மாலதி கலைக்கூடத்தின் நிர்வாகிகளின் வீடுகள் முன்றலிலும் மாலதிகலைக்கூடத்தின் வகுப்புக்கள் நடைபெறும் டெனிஸ் பாடசாலைகளின் வளாகங்களிலும் மீன் விற்பனை செய்து வரும் டென்மார்க் ரிசிசி அல்லது டென்மார்க் கிளை என அழைக்கப்படும் கும்பலை சேர்ந்தவர்கள் டென்மார்க் சட்டத்தை ஏமாற்ற புதிய நிறுவன பெயரில் விளம்பரங்களை அனுப்பிவருவதாக தெரியவந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களிலேயே மூடப்பட்ட நிறுவனத்தின் பெயரிலேயே இந்த கும்பலை சேர்ந்தவர்கள் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்திருந்தனர். மூடப்பட்ட நிறுவனத்தின் பெயரில் மக்களின் வங்கி அட்டைகளில் 2025 ஆம் ஆண்டு பணம் பெற்றதற்கான ஆதாரம் எமக்கு கிடைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியத்தின் பெயரில் டென்மார்க்கில் இந்த கும்பல் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவருவதை சமூக ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் மக்கள் வெளிட்டுவருவதை காணக்கூடியதாகவும் உள்ளது.
தேசியதலைவரின் இருப்பை மறுதலித்து தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரனின் செயல்பாடுகளை குழப்பிவரும் இந்த கும்பலின் சட்டவிரோத மற்றும் சமூகவிரோத செயல்பாடுகளே தேசியதலைவரின் உறவினர்களை தேசியதலைவரின் இருப்பை மறுதலிக்க வேண்டிய நிலமைக்கு தள்ளியிருந்தமையை இப்பொழுது அறியக்கூடியதாக உள்ளது.
இந்த கும்பல் அண்மையில் தமிழீழவிடுதலைப்புலிகளின் பெயரில் தேசிய தலைவரின் பெயரையும் பாவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தனர். அத்துடன் TamilVoice Danmarkக்கும் மிரட்டலை WhatsApp ஊடாக அனுப்பியிருந்தனர். குறித்த விடயம் தொடர்பாக டென்மார்க் காவல் துறையினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் முறைப்பாட்டை பரிசீலித்து வருவதாலும் காவல்துறையினரின் விசாரனைகளுக்கு ஒத்துழைப்பதற்காகவும் மேலதிக தகவலை தற்பொழுது வெளியிடமுடியாது.
