டென்மார்க்கில் பில்லுண்ட் நகரசபையின் கலாச்சாரகுழுவின் பிரதிநிதியாக மாலதி தமிழ் கலைக்கூடத்தால் ஒரு பெண் முன்மொளியப்பட்டுள்ளார். அவர் தனது அறிமுகத்தில் தான் மாலதி தமிழ் கலைக்கூடத்தின் நிர்வாகசபை உறுப்பினர் எனவும் கலைக்கூடத்தின் கலாச்சாரநிகழ்வு மற்றும் ஒன்றுகூடல்களை ஒழங்குபடுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட பெண் தனது அறிமுகத்தில் தனது கற்கைகாலப்பகுதியில் ஒரு அரசசார்பற்ற நிறுவனத்தில் நிர்வாக சபை உறுப்பினராக இருந்ததாக குறிப்பட்டுள்ளார் அந்த அமைப்பு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதிவி செய்ததாகவும் குறிப்பாக ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளார், ஆனால் அந்த அமைப்பின் பெயரை எங்கும் குறிப்பிடவில்லை.
அந்த அரசசார்பற்ற அமைப்பை அவர் குறிப்பிடாமைக்கான காரணம் அந்த பெண் நிர்வாகசபை உறுப்பினராக இருந்தது கருணாகுழுவின் ஆதரவாளர்களால் தமிழர் புனர்வாழ்வு கழகத்திற்கு எதிராக ஆரம்பிக்கபட்ட அமைப்பு. ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழர் புனர்வாழ்வு கழகம் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட போது பல்வேறு இடையூறல்களை ஏற்படுத்தியிருந்தது. 2006 ஆம் ஆண்டு தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நிதிகள் டென்மார்க் அரசால் முடக்கப்பட்டமைக்கு காரணமானவர்களில் இந்த அமைப்பும் காரணமாக இருந்தது. குறிப்பிட்ட அமைப்பை ஆரம்பித்த நபரே இப்பொழுது பிள்ளையான் குழுவின் சர்வதேச தொடர்பாளராக இருக்கின்றார்.
பில்லுண்ட் நகர பகுதியில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் செயல்பாடுகளுக்கு குறிப்பிட்ட அமைப்பு இடையூறு செய்வதாக தமிழர் பனர்வாழ்வு கழகத்திடம் முறைப்பாடு செய்தவர் தான் இப்பொழுது மாலதி கலைக்கூடத்தின் நிர்வாகியாக அனைத்துலக தொடர்பகத்தால் நியமிக்கப்பட்டிருக்கின்றார். இவரது குடும்பத்திற்கும் கருணாகுழுவுடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இவரது தந்தைக்கான இணையத்தளத்தை பிள்ளையான்குழுவின் தற்போதய சர்வதேசதொடர்பாளரே இயக்கினார்.
அண்மையில் பில்லுண்ட் நகரசபைக்கு கலைக்கூடத்தின் ஒன்றுகூடல் என பொய் கூறி இலவசமாக மண்டபத்தை பெற்று சைக்கிள் கட்சியினரின் `ஒன்றுபட்ட சிறிலங்கா´ கூட்டத்தை நடாத்த முற்பட்டிருந்ததும் இந்த மாலதி கலைக்கூடத்தினரே.
தமிழீழ தேசிய தலைமையின் இருப்பை மறுதலித்து கேபியினால் இயக்கப்படும் அனைத்துலக தொடர்பகத்தின் உப அமைப்பான மாலதி தமிழ் கலைக்கூடத்தில் பிள்ளையான்/கருணாகுழுவும் இணைந்துள்ளது இப்பொழுது தெரியவந்துள்ளது.