கட்டுரைகள் கட்டுரைகள் old

"தமிழீழ கோரிக்கையை கைவிட்ட கூட்டமைப்பிற்கு, நாடு கடந்த அரசு, பிரித்தானிய தமிழர் பேரவை ஆதரவு"-: ஊடகவியளார் இரா.துரைரட்ணம்.

தமிழீழ மக்களால் வழங்கப்பட்ட ஆணையை மதிக்காமல் அன்னிய சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் செயல்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்காக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் சுவிற்சலாத்தில் வாழும் மூத்த ஊடகவியளாளர் எனக்கூறிக்கொள்ளும் இரா. துரைரட்ணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் இருந்து ஒலிபரப்பப்படும் ரிஆர்ரி தமிழ் ஒலி வானொலியின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நாடுகடந்த தமிழீழ அரசை அமைக்க இருக்கும் குழுவின் இணைப்பாளர் உருத்துரகுமரன் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை என்பன நெருங்கிய தொடப்பில் இருப்பதாக தெரிவித்தார்.

அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்த கருத்துக்களால் பிபிசி செய்தி நிறுவனம் உட்பட பல அனைத்துலக ஊடகங்கள் தமிழர்கள் தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டுள்ளதால் தமிழர்களுக்கு இலங்கைத்தீவில் எதுவித பிரச்சனையும் இல்லை தனியே புலம் பெயர் தமிழர்கள் சிலரே தனிநாட்டு கோரிக்கையை கோரிவருவதாக தெரிவித்திருந்தனர். பிபிசியின் இந்த செய்திக்கு பிரித்தானிய தமிழர் பேரவையை சேர்ந்த சுரேன் மறுப்பறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

ஊடகவியளாளர் இரா துரைரட்ணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கான தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் சகல மற்றய புலம் பெயர் அமைப்புகளும் மகிந்தவின் நிகழ்ச்சி நிரலில் செயல்படுதாக குற்றம் சுமத்தினார். அத்துடன் புலம் பெயர் மற்றய தமிழ் அமைப்புகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பு வைப்பதை பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற அமைப்புகள் விரும்பவில்லை எனவும் கூறினார். பிரான்ஸ் தமிழ் அமைப்புகளின் கூட்டமைபை நேரடியாக மகிந்தவின் நிகழ்சி நிரலில் செயல்படுவதாக குற்றம் சுமத்திய துரைரட்ணம் பிற ஊடகவியளாளர்கள் மீது நிதி மோசடி செய்த கும்பல் போன்ற அனாகரிக பொய்யான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தார்.

அண்மைக்காலமாக தமிழ் தேசிய விடுதலையையும் தமிழ் மக்களையும் கேவலமான வார்தைகளால் விமர்சித்துவரும் இரா துரைரட்ணம் கிளிநொச்சி மற்றும் வடமராச்சி மக்கள் கடந்த தேர்தலில் ஒரு துண்டு பாணுக்காக வாக்களித்ததாகவும் கேவலப்படுத்தினார்.

கனடிய தமிழ் அமைப்பும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தொடர்பில் இருப்பதாக துரைரட்ணம் கூறிய போதும் அண்மையில் கனடிய அமைப்பின் ஒரு தனி நபரே அவ்வாறு இருப்பதாக அவ்வமைப்பு அறிவித்திருந்தனர்.

சுவிற்சலாந்தில் உள்ள எல்லா அமைப்பும் தமிழ் தேசிய கூட்டமைபையே ஆதரிப்பதாக தெரிவித்த துரைரட்டணம் சுவிற்சலாந்தில் இருந்து எந்த அமைப்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சித்து அறிக்கை விடாது எனவும் சூளுரைத்தார்.
தமிழீழ கோரிக்கையை கைவிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையுடன் இணைந்து எப்படி தமிழீழ அரசை அமைக்க முடியும்? நாடு கடந்த அரசை அமைக்க செயல்படும் குழுவின் இணைப்பாளர் உருத்திரகுமாரனும் நாடுகடந்த அரசை அமைக்க உருவாக்கப்பட்ட நோர்வே மற்றும் அஸ்ரேலிய செயற்குழுவும் துரைரட்ணத்தின் கருத்தை ஏற்றுக்கொள்கின்றார்களா? மறுதலிக்கின்றார்களா?

புலம் பெயர் தமிழீழமக்கள் தமிழீழ விடுதலை பேரணாவை எடுத்துரைத்து வரும் தமிழீழ மக்களின் சனநாயக அமைப்புகள் மீதும் அதன் செயல்பாட்டாளர்கள் மீதும் சிறிலங்கா அரசு கடுமையான அழுத்தங்களை பிரயோகித்துவருவதுடன் பொய்யான அமைப்புக்களின் பெயரில் தமிழ் தேசிய கூட்டமைப்பை அதரித்து அறிக்கைகளும் வெளியிட்டுவரும் இந்த நிலையில் துரைரட்ணத்தின் இந்த மலிந்த தேர்தல் பிரச்சார வசைமொழிகள் கண்டிக்கப்படவேண்டியவை.