Tamilvoice க்கு ஏதிரான அச்சுறுத்தலின் பின்னணியில் மாலதி கலைக்கூடம்

டென்மார்க்கில் கிறினிஸ்ரட் நகரில் இயங்கும் மாலதி கலைக்கூடத்தின் நிர்வாக முறைகேடுகளை நாம் அண்மையில் வெளியிட்டு இருந்தோம்.

அத்துடன் நகரசபைக்கு பொய்யான காரணத்தை கூறி இலவசமாக பெற்ற மண்டபத்தில் சைக்கிள் கட்சியினரின் சமஸ்டி கூட்டத்தை நடாத்த முற்பட்டமையை நாம் வெளியிட்டமையால் நகரசபை மாலதி கலைக்கூடத்தினருக்கு மண்டபத்தை கொடுக்க மறுத்திருந்தது.

தேசியதலைமையின் இருப்பை மறுதலித்து தமிழீழ விடுதலைப்புலிகளின் டென்மார்க் கிளை என்று இயங்கும் குழுவே மாலதி கலைக்கூடத்தையும் நடாத்தி வருகின்றது.
கடந்த 7ம் திகதி இந்த குழுவின் பெயரில் வெளியிடப்பட்ட அனாமதேய கடிதம் ஒன்றை சமூகவலைத்தளங்களில் காணக்கூடியதாக இருந்தது. கடிதத்தில் வெளியிட்டவரின் பெயர் எதுவும் இல்லை அனால் கடித்தத்தின் முடிவில் தேசிய தலைவரின் பெயரை பதிவிட்டிருந்தனர்.

குறிப்பிட்ட கடிதத்தில் தமது செயற்பாட்டாளர்களை மனஉளைச்சலுக்கு சிலர் உள்ளாக்குவதாகவும் தமது செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இன்று TamilVoiceஇன் தொடர்பு இலக்க whatsappற்கு தமது கடிதத்துடன் “ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு எமது நண்பரை கடிக்க வெளிக்கிட்டாய் இல்லா எனிப்பார் இயக்கத்தின் விளையாட்டை அறிக்கையோடு விடமாட்டோம் உன்னையும் அழிப்போம்” என ஒரு எச்சரிக்கையை அனுப்பியுள்ளனர். இந்த எச்சரிக்கையில் நேசன் பிரியன் என இரண்டு பெயர்கள் குறிபிடப்பட்டிருந்தது.

நேசன் எனப்படும் கலைநேசன் வேலும்மயிலும் என்பவர் விடுதலைப்புலிகள் என்ற பெயரில் டென்மார்கில் இயங்கும் இந்த குழுவின் பொறுப்பாளராக இருப்பதுடன் மேற்குறிப்பிட்ட கடிதத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதும் எமக்கு தெரியவந்துள்ளது. நேசனுடன் நாம் தொடர்புகொள்ள முயன்ற போது திருப்பி அழைப்பதாக கூறினார், ஆனால் தொடர்புகொள்ளவில்லை.

இதில் பிரியன் எனப்படும் ஜெயராகவன் அரியம் என்பவரே மாலதி கலைக்கூடங்களுக்கு பொறுப்பாக இருப்பதாக அறியமுடிகிறது. இவருடன் நாம் தொடர்புகொண்ட போது இது தொடர்பாக எம்முடன் கதைக்க விருப்பமில்லை என தொடர்பை துண்டித்துக்கொண்டார்.

டென்மார்க்கில் சட்டவிரோதமாக மக்கள் குடியிருப்புக்களில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் பிரியன், பில்லுண்ட் நகரில் மாலதி கலைக்கூட கிறின்ஸ்ரட் நிர்வாகி தாசனின் முகவரியிலேயே தனது மீன் வியாபாரம் நடைபெறும் என விளம்பரம் செய்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் பெயரில் டென்மார்கில் இயங்கும் இந்த குழுவால் நியமிக்கப்ட்ட கிறின்ஸ்ரட் மாலதி கலைக்கூட நிர்வாகி தாசன் எனப்படும் கலைதாசன் தியாகராஜா Tamilvoiceஇற்கு எதிரான அச்சுறுத்தலை இந்த குழுவின் ஊடாக அனுப்பியிருப்பதால் இவர்கள் மீது டென்மார்க் காவல்துறையில் முறைப்பாடு ஆதாரங்களுடன் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இவர்களுடன் இந்த குழுவின் அனைத்துலக பொறுப்பாளராக இருக்கும் மகேஸ் எனப்படும் மகேஸ்வரன் பொன்னம்பலத்தின் பெயரும் காவல்துறைக்கு வழங்கப்படும் முறைப்பாட்டில் சேர்த்துக்கொள்ளப்படும். இந்த குழுவினர் டென்மார்க்கில் உள்ள கருத்துரிமைக்கு எதிராக அச்சுறுத்தல் விடுவதற்கும் வன்முறையில் ஈடுபடுவதற்குமான முக்கிய பொறுப்பை மகேஸ் அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

Please reload

Please Wait