நீதி கேட்டு மூன்றாவது நாளாகத் தொடரும் மிதிவண்டிப்பயணம்.

Home » homepage » நீதி கேட்டு மூன்றாவது நாளாகத் தொடரும் மிதிவண்டிப்பயணம்.

பேர்லின் நகரம் நோக்கி, பெல்ஜியம் – புறூசலில் இருந்து 11.10.2010 அன்று திரு.தேவன் குகதாசன், திரு.சின்னத்துரை அருணதாசன், செல்வன்.சஞ்சீவன் சிவசுப்பிரமணியம் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற மிதிவண்டிப்பயணம் இன்று மூன்றாவது நாளாக 102 கிலோமீற்றர்களைக் கடந்துLEVERKUSEN என்னும் இடத்தை வந்தடைந்துள்ளனர்.இவர்கள் சென்றடையவுள்ள 1000 கிலோமீற்றர் பயணத்தில் 302 கிலோமீற்றர் தூரத்தை மூன்று நாட்களில் காலநிலையின் சமச்சீரற்ற தன்மையையும் கவனத்தில் எடுக்காது உறுதியுடன் கடந்துள்ளார்கள். மிதிவண்டிப்பயணம் செல்கின்ற வழிகளிளெல்லாம் தமிழினப்படுகொலைகள் மற்றும் சிறிலங்காவிலுள்ள தமிழரின் உண்மை நிலை பற்றிய விபரங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வழங்கியவாறும் செல்கின்றனர்.BONN, KOLN வாழ் தமிழ்மக்கள் கலந்துகொண்டு உற்சாகப்படுத்தியிருந்தனர். மேலும் நாளை DUSSELDORF நகரமூடாக இவர்களின் பயணம் தொடரவுள்ளது என்பதுடன் இவர்கள் பேர்லினைச் சென்றடையும் நாளான 22.10.2010 அன்று பிற்பகல் 12.00 மணிக்கு கவனயீர்ப்பு நிகழ்வொன்றும் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


%d bloggers like this: