அண்மைய நாட்களில் இந்திய ஊடகங்களில் அதிரடி பிரமுகராக காட்டப்படும் வேலுப்பிள்ளை மனோகரன் குமுதம் ரிப்போட்டருக்கு வழங்கிய அதிரடி பேட்டி.
தமிழீழ தேசியத் தலைவராகப் போற்றப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரனை நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அவரது அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரனை? ‘பிரபாகரனின் அண்ணனாக வாழ்வது ஒரு யாகம்!’ என்ற உறுதிப்பாட்டுடன் இத்தனை காலமும் இருந்த இடம் தெரியாமல் வாழ்ந்து வந்தவர் வேலுப்பிள்ளை மனோகரன். தற்போது டென்மார்க் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், அந்த நாட்டில் இருந்து செயல்படும் ‘அலைகள்’ இணையதளத்தின் 10-வது ஆண்டுவிழாவில் முதன்முதலாக மேடையேறியதுடன், அலைகள் இணையதளத்துக்கு நீண்டதொரு பேட்டியும் அளித்திருந்தார். வேலுப்பிள்ளை மனோகரனிடம் பேட்டி பெறும் முதல் தமிழக ஊடகமாக ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் நாம் பேட்டி காண முயன்றோம். சி.செ.துரை என்பவர் உதவியுடன் அதில் வெற்றியும் கண்டோம். இனி நமது கேள்விகளும், அதற்கு வேலுப்பிள்ளை மனோகரன் அளித்த பதில்களும்…. டென்மார்க் நாட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? உங்கள் குடும்பம், பிள்ளைகள் பற்றிச் சொல்ல முடியுமா? ‘‘நான் ஈழத்தில் வாழ்ந்தபோது சரக்குக் கப்பலில் மாலுமியாக (போசன்) பணி புரிந்தேன். உலகின் பல நாடுகளுக்கும் எமது கப்பல் போகும். இப்போது டென்மார்க்கில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறேன். தமிழகத்தில் சில காலம் வாழ்ந்தபோது கோழி வளர்ப்பில் ஈடுபட்ட அனுபவமும் உண்டு. இப்போது மனைவி மற்றும் இரு மகன்களுடன் டென்மார்க்கில் உள்ள வைலை என்ற அமைதியான நகரில் எளிமையாக வாழ்ந்து வருகிறேன்.’’ மருத்துவத்திற்காக மலேசியாவில் இருந்து முறையான விசா பெற்று தமிழகம் வந்த உங்கள் தாயார் பார்வதி அம்மாள், திருப்பி அனுப்பப் பட்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ‘‘ ‘அலைகள்’ பத்தாண்டு விழாவிற்கு நான் தலைமை தாங்கப் போனபோதுதான், தாயார் திருப்பியனுப்பப்பட்ட செய்தி எனக்குக் கிடைத்தது. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. விழாவிற்குப் போகாமல் இருந்து விடலாமா என்று கூட நினைத்தேன். அந்த நேரம் மலேசியா அரசு, தாயாருக்கு ஒரு மாத விசா நீட்டித்து வழங்கிவிட் டது என்ற செய்தி கிடைத்ததும் ஓரளவு ஆறுதலடைந்தேன். விசாவை தவறுதலாக வழங்குவதும் திருப்பி அனுப்புவதும் சாதாரண நிலையில் உள்ள ஒருவருக்குப் பொருந்தலாம். ஆனால், எனது தாயாரின் நிலையை எண்ணிப் பாரு ங்கள். தமது எதிரிக்குக்கூட இந்த அவல நிலை வருவதை யாரும் விரும்ப மாட்டார்கள். இதைவிட என்ன சொல்ல..’’ தங்கள் தாயார் பார்வதி அம்மாள் பற்றிய தகவல்களை தமிழகத் தலைவர்கள் யாராவது உங்களிடம் பகிர்ந்து கொண்டார்களா? ‘‘இல்லை! நான் எனது தம்பியின் பெயரைப் பயன்படுத்தி வாழ்வில் எதையும் செய்தது கிடையாது. அப்படியான செயல்களை தம்பி விரும்பவும் மாட்டார். இதனால் அரசியல் தலைவர்கள் யாரையும் நான் சந்தித்ததில்லை. ஆனால், தமிழகத்தில் வாழ்ந்த காலம்தொட்டு பழ.நெடுமாறன் எங்கள் குடும்ப நண்பராகவே பழகி வந்தார். அவ ருடன் மட்டுமே எனக்குத் தொடர்புண்டு. எனது தாயார் விடயம் தொடர்பாக அவர் பகிரங்கமாக கருத்துரைத்து வருகிறார். எனது தாயாரைத் தங்கள் தாய்போல பராமரிக்க தமிழக மக்கள் தயங்கமாட்டார்கள். அவர்களுக்கும் எமக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. மற்றபடி என் தாயார் பற்றிய செய்திகளைப் பத்திரிகைகளில் படித்துத்தான் தெரிந்து கொண்டேன்.’’ ஈழத்தில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது உங்களது தந்தை, தம்பி பிரபாகரன் ஆகியோர் உங்களிடம் ஏதாவது பேசினார்களா? அந்த போர்ச் சூழல் நிலவரம் குறித்து ஏதாவது தெரிவித்தார்களா? ‘‘பிரபாகரன் அவரது வேலைப்பளு காரணமாக தொலைபேசியில் அதிகமாக என்னிடம் தொடர்புகொண்டது கிடையாது. அப்படியே பேசினாலும் குடும்ப விடயங்களைப் பற்றி மட்டும
Du skal logge ind for at skrive en kommentar.