செய்திகள்

டென்மார்க்கில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான பொதுக்கூட்டங்கள்.

டென்மார்க்கின் மூன்று நகரங்களில் ஏப்பல் 4ஆம், 5ஆம் நாட்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான பொதுக்கூட்டங்கள் டென்மார்க் தமிழர் பேரவையினால ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பன்னாட்டு மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் மார்ச் 15ஆம் நாள் வெளியிடப்பட்ட மீளமைக்கப்பட்ட அறிக்கை அறிமுகம் செய்யப்படவுள்ளதோடு, கருத்துப்பரிமாற்றமும் இடம்பெறவுள்ளது.

டென்மார்க்கின் Herning, Vejle மற்றும் Holbæk ஆகிய பிரதேசங்களில் பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்க செயற்குழு இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன்
காணொலி ஊடாக நேரடியாக உரையாற்றவுள்ளதோடு, மக்களின் கேள்விளுக்கு பதிலளிக்கவுள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான பன்னாட்டு மதியுரைக்குழு சார்பில் பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா, நாடுகடந்த தமிழீழ அரசாங்க நோர்வே செயற்குழுவின் இணைப்பாளர் கில்லறி லீயோ ஆகியோர் கருத்துரை வழங்கவுள்ளனர்.

பரந்துபட்ட மக்களின் பங்கேற்பினை வேண்டி நிற்கும் நாடுகடந்த தமிழீழ பற்றிய விளக்கத்தினைப் பெறவும் கருத்துக்களைப் பரிமாறவும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு டென்மார்க் தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

தமிழீழ மக்களின் அரசியல் வேணவாவினை வென்றெடுக்கும் நோக்கில், அனைத்துலக சட்ட மரபுகளுக்கு அமைவாக அமைக்கப்படவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்கள் எதிர்வரும் மே 2ஆம் நாள் புலம்பெயர் நாடுகளில் நடாத்தப்படவுள்ளன.

பொதுக்கூட்டங்கள் பற்றிய விபரங்கள்:

Herning
இடம்: Dansk Metal , Neksøvej 7A , 7400 Herning
காலம்: 04.04.2010 ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 மணி

Vejle
இடம்: Østerbrogade 43 , 7100 Vejle
காலம:; 05.04.2010 திங்கட்கிழமை, நண்பகல் 12 மணி

Holbæk

இடம்: Kulturkasernen , Kasernevej 43 , 4300 Holbæk

காலம் 05.04.2010 திங்கட்கிழமை, மாலை 6 மணி