செய்திகள்

இனி எங்க பார்வதி அம்மாவை திருப்பி வா என்று அழைத்தால் காரித்துப்பும் – இயக்குநர் சீமான்

நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் இன்று புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம் பொதுக்கூட்டமாக மாறியது.பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதை கண்டித்தும், நாம் தமிழர் இயக்க ஒருங்கினைப்பாளர் முத்துக்குமரன் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம்-பொதுக்கூட்டம் காலை 10 மணிக்கு துவங்கி மாலை 4.50க்கு முடிந்தது.

இந்த பொதுக்கூட்டத்தில் சீமான், ‘’என் தம்பி முத்துக்குமார் தியாகத்தை வென்றவன். அவன் நாட்டில் வாழ்ந்ததை விட காட்டிலும்,சிறையிலும் வாழ்ந்ததுதான் அதிகம்.அந்த தம்பி மீதுதான் ரத்த பொட்டலம் மருந்துகள் கடத்தியதாக வழக்கு போடப்பட்டிருக்கிறது. அதுவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடத்தியதற்கு இப்போதுதான் வழக்காம்.அவன் கடத்தவில்லை;கொடுத்தான். ஆனால் இந்திய நாடு தமிழனின் உயிரை அல்லவா எடுக்க ஆயுதம் கொடுத்தது. அடிபட்டு காயம்பட்ட தம்பிகள் என்னை தொடர்பு கொண்டு கை,கால்கள் இழ்ந்துவிட்டோம்.

மருந்துகள் இல்லாமல் அழுக்கொண்டிருக்கிறோம். முடிந்தால் மருந்துகள் வாங்கி அனுப்புங்கள்;இல்லையென்றால் கடித்து சாகிறோம் என்று சொன்னார்கள். அது என்னால் அந்த சமயத்தில் முடியவில்ல. என் தம்பி முத்துக்குமார் செய்திருக்கிறார்.மருந்து கிடைக்காத பல தம்பிகள் சயனைடு கடித்து செத்து மாண்டார்கள். அரிசியும் மருந்தும் வாங்க வந்த எனது ஈழத்து பிள்ளைகளை பிடித்தனர். அவர்களிடம் பிடிங்கிய பணம் எங்கே?2016ம் ஆண்டுதான் நமது இழக்காக இருந்தது. ஆனால் இப்போதும் கொடுக்கப்படும் நெருக்கடி.

அதற்கு முன்பே நுழைய வாய்ப்பு கொடுக்கிறது.தமிழகத்தில் ஒரே ஒரு வீரன் இருந்தான் வீரப்பன் என்று. அவனையும் கொன்றுவிட்டீர்களே என்று அண்ணன் பிரபாகரன் கேட்டார்.வீரப்பனை விசம் வைத்து கொன்று அதன்பிறகு சுட்டுக்கொன்றதாக மெடல் வாங்கிய போலீஸ் தமிழ்நாடு போலீஸ்.தமிழனுடை பண்பாட்டு மரபுகளை வீரப்பன் மதித்திருந்தான். மது,மாது,சூது,புகை என்று அவன் எதையும் நாடியதில்லை. அப்படி இருந்ததால்தான் நாகப்பாவை கடத்தியவன் நடிகையை கடத்தவில்லை.ஒரு தமிழன் எந்த ஒரு சிங்களப்பெண்ணின் தாவணியை தொட்டதுண்டா. ஆனால் அவன் இறந்த ஒரு தமிழச்சியை வன்புணர்ச்சி செய்தானே யாராவது கேட்டதுண்டா?’’என்று ஆவேசமாக பேசினார்.

பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதை கண்டித்தும், நாம் தமிழர் இயக்க ஒருங்கினைப்பாளர் முத்துக்குமரன் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் இன்று காலை 10 மணிக்கு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எதிரில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் துவங்கியது.பின்னர் பொதுக்கூட்டமாக மாறியது இந்த ஆர்ப்பாட்டம்.

பொதுக்கூட்டத்தில் சீமான்,’’இனி எங்க அம்மாவை திருப்பி வா என்று அழைத்தால் காரித்துப்பும். வருமா என்றுகூட தெரியவில்லை. இப்போது நடந்த கொடுமை அவருக்கு தெரியாது.ஏனென்றால் அவருக்கு நினைவில்லை. நினைவு இருந்திருந்தால் அவர் இந்த தேசமே வந்திருக்கமாட்டார். அய்யா(பிரபாகரன் தந்தை) செத்தது கூட இன்னும் அம்மாவுக்கு தெரியாமல் இருக்கிறது.அப்படி நினைவில்லாதவரைத்தான் இந்த தேசம் திருப்பி அனுப்பி இருக்கிறது. ப.சிதம்பரத்திற்கு தெரியாமல் அம்மா திருப்பி அனுப்பி வைக்கப்படவில்லை. அவர்தானே விசா கொடுக்க அனுமதித்தார். அப்புறம் ஏன் திருப்பி அனுப்பினார்.ங்கப்பூர்,மலேசியா என் தேசம் . என் இன மக்கள் வாழும் தேசம். அதனால்தான் அம்மாவை அரவணைத்து பார்க்கிறார்கள்.இந்தியா மோசம். அதனால்தான் திருப்பி அனுப்பினார்கள்’’என்று பேசினார்.

பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதை கண்டித்தும், நாம் தமிழர் இயக்க ஒருங்கினைப்பாளர் முத்துக்குமரன் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் இன்று காலை 10 மணிக்கு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எதிரில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் துவங்கியது.பின்னர் பொதுக்கூட்டமாக மாறியது இந்த ஆர்ப்பாட்டம்.

பொதுக்கூட்டத்தில் சீமான்,’’இனி எந்த காலத்திலும் சிதம்பரம் சிவகங்கையை ஜெயிக்க முடியாது. நான் இருக்கும் வரை சிதம்பரம் சிவகங்கையை மறந்துவிட வேண்டியதுதான்.கனடாவில் என்னை திருப்பி அனுப்பும் போது ராஜீவ்காந்தி கொலையை நியாயப்படுத்துகிறாயா என்று சீக்கியன் கேட்டான்.நியாயப்படுத்தவில்லை அமைதிப்படை என்ற பெயரில் என் உறவுகளை சீரழிக்க அனுப்பியவர் என்றுதான் கூறுகிறேன் என்று பதிலளித்துவிட்டு, இந்திராகாந்தி கொலையை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா என்று சீக்கியனிடம் கேட்டேன்.அமைதியாகிவிட்டான் அந்த சீக்கியன். இது எல்லாமே ப.சிதம்பரத்திற்கு தெரியாமலா நடந்தது. காங்கிரஸ் கட்சியை அம்பலத்துவதே என் நோக்கமும் அதுவே தமிழின விடுதலையாகும். என்னை சிறையில் அடைத்தால் கைதிகள் எல்லோரையும் நாம் தமிழர்கள் ஆக்கிவிடுவேன். இன்னும் 2 ஆண்டுகளில் தமிழர்கள் அனைவரையும் நாம் தமிழர்கள் ஆக்குவோம்’’என்று பேசினார்.

பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதை கண்டித்தும், நாம் தமிழர் இயக்க ஒருங்கினைப்பாளர் முத்துக்குமரன் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் இன்று காலை 10 மணிக்கு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எதிரில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் துவங்கியது.பின்னர் பொதுக்கூட்டமாக மாறியது இந்த ஆர்ப்பாட்டம்.

பொதுக்கூட்டத்தில் சீமான், ‘’ப.சிதம்பரம் மூஞ்சியில் சீக்கியர்கள் செறுப்பால் அடித்த போதும் கேட்க நாதியில்லை. தமிழக மீனவர்கள் சிங்களவர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டபோதும் கேட்க நாதியில்லை. காரணம் இவர்கள் தமிழர்கள் என்பதால். பிரபாகரன் பிரபாகரன் என்று தம்பட்ட அடித்துக்கொண்டீர்களே. அவனை பெற்ற தாயையே திருப்பி அனுப்பினோமே. உங்களால் என்ன செய்ய முடிந்தது என்று கேள்வி கேட்கிறார்கள்.எவனிடம் அடிமைப்படக்கூடாது என்று அடிமை விலங்கை உடைக்க பிரபாகரன் போராடினானோ அவனிடமே அவர் அப்பா சிறைப்பட்டு இறந்துபோனார்.தற்போது பார்வதி அம்மாள் இந்தியா வந்தது தெரியாது என்று கூறுகிறார்களே… ராஜபக்சே மகன்கள் வருவது மட்டும் எப்படி தெரிந்தது.அவர்களுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டது எப்படி?பார்வதி அம்மாள் வந்த போது சென்னை விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம், மறியல் நடந்துவிடக்கூடாது என்பதில் பாதுகாப்பு இருந்தது எப்படி?எந்த இயக்கமும் அங்கு வரவில்லை. நாம் தமிழர் இயக்கம் மட்டுமே அங்கு சென்றது.இனி என்னை கைது செய்ய முடியாது. ஏனென்றால்.. நான் தனி நபர் இல்லை. நான் தனி இயக்கம். அதற்காகத்தான் கட்சியில் உள்ள தம்பிகளை பிடித்து உள்ளே போட துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.அந்த வகையில்தான் முத்துக்குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார்’’என்று ஆவேசமாக பேசினார்.

பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதை கண்டித்தும், நாம் தமிழர் இயக்க முத்துக்குமரன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் புதுக்கோட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தற்கு வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில்,இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் எதுக்கென்றால் எங்களின் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனின் அம்மாவும், எங்களின் தாயாருமான பார்வதி அம்மாள் அவர்களை இந்த அரசுகள் திருப்பி அனுப்பப்பட்டதை கண்டித்தும், எங்கள் இயக்கத் தோழர் முத்துக்குமரன் மீது 3 வருடத்திற்கு முன் முடிந்து போன வழக்கை மீண்டும் தூசி தட்டி எடுத்து கைது செய்ததை கண்டித்தும் நடத்தப்படுகிறது. மே 18ஆம் தேதி நாம் தமிழர் மாநாடு நடத்தப்பட உள்ளது. அந்த மாநாட்டை முடக்கும் விதமாக எங்கள் தோழர் முத்துக்குமரன் கைது செய்யப்பட்டுள்ளார்.மே 18ஆம் தேதி எவ்வளவு அடக்கு முறை வந்தாலும் திட்டமிட்டப்படி மாநாட்டை நடத்தியே தீருவோம். மாநாட்டில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதை இப்போது என்னால் சொல்ல முடியாது.

எங்கள் இயக்கத் தோழர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வந்தாலும் அவர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள். அவர்களுக்கு என்ன பாதுகாப்பு என்று கேட்கலாம். இயக்கத்தில் உள்ள 75 சதவீத பேர் வழக்கறிஞர்களாக உள்ளனர். அதனால் இயக்கத்தில் உள்ளவர்களுக்கு சட்டப்படி பாதுகாப்பு கொடுப்போம்.எந்தப் பிரச்சனை வந்தாலும் சட்டப்படி கையாள எங்கள் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். உடனடியாக மத்திய மாநில அரசுகள் முத்துக்குமரனை விடுதலை செய்ய வேண்டும். எங்களின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைப்பெற்றுக்கொண்டே இருக்கும் என்றார்.