செய்திகள்

வலிகாமத்தில் முதிய பெண்மணி கத்தியால் குத்திக்கொலை, புலிகள் இல்லாததை தற்போது உணர ஆரம்பித்துள்ள ஈழமக்கள்.

யாழ்பாணம் வலிகாமம் அளவெட்டி பகுதியில் திங்கட்கிழமை நள்ளிரவு வயோதிப பெண்மணி வதியும் வீட்டினுள் புகுந்த இனம்தெரியாத நபர்கள் அவரை கழுத்திலும் மார்பிலும் கூரிய பொருட்களினாள் குத்தி கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது கொல்லப்பட்டவர் 77 அகவையுடைய பொன்னுத்துரை பகவதி எனத்தெரியவருகிறது. இவரை செவ்வாய் காலை காணததால் இவரது அயலவர்கள் தேடி சென்றபோது இவர் இறந்து கிடந்ததாகவும் இவரது கொலைக்கான காரணம் திருட்டு எனவும் அறியமுடிகிறது.

யாழில் தற்போது இவ்வாறான திருட்டு சம்பவங்கள் மற்றும் கொலைகள் அதிகரித்து காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை யாழில் பெருமளவு வயோதிபர்கள் தனிமையில் வாழ்வதாகவும் அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் யுத்தம் காரணமாக அவர்களது பிரதேசத்தில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஒரு 77 வயது மூதாட்டி, வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்து வருபவரை, அவரின் இறுதிக்காலத்தில் பணத்திற்காக கொலை செய்யும் அளவிற்கு கேவலமாகி போய்விட்டது தமிழன் நிலைமை. கொள்ளை அடிப்பதென்றால் அடித்துக்கொண்டு போவதை விட்டு, விட்டு……. கத்தியால் குத்தி அநியாயமாக ஒரு உயிரை ஏன் பறிக்கின்றார்கள்? புலிகள் இல்லாததை தற்போது உணர ஆரம்பித்துள்ள ஈழமக்கள்.