மாந்தநேயப் பயணம் தொடர்கிறது மிதிவண்டியில்.

Home » homepage » மாந்தநேயப் பயணம் தொடர்கிறது மிதிவண்டியில்.

சிறீலங்கா அரசினால் இனப் பேரழிவுக்கு உட்படுத்தப்பட்ட தமிழினத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும், அனைத்துலக நாடுகளிடம் முறை கேட்டும் பிரித்தானியாவிலிருந்து திரு.சிவந்தன் அவர்கள் தொடங்கிய நடைபயணம் ஜெனீவாவில் நிறைவடைய, அங்கிருந்து திரு.ஜெகன், திருமதி.தேவகி குமார், திரு.வினோத் ஆகியோர்

தொடர்ச்சியாக பெல்ஜியத்திலுள்ள ஐரோப்பியஒன்றியம் வரை நடைபயணம் மேற்கொண்டு, கடந்த 27.06.2010 அன்று புறூசல் நகரில் ‘எழுவாய் தமிழா நெருப்பாய்’ என்னும் நடைபயண நிகழ்வு நிறைவடைய, அதன் தொடர்ச்சியாக பெல்ஜியம் – புறூசலிலிருந்து சேர்மனியின் பேர்லின் நகரம் நோக்கி, இன்று நண்பகல் (11.10.2010) 12.45 மணிக்கு

அகவணக்கத்தடன் தொடங்கிய நிகழ்வுகளை அடுத்து மிதிவண்டிப்பயணம் திரு.தேவன் குகதாசன்(28அகவை), திரு.அருணதாசன் சின்னத்துரை(22அகவை), சஞ்சீவன் சிவசுப்பிரமணியம் (18அகவை) ஆகியோரால் தொடங்கப்பட்டது.
இவர்களுடைய 1000 கி.மீற்றர் பயணத் தூரத்தில், குளிருடன் கூடிய காற்றையும் பொருட்படுத்தாது 76 கி.மீற்றர்களைக் கடந்து, இரவு 20.15 மணியளவில் டீழசபடழழn என்னும் இடத்தை வந்தடைந்துள்ளார்கள்;.

தொடர்ந்து பேர்லின் நோக்கிப் பயணிக்கும் வழியிலுள்ள முதன்மை நகரங்களில் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தவண்ணம் செல்லவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


%d bloggers like this: