களின் தற்கொடை தாங்கி, பல்லோப இலட்சம் மக்களின் தியாகங்களோடு பெருந்தலைவன் வழிநடத்தலில் தமிழர் வரலாற்றின் புதிய அத்தியாயம் ஈழத்தில் பிறந்தது.
புறநானூறு கண்ட தமிழர் நாகரித்தில் புதிய காலத்துத் தேசிய முன்னோடியாகத் தமிழீழம் தன்னை நிறுவிக்காட்டியது.
தமிழர் நாகரிகத்தின் விடியலுக்கான முன்னறிவிப்பாக தமிழீழ மெய்நடப்பு அரசு நிறுவப்பட்டது.
போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை!
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்!
நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்!!
ஒழுங்குகள்: தமிழ்நெட் (Tamilnet) +4792013141. . ஈழப்புரட்சி அமைப்பு.+447973239812… அனைத்து உலக மனித உரிமை சங்கம் பிரான்ஸ்
